இளஞ்சேரல் இரும்பொறை

இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான[1] குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புகள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.

இளஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன்.

இவனைக் குறிக்கும் தொடர்கள்

  • இளஞ்சேரல் இரும்பொறை [2]
  • நிலந்தரு திருவின் நெடியோன் [3]
  • பூழியர் கோ [4]
  • வென்வேல் பொறையன் [5]
  • பல்வேல் பொறையன் [6]
  • பல்வேல் இரும்பொறை [7]
  • கொங்கர் கோ [8]
  • குட்டுவர் ஏறு [8]
  • பூழியர் மெய்ம்மறை [8]
  • மரந்தையோர் பொருநன் [8]
  • பெருநல் யானை இறை கிழவோன் [8]

என்றெல்லாம் இவன் குறிப்பிடப்படுகிறான்.

புலவர்க்குக் கவரி வீசியது

அரசனின் முரசை நீராட்டிவர எடுத்துச் சென்றிருந்தபோது, அரசனைக் காணவந்த புலவர் மோசி கீரனார் முரசு வைக்கும் பெருமைக்குரிய கட்டிலில் அது முரசுக்கட்டில் என்று தெரியாமல் அதன்மீது படுத்து உறங்கிவிட்டார். அக்கால வழக்கப்படி இது தண்டனைக்குரிய குற்றம். அரசன் முரசுடன் மீண்டபோது புலவர் நிலையைக் கண்டார். புலவரை அவன் தண்டித்திருக்க வேண்டும். மாறாக, உறக்கம் கலைந்து புலவர் எழும் வரையில், அரசன் புலவருக்குக் கவரி வீசிக்கொண்டிருந்தான். அந்த அளவுக்கு இவன் புலவர்களை மதித்தான்.[9]

ஆட்சி

  • தகடூரைக் கைப்பற்றினான் பெயர் தரும் செய்தி
  • கொல்லி மலையை நீண்ட நாள் முற்றுகையிட்டிருந்தான்.[10]
  • தேர்ப்படையுடன் சென்று பகைவரைத் தாக்கினான் [11]
  • இவனோடு போரிட்ட பெரும்பூண் சென்னி போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிய குடைகள் கபிலர் இவனது தந்தையைப் பாடி, பதிற்றுப்பத்து ஏழாம் பத்து பரிசாகப் பெற்ற ஊர்களைக் காட்டிலும் அதிகம்.[12][13]

கொடை

  • பாடினிக்கு நல்ல அணிகலன்கள் பதிற்றுப்பத்து 87
  • பேரியாறு ஒழுகுவது பொல் கொடை வழங்குவான். பதிற்றுப்பத்து 88

முன்னோர் பதிற்றுப்பத்து 88

ஆகியோரின் மருகன் (மரபு வழியில் வந்தவன்) இவன்.

குறிப்புகள்

  1. டான் பொஸ்கோ
  2. பதிற்றுப்பத்து, பதிகம் 9
  3. பதிற்றுப்பத்து 82
  4. பதிற்றுப்பத்து 84
  5. பதிற்றுப்பத்து 86
  6. பதிற்றுப்பத்து 87
  7. பதிற்றுப்பத்து 89
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 பதிற்றுப்பத்து 90
  9. புறநானூறு 50 மோசி கீரனார்
  10. மாணிழை அரிவை காணிய ஒருநாள் பூண்க மாள நின் புரவி நெடுந்தேர் - பதிற்றுப்பத்து 81, காடு கை காய்த்திய நீடுதாள் இருக்கை - பதிற்றுப்பத்து 82
  11. பதிற்றுப்பத்து 83
  12. பதிற்றுப்பத்து 85
  13. இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர். - இந்தக் கருத்து பொருந்தாது.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya