இலித்தியம் இருபீனைல்பாசுபைடு (Lithium diphenylphosphide) என்பது (C6H5)2PLiஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். இச்சேர்மத்தில் இலித்தியமும் கரிமபாசுபரசு எதிர்மின் அயனியும் உட்கூறுகளாக உள்ளன. காற்று உணரியான இத்திண்மம் இருபீனைல்பாசுபீனோ சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. ஓர் ஈதர் அணைவுச் சேர்மமாக இது அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
தயாரிப்பு
குளோரோயிருபீனைல்பாசுபீன்,[1] குளோரோமுப்பீனைல்பாசுபீன்,[2][3] குளோரோநாற்பீனைல்பாசுபீன் போன்றவற்றுடன் கார உலோகங்களைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இலித்தியம், சோடியம், பொட்டாசியம் உப்புகள் உருவாகின்றன.
(C6H5)2PCl + 2 M → (C6H5)2PM + MCl
(C6H5)3P + 2 M → (C6H5)2PM + MC6H5
(C6H5)4P2 + 2 M → 2 (C6H5)2PM
இருபீனைல்பாசுபீன்களை புரோட்டான் நீக்க வினைக்கு உட்படுத்தியும் இவற்றைத் தயாரிக்க முடியும்.
வினைகள்
இருபீனைல்பாசுபைடு உப்புகளுடன் தண்ணீர் சேர்க்கும்போது நீராற்பகுப்பு வினை நிகழ்ந்து இருபீனைல்பாசுபீன் உருவாகிறது.
பொட்டாசியம் இருபீனைல்பாசுபைடு (சிஏஎசு எண் 15475-27-1)
மேற்கோள்கள்
↑R. Goldsberry Kim Cohn (1972). "Diphenyl(trimethylsilyl)phosphine and Dimethyl(trimethylsilyl)‐phosphine". Inorganic Syntheses13: 26-32. doi:10.1002/9780470132449.ch7.
↑George W. Luther, III, Gordon Beyerle (1977). "Lithium Diphenylphosphide and Diphenyl(Trimethylsilyl)Phosphine". Inorganic Syntheses17: 186-188. doi:10.1002/9780470132487.ch51.
↑W. Levason, C. A. Mcauliffe (1976). "Cis‐2‐Diphenylarsinovinyldiphenylphosphine and 2‐Diphenylarsinoethyldiphenylphosphine". Inorganic Syntheses16: 188-192. doi:10.1002/9780470132470.ch50.
↑Ruth A. Bartlett, Marilyn M. Olmstead, Philip P. Power (1986). "Structural Characterization of the Solvate Complexes of the Lithium Diorganophosphides [{Li(Et2O)PPh2}∞], [{Li(THF)2PPh2}∞], and [{Li(THF)P(C6H11)2}∞]". Inorg. Chem.25: 1243–1247. doi:10.1021/ic00228a034.