இலித்தியம் சயனைடு(Lithium cyanide) LiCN. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இவ்வுப்பு நீரை உறிஞ்சும் பண்பு கொண்டதாகவும் நீரில் நன்கு கரையக்கூடியதாகவும் உள்ளது. முக்கியமான சில பயன்பாடுகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
இலித்தியம் ஐதராக்சைடும்ஐதரசன் சயனைடும் சேர்ந்து வினைபுரிவதால் இலித்தியம் சயனைடு உருவாகிறது. ஆய்வகப் பயன்பாடுகளுக்கான இலித்தியம் சயனைடு தயாரிப்புக்கு இலித்தியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சயனைடுக்குப் பதிலாக அசிட்டோன் சயனோ ஐதரின் பயன்படுத்தப்படுகிறது. [4]
(CH3)2C(OH)CN + LiH → (CH3)2CO + LiCN + H2
பண்புகள்
கிட்டத்தட்ட 600 பாகைசெல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படும்போது இலித்தியம் சயனைடு சயனமைடு மற்றும் கார்பனாக சிதைவடைகிறது. [5] அமிலங்களுடன் வினைபுரிந்து ஐதரசன் சயனைடைக் கொடுக்கிறது.
பயன்
சயனேற்ற வினையில் இலித்தியம் சயனைடு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. [6]
RX + LiCN → RCN
மேற்கோள்கள்
↑J. A. Lely, J. M. Bijvoet (1942), "The Crystal Structure of Lithium Cyanide", Recueil des Travaux Chimiques des Pays-Bas, vol. 61, London: WILEY-VCH Verlag, doi:10.1002/recl.19420610402
↑Haynes, W.M (2013), "Bernard Lewis", in Bruno, Thomas. (ed.), Handbook of Chemistry and Physics (93 ed.), Boca Raton, Florida: Fitzroy Dearborn, archived from the original on 2017-07-24, retrieved 2020-12-31