இலார்னாக்கா
இலார்னாக்கா (Larnaca, கிரேக்க மொழி: Λάρνακα, துருக்கியம்: Larnaka அல்லது İskele) சைப்பிரசின் தென்கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும்; இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். நிக்கோசியா, லிமாசோல் அடுத்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாக உள்ளது. நகரியப் பகுதியின் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி 84,591 ஆகும். பனைமரங்களடர்ந்த கடற்கரைக்குப் புகழ்பெற்ற இலார்னாக்காவில் புனிந லசாரசு தேவாலயம், அலா சுல்தான் டெக்கே, காமரெசு நீர்க்கட்டுக் கால்வாய், மற்றும் பழங்கால கோட்டை சுற்றுலாத் தலங்களாக உள்ளன. உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளர் செனோவின் பிறந்த இடமான கிடியோன் நகர அரசு இடிபாடுகளின் மீது இந்த நகரம் எழுந்துள்ளது. நாட்டின் முதன்மை வானூர்தி நிலையமான இலார்னாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குள்ளது. இங்கு பயணியர் மற்றும் சரக்குக் போக்குவரத்திற்கான துறைமுகமும் உள்ளது. ஒளிப்படத் தொகுப்பு
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia