இரைபோ கருவமிலம்![]() ![]() இரைபோ கருவமிலம் அல்லது ஆர்.என்.ஏ. (RNA - ribonucleic acid) என்பது ஒரு கருவமிலம் ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கலாம். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றான கருவமிலங்களில் ஒன்றாகும். இவையும் டி.என்.ஏ யைப் போன்றே நியூக்கிளியோட்டைடுக்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான மரபுக் கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும்[2]. சில தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொண்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்[3][4]. ஆர்.என்.ஏ. வகைபாடுகள்ஆர்.என்.ஏ க்கள் அவற்றின் உரு மற்றும் செயலாற்றுதல் மூலம் பல்வேறுவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள்புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள் (RNA in translation): செய்தி பரிமாற்ற ஆர்.என்.ஏ (messenger RNA -mRNA), இடமாற்று ஆர்.என்.ஏ (transfer RNA-tRNA), இரைபோசோமல் ஆர்.என்.ஏ (ribosomal RNA -rRNA)[1]. ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள்ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் (Regulatory RNAs): குறு ஆர்.என்.ஏ (micro-RNA), சிறு ஆர். என். ஏ (small RNA), நீண்ட செய்தியற்ற ஆர்.என்.ஏ (long non-coding RNA)[5]. =dhdhj ஆர்.என்.ஏ மரபுத்தொகை=ஆர்.என்.ஏ மரபுத்தொகை (RNA genomes): ஒரிழை ஆர்.என்.ஏ (single strand RNA), ஈரிழை ஆர்.என்.ஏ. (double strand RNA).[2][3]
|
Portal di Ensiklopedia Dunia