இரேச்சல் வெப்சுட்டர்இரேச்சல் வெப்சுட்டர் (Rachel Webster) (பிறப்பு: 3 ஜூலை 1951) ஓர் ஆத்திரேலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் ஆத்திரேலியாவில் இயற்பியலில் பெர்ராசிரியர் ஆகிய இரண்டாவது பெண்மணியாவார். இவரது ஆய்வுப் புலங்கள் அண்டவியலும் புறப்பால்வெளி வானியலும் ஆகும்; இவர் கருந்துளைகளையும் புடையின் முதல் கட்ட விண்மீன்களையும் ஆய்வு செய்கிறார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று டொரண்டோ பலகலைக்கழகத்திலும் மெல்பார்ன் பல்கலைக்கழகத்திலும் முதுமுனவர் ஆய்வாளராக விளங்கினார். இளமைஇவர் ஆத்திரேலியாவில் உள்ள வட்கிழக்கு விக்டோரியாவில் 1951 ஜூலை 3 இல் பிறந்தார். இவர் தல்லாங்கத்தா தொடக்கநிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கினார். பிறகு தன் ஆறம் அகவையில் மெல்பார்னுக்குச் சென்று அங்கே பிளாக்பர்ன் சவுத் தொடக்கநிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் மெல்பார்னில் உள்ள பிரெசுபித்தேரிய மகளிர் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.[1] இவரது தந்தையார் ஒரு பொறியாளர்; தாயார் பள்ளிப் புவிப்பரப்பியல் ஆசிரியர். இருவருமே இளமையிலேயே இவருக்கு இயற்பியலிலும் அறிவியலிலும் கணிதவியலிலும் ஆர்வம் ஊட்டினர். இவர் தனது பள்ளி இறுதியாண்டில் சிட்னி பல்கலைக்கழகத்தில் ஒருவிரிவுரையைக் கேட்டதுமரது தந்த ஊக்கத்தால் வானியலில் ஆர்வம் கொள்ளலானார். இந்த விரிவுரை அண்டவியல் பற்ரியது; இதை ஆற்றியவர் ஆத்திரேலியாவே கொண்டாடும் அறிவியலாளராகிய இராபெர்ட் மே ஆவார். வாழ்க்கைப்பணிஇவர் 1975 இல் மெல்பார்னில் உள்ள மொனாழ்சு பல்கலைக்கழகத்தில் இருந்து வானியற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். என்றாலும் பல்கலைகழகத்தில் அடைந்த கொடுமையான பட்டறிவு அவரை[2] விக்டோரிய அரசு பொதுப்பணித்துறையில் சேர வைத்தது. இங்கு இவர் நிலபுல கோள்முதலிலும் விற்பனையிலும் ஈடுபட்டார். இப்பணியில் நான்காண்டுகள் வெற்றிகரமாக முடித்ததும், தன் இருபதுகளின் நடுவில் அப்பணி தனக்கு மன நிறைவளிக்காமையை உணர்ந்தார்.[2] எனவே, இவர் கெம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் துறைத் தலைவராக இருந்த மார்ட்டின் இரீசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் இவருக்கு ஊக்கம் ஊட்டினாலும் அங்கு சேரும் முன் குறைந்தது முதுவர்பட்டம் பெற்றபின் சேரும்படி அறிவுறுத்தியுள்ளார்.[2] இவர் 1980 இல் சசெக்சு பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் பட்டத்தைப் பெற்றார். மேலும் இவர் 1985 இல் முனைவர் பட்டத்தை ஈர்ப்பு வில்லையாக்கத்திலும் அண்டவியலிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகதில் பெற்றார்.[3][4] இவர் பின்னர் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் ஈர்ப்பு வில்லைத் துடிமீனாகிய அய்ன்சுட்டீன் குருசு பற்றிய முதுமுனைவர் ஆய்வில் சேர்ந்தார்.[4] இவர் 1992 இல் மெல்பார்ன் பல்கலைக்கழகத்துக்கே திரும்பிவந்தார். இங்கு இவர் பார்க்கெசு வான்காணக துடிமீன் அளக்கைத் திட்ட ஆய்வு நல்கையைப் பெற்றுள்ளார்.[5] இவர் முதலில் எப்படி பால்வெளிகள் ஒளியை வளைக்கின்றன அதாவது ஈர்ப்பு வில்லையை உருவாக்குகின்றன என்பதை றியக் கருதினார். இன்று, இவரது ஆய்வுக்குழு ஆத்திரேலியத் தொலைநோக்கி செறிநிலை அணி, ஜெமினி தொலைநோக்கி, அபுள் தொலைநோக்கி, சந்திரா X-கதிர் வான்காணகம் ஆகிய ஏந்துகளையும் கருவிகளையும் பயன்படுத்துகிறது.[6] மேலும், இவர் மேற்கு ஆத்திரேலியாவில் நிறுவப்படவுள்ள புதிய தாழ் அலைவெண் கதிரியல் தொலைநோக்கியை வடிவமைப்பதிலும் பன்னாட்டு கூட்டிணையத்துக்கு உதவி நல்கிவருகிறார்.[7] இவரது அறுதி குறிக்கோள் புடவியின் முதல் வாயில்களைக் கண்டறிதலாகும். இத்தகவலைத் தன் ஆய்வுகள் வழியாக மீள்மின்னணுவாக்க நீரக அணுக்களைக் கண்டுபிடித்து நொதுமல்நிலை நீர்க வளிம முகில்களின் கட்டமைப்பைப் பகுப்பாய்வு செய்து அறிய முயன்றார். மேலும் இவர் துடிமீன் உமிழ்வுப் பகுதிகளிலும் அண்டவியலிலும் முர்ச்சிசன் அகல்புல அணி பற்றியும் கரும்பொருண்மம் பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவர் தேசிய வானியல் குழுவின் தலைவர் ஆனார். இவர் பிறரோடு இணைந்து இயற்பியலில் மகளிர் எனும் திட்டத்தை உருவாக்கினார். இதனால் பல பெண்கள் மெல்பார்னில் இயற்பியலைக் கற்றுத் தேறிப் பட்டம் பெற்றனர்.[8] தகைமைகளும் விருதுகளும்
இவர் மெல்பார்ன் பல்கலைக்கழகக் கல்விக்கழக்கத்தின் குழுமத் தலைவர் ஆவார். இவருக்கு இராபெர்ட் எல்லேரி விரிவுரைத் தகைமை வழங்கப்பட்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia