இரா. அறவேந்தன்

இரா. அறவேந்தன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் இலக்கியம் பட்டத்திலும், புதுவை பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களிலும் முதன்மை இடம் பெற்றவர். சிங்கள மரபிலக்கணத்துடன் தமிழ் மரபிலக்கணத்தை ஒப்பிட்டு ஆராய்ந்த முதலாமவர் என்ற சிறப்புடன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஒன்பது நூல்களை எழுதியிருப்பதுடன் ஒன்பது நூல்களுக்குப் பதிப்பாசிரியராகவும் இருந்திருக்கிறார். இவர் எழுதிய "தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறு வாசிப்பும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. சாகித்திய அகாடமியின் (தமிழ்) பொதுக்குழு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். [1] ஒவ்வோர் ஆண்டும் முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குட்பட்ட இந்திய இளம் அறிஞர்களுக்கு வழங்கப்படும் இளம் அறிஞர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "திண்ணை: சாகித்திய அகாடமியின் புதிய உறுப்பினர்கள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/literature/972293-new-members-of-sahitya-akademi.html. பார்த்த நாள்: 31 January 2025. 
  2. "குடியரசுத் தலைவர் விருதுகள் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-14. Retrieved 2025-01-31.

வெளி இணைப்பு

முனைவர் இரா. அறவேந்தனின் வலைப்பூ

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya