இரா. பிரியா
இரா. பிரியா அல்லது பிரியா ராஜன் (R. Priya / Priya Rajan) (பி. 1993/1994) என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு அரசியலரும் தற்போதைய பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைவரும் ஆவார்.[1] தொடக்க வாழ்க்கைவடசென்னை வாசியான இவர், ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வணிகவியல் பட்டம் பெற்றவர்.[2] அரசியல்2022 உள்ளாட்சித் தேர்தல்பிரியா, பிப்ரவரி 2022-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு. வி. க. நகரிலுள்ள 74-ஆவது கோட்டத்தில் வென்றார் . சென்னை மாநகராட்சித் தலைவர் பதவியில் (2022-)பிரியா சென்னை மாநகராட்சி தலைவரான முதல் இளையவரும், பட்டியலினப் பெண்ணும் ஆவார், தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோருக்குப் பின் மூன்றாவது பெண் மாநகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[3][4][5] சென்னையின் தண்ணீர் வடிகால் சிக்கலைத் தீர்ப்பது தன் முன்னுரிமைகளுள் ஒன்று என்பதாக பிரியா கூறியுள்ளார்.[2] குடும்பம்பிரியா, 1989, 1996 ஆம் ஆண்டுகளில் பெரம்பூர் தொகுதியில் தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த செங்கை சிவம் என்பாரின் பேத்தியாவார். பிரியாவின் தந்தை இராஜன் வட சென்னையின் திமுக பகுதிப் பொறுப்பாளராக உள்ளார்.[6] இவரின் கணவர் கே. இராஜா பொறியியல் பட்டதாரி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்.[7] திரு. வி. க. நகரின் திமுக பகுதிச் செயலாளராக உள்ளார். இவ்விணையருக்கு ஒரு மகள் உள்ளார்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia