இலத்திரன்வோல்ட்இயற்பியலில், எலட்டிரான் வோல்ட்டு அல்லது இலத்திரன் வோல்ட்டு (electron volt, eV) என்பது ஆற்றலின் ஓர் அலகாகும். இதனை எதிர்மின்னி-வோல்ட்டு என்றும் குறிப்பிடலாம். பிணைப்பற்ற, விடுபட்ட, இலத்திரன் ஒன்று ஒரு வோல்ட்டு அளவுள்ள மின் அழுத்த வேறுபாட்டைக் கொண்ட மின்புலத்தினூடாக முடுக்கப்படும்போது அவ் இலத்திரன் பெறும் ஆற்றல் ஓர் இலத்திரன் வோல்ட்டு ஆகும்.
ஓர் இலத்திரன் வோல்ட்டு என்பது ஓர் எதிர்மின்னியின் (இலத்திரனின்) மின்மமாகிய (மின்னூட்டமாகிய) 1.602 176 53(14)×10−19 கூலுமை, 1 வோல்ட்டால் பெருக்க வரும் ஆற்றல் அளவு. ஒரு வோல்ட்டு என்பது 1 யூல் வகுத்தல் 1 கூலும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம். எலட்டிரான் வோல்ட்டு என்பது மிகச்சிறிய அலகாகும். கதிரியலிலும் பிற அறிவியல் துறையிலும் கிலோ எலட்டிரான் வோல்ட்டு (KeV ), மெகா எலட்டிரான் வோல்ட்டு (MeV ) அலகுகளில் அளவிடப்படுகின்றன. வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia