இலூவா அருங்காட்சியகம்
இலூவா அருங்காட்சியகம் (Louvre Museum, French: Musée du Louvre) பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. இது உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம் என்பதோடு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் ஆகும். பாரிசு நகரத்தின் முக்கிய இடமாக விளங்கும் இது முதலாவது மாவட்டத்தில் செயின் ஆற்றின் வலது கரையில் (வடக்குப்புறக் கரையை 'Rive Droite' - வலப்புறக் கரை என அழைக்கிறார்கள்) அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 35,000 அரும்பொருட்கள், 60,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. 14ஆம் லூயுடைய அரண்மனைதான் தற்போது இந்த அருங்காட்சியகமாக உள்ளது. பரந்து விரிந்த உயர்ந்த இவ்வருங்காட்சியகம் வெளிப்பறத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதே பழைய கட்டடக்கலை நுட்பத்துடன் பேணப்படுகிறது. புகழ் பெற்ற ஓவியர் இலியானார்டோ தாவின்சியின் ஓவியமான மோனா லிசாவின் அசல் படி இந்த அருங்காட்சியகத்தில்தான் உள்ளது.[4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia