இளம் விஞ்ஞானிகள் ஊக்கத் திட்டம்
இளம் விஞ்ஞானி ஊக்கத் திட்டம்(ஆங்கிலம்: Young Scientist Incentive Plan) (KVPY:Kishore Vaigyanik Protsahan Yojana) என்பது, இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறையினரால் வழங்கப்படும் ஒரு உதவித்தொகை திட்டம் ஆகும். இது மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை அடிப்படை அறிவியல் துறையில் எடுத்து படிக்க ஊக்கம் அளிக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்களுக்கு உதவித்தொகை மற்றும் இடைக்கால மானியங்களை முனைவர்(பிஎச்டி) பட்டப்படிப்பிற்கு முந்தைய நிலை வரை வழங்குகிறது. 1999ல் தொடங்கப்பட்ட, இது இந்திய அறிவியல் கழகம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த இளம் விஞ்ஞானிகள் ஊக்கத் திட்டம் (KVPY) என்பது தேசம் முழுவதும் திறமையான மாணவர்களை அடிப்படை அறிவியல் துறையில் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் ஈர்க்கவும் மற்றும் ஊக்கப்படுத்தவும் இந்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினரால் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் குறிக்கோள், ஆய்வு படிப்புகளில் திறமை மற்றும் சூட்சமத் திறனுடன் கூடிய மாணவர்களை அடையாளம் காணுவது; அவர்கள் தங்கள் திறனை படிப்பினில் உணரவும், நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறந்த விஞ்ஞான சிந்தனைகளின் வளர்ச்சியை உறுதிசெய்யவும் விஞ்ஞானத்தில் ஆராய்ச்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஊக்கப்படுத்தவும் செய்கிறது. மாணவர்களின் தேர்வானது XI வகுப்பு முதல் இளங்கலைத் அறிவியல் பாடப்படிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் (B.Sc./B.S./B.Stat./B.Math./Int. M.Sc./M.S.) பாடப்படிப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவுகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சூட்சம் தேர்வு மூலம் நடக்கிறது. விண்ணப்பங்களை திரட்ட மற்றும் நாட்டில் பல்வேறு மையங்களில் திறனாய்வு சோதனை நடத்த சிறப்பு குழுக்கள் ஐ.ஐ.எஸ்.சி. இல் அமைக்கப்படுகின்றன, சூட்சம தேர்வினில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள், இது தேர்வு செயல்முறையின் இறுதி நிலை ஆகும். ஊக்கத்தொகைப் பெற, சூட்சமத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் இரண்டு மதிப்பெண்களும் கருத்தில்கொள்ளப்படுகிறது.[1] தகுதிப் பட்டியல்கள் எஸ்.ஏ., எஸ்.பீ. மற்றும் எஸ்.சி சூட்சம தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண்களில் 75% எடையையும், நேர்முகப் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களில் 25% எடையையும் அடிப்படையாகக் கொண்டது.
தேர்வு தேதிகள்KVPY குறித்த விளம்பரம் பொதுவாக அனைத்து தேசிய நாளிதழ்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப நாள் (மே 11) மற்றும் ஜீலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்று வெளிவரும். உளச்சார்பு தேர்வு (Aptitude Test) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதமும், நேர்முகத்தேர்வு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதமும் நடத்தப்ப்டும். KVPY அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உளச்சார்பு தேர்வு முடிந்த 10-12 நாட்களுக்குள் வினா விடை முடிவு வெளீயிடப்படும். 2015-16ஆம் ஆண்டு, உளச்சார்பு தேர்வு நவம்பர் 1 அன்று நடத்தப்பட்டது, 2015 நவம்பர் 6 அன்று சரியான வினா-விடைகள் வெளியிடப்பட்டது.[3] 2016ல், நவம்பர் 6 ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. வெகுமானம்KVPY தேர்வினில் தகுதி பெற்ற மாணவர்கள் ஊக்கத் தொகைக்கு தகுதியுடையவர்கள். மாணவர்கள் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு முதல் ஊக்கத்தொகை பெறுவர். KVPY கூட்டாளிகள் இளங்கலை அறிவியில்/புள்ளியியல்/கணிதம்(B.Sc./BStat/B.S./ B.Maths) ஆகிய பட்டப்படிப்புகளிலும், ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல்(Integrated M.S./M.Sc) பட்டப்படிப்புகளிலும் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை ரூ.5000 மாத ஊதியமாகவும் மற்றும் ஆண்டுதோறும் 20,000 ஆண்டு ஊக்கத்தொகையாவும் பெறுவர். ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் பட்டப்படிப்புகளில் 4 வது மற்றும் 5 வது வருடத்திற்கான மாததொகை ரூ.7,000 ஆகவும் மற்றும் ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 28,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. [4] மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia