இறந்தோர் நாள்
இறந்தோர் நாள் (Day of the Dead, எசுப்பானியம்: Día de Muertos) மெக்சிக்கோ நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருநாள். மூன்று நாட்கள் நீடிக்கும் இத்திருநாள் குறிப்பாக நடு மற்றும் தென் மெக்சிகோ பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டில் அரசு விடுமுறைகளான இந்நாட்களில் மக்கள் தங்கள் உறவினருடன் ஒன்று கூடி தங்கள் குடும்பங்களில் மாண்டவரை நினைவுகூருவர். பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானிய காலனியாக்கத்துக்கு முன்னர் இந்நாள் கோடைக்காலத்தின் துவக்கத்தில் கொண்டாடப்பட்டது. எசுப்பானியர் வருகைக்குப்பின் கத்தோலிக்கம் மெக்சிக்கோவில் பரவியது. அதன் பின் இந்நாள் அக்டோபர் 31, நவம்பர் 1, மற்றும் நவம்பர் 2 ஆம் நாட்களில் கொண்டாடப்படலாயிற்று. இந்நாளில் இறந்தோருக்கெனத் தனியாக பூசை மேடைகள் கட்டி அவற்றில் சர்க்கரையால் ஆன மண்டையோடுகள், மரிகோல்ட் மலர்கள், இறந்தவர்களுக்குப் பிடித்த உணவுகள், பானங்கள் ஆகியவற்றைப் படைப்பது மரபு. இப்படையல்களை எடுத்துக் கொண்டு இறந்தவர்களின் கல்லறைக்கும் மக்கள் செல்வர். இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் கல்லறைகளில் விட்டுச் செல்வர்.[1][2] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia