இரும்பை, விழுப்புரம்
இரும்பை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் இரும்பை ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 63.32 மீ. உயரத்தில், (12°00′24″N 79°47′14″E / 12.0068°N 79.7873°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரும்பை அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இரும்பை ஊரின் மொத்த மக்கள்தொகை 5,830 பேர் ஆகும். இதில் 2,921 பேர் ஆண்கள் மற்றும் 2,909 பேர் பெண்கள் ஆவர்.[5] சமயம்இந்துக் கோயில்கள்மகாகாளேசுவரர் கோயில்[6] என்ற சிவன் கோயில் ஒன்று இரும்பையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற வர்ணமுத்துமாரியம்மன் கோயில்[7] என்ற அம்மன் கோயில் ஒன்றும் இரும்பை பகுதியில் அமைந்துள்ளது. அரசியல்இரும்பை பகுதியானது, வானூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, விழுப்புரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia