இருதயநோய்இருதயநோய் என்பது, இருதயத்தின் பலவித நோய்களைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகும். அந்நோய்களுள், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோயே (Coronary Artery Disease - சிஏடி CAD) மிகவும் பொதுவானதாகும். இருதயத்தில் உள்ள இரத்த நாடிகள் அடைபடுவதாலோ சுருங்குவதாலோ சிஏடி (CAD) ஏற்படுகின்றது. அத்தறுவாயில் இருதய தசைகளுக்கு ஆக்சிசன், செறிவான இரத்த ஓட்டம் கிடைப்பது தடைபடுகிறது. இதன் விளைவாக, மார்பு வலி அல்லது மாரடைப்பு ஏற்படக் கூடும்.[1] ஆபத்துக் காரணிகள்வயதுவயது அதிகரிக்க அதிகரிக்க இருதயநோய் ஏற்படக் கூடிய ஆபத்தும் அதிகரிக்கிறது. பாலினம்
குடிவழிநெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் - பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது குழந்தைகள் - 55 வயதுக்கு முன்னரோ, பெண் உறவினர்களைப் பொறுத்தவரை மாதவிடாய் சுழற்சி நிற்பதற்கு முன்னரோ இருதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இருதயநோய் ஏற்படுவதற்கான ஆபத்து கூடுகிறது. இனம்தொல்குடிகள், ஆப்பிரிக்க, ஆசிய குடிவழியினருக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் உண்டாகக் கூடிய வாய்ப்பு கூடுதல் என்பதால், அவர்களுக்கு மற்ற மக்களை விட இருதய நோய் ஏற்படும் தீவாய்ப்பு அதிகம். தவிர்த்து மாற்றியமைக்கக் கூடிய ஆபத்துக் காரணிகள்
References
|
Portal di Ensiklopedia Dunia