இலந்தனம் நைட்ரேட்டு போன்ற இலந்தனம் உப்புகளின் நீர்த்த கரைசல்களில் அம்மோனியா போன்ற காரத்தைச் சேர்ப்பதன் மூலம் இலந்தனம் ஐதராக்சைடைப் பெறலாம். இது அரை திண்மக்கரைசல் போன்ற வீழ்படிவை உருவாக்குகிறது, இதை காற்றில் உலர்த்தலாம்.[2]
இலந்தனம் ஐதராக்சைடு காரப் பொருட்களுடன் அதிகம் வினைபுரிவதில்லை, இருப்பினும் அமிலக் கரைசலில் சிறிது கரையும்.[2] 330 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில், இது இலந்தனம் ஆக்சைடு ஐதராக்சைடாக (LaOOH) சிதைகிறது, மேலும் சூடாக்கும்போது இலந்தனம் ஆக்சைடாக (La2O3) சிதைகிறது.:[4]
La(OH)3 LaOOH
2 LaOOH La2O3
அறுகோண படிக அமைப்பில் இலந்தனம் ஐதராக்சைடு படிகமாகிறது. படிக அமைப்பில் உள்ள ஒவ்வொரு இலந்தனம் அயனியும் ஒரு முக்கோண பட்டகத்தில் ஒன்பது ஐதராக்சைடு அயனிகளால் சூழப்பட்டுள்ளது.[5]
↑ 2.02.1E.V. Shkolnikov (2009). "Thermodynamic Characterization of the Amphoterism of Hydroxides and Oxides of Scandium Subgroup Elements in Aqueous Media". Russian Journal of Applied Chemistry82 (2): 2098–2104. doi:10.1134/S1070427209120040.
↑Ding, Jiawen; Wu, Yanli; Sun, Weili; Li, Yongxiu (2006). "Preparation of La(OH)3 and La2O3 with Rod Morphology by Simple Hydration of La2O3". Journal of Rare Earths24 (4): 440–442. doi:10.1016/S1002-0721(06)60139-7.
↑Michael E. Brown, Patrick Kent Gallagher (2008). Handbook of Thermal Analysis and Calorimetry. Elsevier. p. 482. ISBN978-0-44453123-0.
↑Beall, G.W.; Milligan, W.O.; Wolcott, Herbert A. (1977). "Structural trends in the lanthanide trihydroxides" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry39 (1): 65–70. doi:10.1016/0022-1902(77)80434-X.