இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு
இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு (Lithium tetramethylpiperidide) என்பது C9H18LiN. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அணுக்கரு கவரியல்லாத காரமாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இலித்தியம் பிசு(டிரைமெத்தில்சிலில்) அமைடுக்குச் சமமான pKa மதிப்பும் கொள்ளிடத் தடையும் கொண்டிருப்பதால் இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்பு2,2,6,6-டெட்ராமெத்தில்பிப்பெரிடினுடன் என் – பியூட்டைல் லித்தியத்தைச் சேர்த்து −78 °செல்சியசு வெப்பநிலையில் புரோட்டான் நீக்கம் செய்வதால் இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடு தயாரிக்கப்படுகிறது. 0 ° செல்சியசு வெப்பநிலையிலும் இந்த வினை நிகழ்வதாக அண்மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன [1]. டெட்ரா ஐதரோபியூரான்/எத்தில்பென்சீன் கரைப்பான் கலவையில் இச்சேர்மம் நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. கட்டமைப்புபல இலித்தியம் வினையாக்கிகள் போல இலித்தியம் டெட்ராமெத்தில்பிப்பெரிடைடும் திண்மநிலையில் நாற்படியாக உருவாகிறது [2] ![]() . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia