இறக்கை![]() ![]() இறக்கை (ⓘ) என்பது வளிமண்டலம் வழியே பறக்கும்போது ஏற்றம் கொடுக்கும் ஒரு பரப்பு ஆகும். சில நேரங்களில் வேறு திரவங்கள், வாயுக்கள் வழியேவும் செல்ல நேரலாம். செயற்கையாக செய்யப்படும் இறக்கைகளின் குறுக்குவெட்டுத் தோற்றம் காற்றிதழ் எனப்படும். ஒவ்வொரு காற்றிதழும் தனக்கேயுரித்தான பண்புகளைக் கொண்டிருக்கும்.[1][2][3] இறக்கை எனும் சொல் பறவைகள், பூச்சிகள், வௌவால் மற்றும் விமானம் ஆகியவற்றுக்கு பொதுவானது. அண்மைக் காலங்களில் பார்முலா-1 பந்தயங்களில் ஒட்டப்படும் கார்களின், முன்னும் பின்னும் உள்ள கீழ்முகவிசை (எதிர்த்திசையில் செயல்படும் ஏற்றம்) தரக்கூடிய பரப்பும் இறக்கை என்று அழைக்கப்படுகிறது. ஓர் இறக்கையின் காற்றியக்கத் திறம், அதன் ஏற்றத்துக்கும் இழுவைக்கும் உள்ள விகிதத்தால் அளக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஓர் இறக்கையின் ஏற்றம், இழுவையைப் போல் ஒன்று முதல் இரண்டு மடங்கு வரை இருக்கும். இந்த விகிதம் அதிகமாக இருக்கும் போது, விமானத்தை குறைந்த அளவு உந்துவிசை பயன்படுத்தி தேவையான ஏற்ற விசையைப் பெறலாம். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia