இருத்தலியல்இருத்தலியல் (Existentialism) என்பது மனித இருப்பு பிரச்சினையை ஆராயும் தத்துவ விசாரணையின் ஒரு வடிவமாகும்.[1][2] இருத்தலியல் தத்துவவாதிகள் மனித இருப்பின் பொருள், நோக்கம் மற்றும் மதிப்பு தொடர்பான கேள்விகளை ஆராய்கின்றனர். இருத்தலியல் சிந்தனையில் உள்ள பொதுவான கருத்துக்கள் இருத்தலியல் நெருக்கடி, அச்சம் மற்றும் அபத்தமான உலகத்தை எதிர்கொள்ளும் கவலை மற்றும் சுதந்திரம், அத்துடன் நம்பகத்தன்மை, தைரியம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை அடங்கும்.[3] இருத்தலியல் பல 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய தத்துவஞானிகளுடன் தொடர்புடையது, அவர்கள் சிந்தனையில் ஆழமான வேறுபாடுகள் இருந்தபோதிலும், மனிதர்கள் பற்றிய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.[4][5][6] இருத்தலியல்வாதத்துடன் தொடர்புடைய ஆரம்பகால நபர்களில், தத்துவவாதிகளான சோரன் கீர்கேகார்ட், பிரெட்ரிக் நீட்சே மற்றும் நாவலாசிரியர் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் பகுத்தறிவுவாதத்தை விமர்சித்தனர். மேலும், இவர்கள் இருத்தலியல் என்பதன் பொருளில் உள்ள சிக்கலின் மேல் அக்கறை கொண்டவர்கள். 20 ஆம் நூற்றாண்டில், முக்கிய இருத்தலியல் சிந்தனையாளர்களில் ஜீன்-பால் சார்த்ரே, ஆல்பர்ட் காமுஸ், மார்ட்டின் ஹைடெக்கர், சிமோன் டி பியூவோர், கார்ல் ஜாஸ்பர்ஸ், கேப்ரியல் மார்செல் மற்றும் பால் டில்லிச் ஆகியோர் அடங்குவர். பல இருத்தலியல்வாதிகள் மரபு வழிமுறையான கருத்தியல்கள் அல்லது கல்வித் தத்துவங்கள், நடை மற்றும் உள்ளடக்கம், மிகவும் சுருக்கமானதாகவும் உறுதியான மனித அனுபவத்திலிருந்து அப்பாற்பட்டு இருந்ததாகவும் கருதுகின்றனர்.[7][8] இருத்தலியல் சிந்தனையில் முதன்மையான நற்பண்பு நம்பகத்தன்மை ஆகும்.[9] இருத்தலியல் தத்துவம், நாடகம், கலை, இலக்கியம் மற்றும் உளவியல் உட்பட தத்துவத்திற்கு வெளியே பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.[10] இருத்தலியல் தத்துவம் பலவிதமான முன்னோக்குகளை உள்ளடக்கியது. ஆனால், அது சில அடிப்படைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறது. இவற்றில், இருத்தலியல்வாதத்தின் ஒரு மையக் கோட்பாடு, தனிப்பட்ட சுதந்திரம், தனிப்பட்ட பொறுப்பு மற்றும் வேண்டுமென்றே தேர்வு ஆகியவை சுய-கண்டுபிடிப்பு மற்றும் வாழ்க்கையின் பொருளைத் தீர்மானிப்பதற்கு இன்றியமையாததாகும்.[11]
வரலாறுஇருத்தலியல் என்பது நீண்ட காலமாக ஐரோப்பிய மத சிந்தனையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். வில்லியம் பாரெட்டு இரண்டு குறிப்பிட்ட உதாரணங்களாக பிளேஸ் பாஸ்கல் மற்றும் சோரன் கீர்கேகார்ட் ஆகியோரை அடையாளம் காட்டுகிறார்.[12] ஜீன் வால் வில்லியம் சேக்சுபியரின் இளவரசர் ஹேம்லெட்டின் ("இருக்க வேண்டும், அல்லது இருக்கக்கூடாது"), ஜூல்ஸ் லெகியர், தாமஸ் கார்லைல் மற்றும் வில்லியம் ஜேம்ஸ் ஆகியோரையும் இருத்தலியல்வாதிகளாக அடையாளம் காட்டுகின்றனர்.[13] வாலின் கூற்றுப்படி, "பிளாட்டோ, டெஸ்கார்ட்ஸ் மற்றும் கான்ட் போன்ற மிகப் பெரிய தத்துவங்களின் தோற்றம் இருத்தலியல் பிரதிபலிப்பில் காணப்படுகின்றன."[14] தோற்றங்கள்இருத்தலியல் எனும் வரையறை பிரெஞ்சு தத்துவவாதியான காப்பிரியல் மார்செல்லால் 1940 ஆம் ஆண்டுகளின் மத்தியில் கோர்க்கப்பட்டதாகக் காணப்படுகிறது[15][16][17] மேலும் ஜீன் பால் சார்த்தால், அக்டோபர் 29, 1945 இல் பாரீசிலுள்ள கிளப் மெயிண்டெனண்ட் விரிவுரையில் தனது சொந்த இருத்தலியல் நிலைப்பாட்டை விவாதித்ததன் காரணமாக ஒரு இருத்தலியல்வாதியகாகக் கருதப்படுகிறார். விரிவுரையானது லா'எக்சிஸ்டென்ஷியலிஸ்மே எஸ்ட் அன் ஹ்யூமனிஸ்மே என பதிப்பிக்கப்பட்டது, ஒரு சிறு புத்தகமாக இருத்தலியல் சிந்தனையை அதிகம் பிரபலப்படுத்தச் செய்தது.[18] ஈரானிய இசுலாமிய தத்துவஞானி முல்லா சத்ராவின் (c. 1571-1635) இருத்தலியல்வாதத்திற்கான முன்னோடிகளை அடையாளம் காணலாம், அவர் "இருப்பு சாரத்திற்கு முந்தையது" என்று கூறுவார், இஸ்ஃபஹான் பள்ளியின் கொள்கை விளக்கக்காட்சியாக மாறுகிறார். கடவுள் தன்மை என்பது "உயிருடன் இருப்பதுவும் செயல்படுநிலையில் இருப்பதுவும்" என்றும் பொருள்படுகிறது பத்தொன்பதாம் நூற்றாண்டு![]() 1836 ஆம் ஆண்டிற்கு முந்தையதில் தனது நண்பர் பீட்டர் வில்ஹெம் லுண்ட்டிற்கு எழுதிய கடிதத்தில், டானிஷ் தத்துவவாதி சோரேன் கீகெர்கார்ட் தனது இருத்தலியல் ரீதியிலான உணர்ச்சிகரமான வரிகளில் ஒன்றை எழுதினார். அதில், அவர் தனக்குப் பொருந்திய ஒரு உண்மையை விவரிக்கிறார்;
கீர்கேகார்ட்டின் துவக்கக் கால சிந்தனைகள் அவரது செழிப்பான தத்துவ மற்றும் இறையியல் படைப்புக்களில் அமைக்கப்பட்டிருக்கும், அவற்றில் பல பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் இருத்தலியலின் நவீன அடித்தளத்தை அமைக்கும்.[20][21] கீர்கேகார்ட்டும் நீட்சேவும்சோரேன் கீர்கேகார்ட் மற்றும் பிரெடெரிக் நீட்ஷே ஆகியோர் இருத்தலியல் இயக்கத்தின் அடிப்படையாகக் கருதப்பட்ட முதலிரண்டு தத்துவவாதிகளாவர். இருவரும் "இருத்தலியல்" எனும் வரையறையை பயன்படுத்தியதில்லை. மேலும், அவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இருத்தலியலை ஆதரித்திருப்பார்களா என்பது தெளிவற்றுள்ளது. அவர்கள் கணிதம் மற்றும் அறிவியலின் பாரபட்சமற்ற உண்மைகளைக் காட்டிலும் உள்ளுணர்வு சார்ந்த மனித அனுபவத்தில் கவனம் குவித்தனர். பாஸ்கலைப் போல், அவர்கள் மக்களின் வாழ்க்கையின் தெளிவான பொருளற்றதன்மை வெளிப்படுத்தப்பெறாத போராட்டமும் அலுப்பிலிருந்து தப்பிக்க திசை திருப்பலை பயன்படுத்துவதையும் ஆர்வம் கொண்டிருந்தனர். பாஸ்கலைப் போலின்றி, கீர்க்கேகார்ட் மற்றும் நீட்சேவும் சுதந்திரமான தேர்வுகளின் பங்கினை கவனத்தில் கொண்டனர். குறிப்பாக அடிப்படை மதிப்பீடுகள் மற்றும் நம்பகத்தன்மை பற்றி, மற்றும் எப்படி அத்தகைய தேர்வுகள் தேர்வு செய்பவரின் இயல்பு மற்றும் அடையாளத்தை மாற்றுகிறது என்பதில்.[22][23] கீர்கேகார்ட்டின் நைட் ஆஃப் பெஃயித் மற்றும் நீட்ஷேவின் உபெர்மென்ஷ் ஆகியவை இவர்களது இருத்தலின் இயல்பை விவரிக்கும் முன் மாதிரிகள் ஆகும். கீர்கேகார்ட் மற்றும் நீட்ஷே இதர அறிவுத்திறன் வாய்ந்த இயக்கங்களுக்கு முன்னோடிகளும் ஆவர். அதில் பின் நவீனத்துவம், நிகிலிசம் மற்றும் பல்வேறு உளவியல் பிரிவுகள் அடங்கியுள்ளன. மேற்கோள்கள்
மேற்குறிப்புகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia