இளங்கலை வணிக நிர்வாகம்இளங்கலை வணிக நிர்வாகம் (Bachelor of Business Administration) என்பது வணிக நிர்வாகத்தில் நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளங்கலைப் பட்டமாகும். இதில் பொதுவாக வணிக நிர்வாகத்தின் அடிப்படைகள் அதாவது, வணிக பகுப்பாய்வு, வணிகத் தொடர்பு, கூடாண்மை ,நிதி, நிதிக் கணக்கியல், பருப்பொருளியல், மேலாண்மை, மேலாண்மைக் கணக்கியல், சந்தைப்படுத்தல், நுண்பொருளியல், வர்த்தக உத்தி, விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகத்தின் கல்வித் துறையுடன் தொடர்புடைய பிற முக்கிய கல்விப் பாடங்கள் போன்ற மேம்பட்ட படிப்புகள் அடங்கும். பாடத்திட்ட அமைப்புஒரு குறிப்பிட்ட வணிகம் தொடர்பான கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற அனுமதிக்கும் அதே வேளையில், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் அவற்றின் தொடர்பைப் பற்றிய பரந்த அறிவை வழங்கும் வகையில் இதன் கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [1] பொதுவாக மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வணிகம் தொடர்பான கல்வித்துறை அல்லது துறைகளில் நிபுணத்துவம் பெற அனுமதிக்கின்றன. ஒரு மாணவரின் நடைமுறை, மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் வணிக நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அவர்களை தயார்படுத்துதல், வணிக ரீதியிலாக முடிவெடுக்கும் திறன்களை உருவாக்குகிறது. பல திட்டங்கள் பயிற்சி ,நடைமுறைகள் மற்றும் அனுபவத்தை விடய ஆய்வு, விளக்கக்காட்சிகள், உள்ளுறைப் பயிற்சி, தொழில்துறை வருகைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் தொடர்புகொள்வது போன்ற வடிவங்களில் உள்ளன. [2] உலகின் சிறந்த வணிகப் பள்ளிகள்பெரும்பாலான வணிகப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குள் வணிகப் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு உலக அளவில் வணிக நிர்வாகத்தின் இளங்கலை பட்டப்படிப்புகளின் தரவரிசைப்படி, யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் உலகளவில் சிறந்த பத்து வணிக நிர்வாக திட்டங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளது: [3]
இவற்றையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia