இறக்குமதிஇறக்குமதி (Import) என்பது யாதெனில், தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களையும், போதிய அளவு உற்பத்தியாகாத பண்டங்களையும் பிறநாடுகளிலிருந்து வாங்கிக் கொள்ளும் வணிக முறை ஆகும். பொதுவாக, இறக்குமதி செய்யும் பொருளின் அளவைவிட, ஏற்றுமதி செய்யும் பொருளின் அளவு அதிகமாக இருப்பதையே ஒவ்வொரு நாடும் விரும்பும். ஏனெனில். அப்போதுதான் வெளிநாட்டுப்பணம், ஒருநாட்டில் அதிகமாக வந்து குவியும். அதனால் அதன் பொருளாதாரமும் உயரும். இன்று இந்தியாவிலிருந்து சர்க்கரை, காப்பிக்கொட்டை, தேயிலை, மிளகு, முந்திரிப்பருப்பு, துணி, சணல் புகையிலை, தோல், நிலக்கரி, இரும்புத் தாது, தையல் எந்திரம், சைக்கிள், ஆகியவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உணவுப் பொருள்கள், எந்திர சாதனங்கள், இரசாயனப் பொருள்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் முதலியவற்றைப் பிறநாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது.[1][2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia