இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம்

இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம் என்பது அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள கல்வி நிறுவனம். இது தனியாருக்குச் சொந்தமானது. இங்கு பொறியியல், அறிவியல், உளவியல், கட்டிடக்கலை, வணிகம், தொலைத் தொடர்பு, சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறலாம். இது சுருக்கமாக, ஐ.ஐ.டி எனவும் அழைக்கப்படும்.[1][2][3]

கல்வி

இது நான்கு கல்லூரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு கல்விக் கழகங்களும், இரண்டு பள்ளிகளும் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முக்கிய கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

வளாகம்

இது ஐந்து வளாகங்களைக் கொண்டுள்ளது.

  • முதன்மை வளாகம், சிகாகோவின் பிரான்சுவில்லேவில் உள்ளது. இங்கு பொறியியல், அறிவியல், கட்டிடக்கலை, தொலைத் தொடர்பு, உளவியல் உள்ளிட்ட பிரிவுகளில் இள நிலை, முது நிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • டவுன்டவுன் வளாகம், சிகாகோவின் வெஸ்ட் ஆடம்ஸ் தெருவில் உள்ளது. இங்கு சட்டம், வணிகம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • டிசைன் இன்ஸ்டிடியூட், சிகாகோவின் நார்த் லாசல்லே தெருவில் உள்ளது.
  • டேனியல் எஃப் அன்டு அடா எல் ரைஸ் வளாகம், இலினாய்சின் வீட்டன் பகுதியில் உள்ளது. இங்கு தொழில் நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • மொஃபெட் வளாகம், இலினாய்சின் பெட்போர்டு பார்க் பகுதியில் உள்ளது. இங்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் உடல் நலத் துறைகள் உள்ளன.

விளையாட்டு

இங்கு படிக்கும் மாணவர்கள், ஸ்கார்லெட் ஹாக் என்ற குழுவை அமைத்துள்ளனர்.

சான்றுகள்

  1. "IIT Viewbook" (PDF). 2008. p. 64. Archived from the original (PDF) on November 22, 2008. Retrieved March 14, 2009.
  2. "Office of the Provost". Illinois Institute of Technology. Retrieved 26 January 2023.
  3. "Quick Facts for Fall 2017". Illinois Institute of Technology. 2017. Archived from the original on February 2, 2018. Retrieved February 1, 2018.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya