இரேச்சல் கோரீ
இரேச்சல் கோரீ (Rachel Corrie) (ஏப்பிரல் 10, 1979 – மார்ச்சு 16, 2003) ஓர் அமெரிக்க அமைதிக்காக உரிமைப்போராட்டம் நடத்திய ஆர்வலர்[1]; இவர் அனைத்துலக ஒற்றுமை இயக்கம் (International Solidarity Movement) என்னும் அமைதிசார் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அமெரிக்காவின் வடமேற்கே அமைந்த வாசிங்டன் மாநிலத்தில் உள்ள ஒலிம்பியா என்னும் ஊரில் பிறந்த இவர் இசுரேலில் காசா நிலப்பகுதியில் இசுரேலியப் தற்காப்புப் படையினர் பாலத்தீன மக்களின் வீடுகளை இடித்துத்தள்ளும் நடவடிக்கையை எதிர்க்கும் முகமாக அங்கிருந்த அனைத்துலக ஒற்றுமை இயக்கத்தினருடன் சேர்ந்து இயங்கிய பொழுது, அங்கே இடித்துத் தள்ளிக்கொண்டிருந்த அரண்காப்பு இடிப்புந்தின் கீழ் நசுக்கப்பட்டு இறந்தார். அப்பொழுது இவருக்கு அகவை 23. இவர் இடிப்புந்தின் கீழ் நசுக்கப்பட்டு இறந்ததை ஓர் தன்னேர்ச்சி (எதிர்பாரத நேர்ச்சி) என்று இசுரேலிய அறமன்ற நடுவர்கள் தீர்ப்பளித்தனர்)[2]. அண்மையில் கோரீயின் குடும்பத்துக்கு இழப்பீடு தரவும் இசுரேல் நடுவர்கள் மறுத்துள்ளனர்[3] மேலும் படிக்க
அடிக்குறிப்புகளும் மேற்கோளும்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia