இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு

இலங்கை அரசு செய்யும் மனித உரிமை மீறல்களுக்கும் வன்முறைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தமது நிதி உதவ இருப்பதை உறுதி செய்வதற்காகவும் அனைத்து தமிழ் மக்களும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்குமாறு பல்வேறு புகலிட அமைப்புகள் கோரி வருகின்றார்கள். இந்தக் கோரிக்கை முன்னர் பல்வேறு கட்டங்களில் முன்வைக்கப்பட்ட போதும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இம்முறை இந்த அமைப்புகள் இந்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த தீவரமாக செயற்படுகிறார்கள்.

இந்தப் புறக்கணிப்பு சிங்கள மக்களுக்கோ, அல்லது தனிப்பட்ட வணிகர்களையோ அல்லது வணிக நிறுவனங்களையோ இலக்காக கொள்ளவில்லை. மாற்றாக வெறிபிடித்த இலங்கை அரசுக்கு எதிராது என்றே புறக்கணிப்பாளரால் கூறப்படுகிறது.

பொருட்கள் புறக்கணிப்பு வன்முறையற்ற எதிர்ப்புப் போராட்ட வடிவங்களில் ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காலனித்துவ பிரித்தானியப் பொருட்களைக் புறக்கணிக்க கோரியது இங்கு குறிப்பிடத்தக்கது.

புறக்கணிப்படக்கூடிய பொருட்களின் பட்டியல்

  • விமான நிறுவனங்கள்
  • தொலைக்காட்சி சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகள்
  • இலங்கை வங்கிகள்
  • சுற்றுலா

உணவும் குடிபானங்களும்

  • விசுக்கோத்துகள்
  • இலங்கை மீன் மற்றும் கடலுணவு
  • இறக்குமதி சுவைப்பொருட்கள், தானியங்கள்
  • தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள்
  • குளிர்பானங்கள்
  • மதுபானங்கள்
  • இலங்கைத் தேயிலை

சுகாதாரப் பொருட்கள்

  • சவர்க்காரம்
  • சம்பு
  • பற்பசை

உடைகள், அணிகலங்கள்

இவற்றையும் பாக்க

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya