இழ்சாக் கார்ட்டியே
இழ்சாக் கார்ட்டியே (யாக்குவசு கார்ட்டியர் Jacques Cartier, டிசம்பர் 31, 1491–செப்டம்பர் 1, 1557) ஒரு புகழ்பெற்ற பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் (explorer) ஆவார். இவர் இன்றைய கனடா நாட்டினை முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு அறிவித்து பிரான்சின் உடைமையாக உரிமை வேண்டினார். கனடாவில் உள்ள செயின்ட் லாரன்சு வளைகுடாவையும், செயின்ட் லாரன்சு ஆற்றையும் முதன் முறையாக விளக்கி அதன் நில வரைபடங்களை உருவாக்கினார்.[5] லாரன்சு ஆற்றுக் கரைப்பகுதியிலும், ஓக்கெலாக (Hochelaga) (மான்ட்ரியால் தீவு) ஊர்ப் பகுதியிலும், சிட்டாடகோனா (Stadaconna) (கியுபெக் நகரம்) ஊர்ப்பகுதியிலும் வாழ்ந்த செயின்ட் லாரன்சு இரோக்குவா மக்களையும், அந்நிலப்பகுதியையும் "கனடா நாடு" என்று அறிவித்தார்[1][2][3][4]. தொடக்கக் கால வாழ்க்கைஇழ்சாக் கார்ட்டியே 1491 இல் பிரான்சில் செயின்ட்-மாலோ என்னும் இடத்தில் பிறந்தார்[6]. இவர் பிறந்த செயின்ட்-மாலோ பிரிட்டனியின் டச்சியைச் (duchy of Brittany) சேர்ந்த வடகிழக்கின் கோடியில் உள்ள ஒரு துறைமுகம் ஆகும். இது பின்னர் 1532 இல் பிரான்சுடன் சேர்க்கப்பட்டது. கார்ட்டியே மதிக்கத்தக்க கப்பற்காரராக (கம்மாறர்) இருந்தார். பின்னர் அப்பகுதியில் செல்வாக்குடைய குடும்பத்தைச் சேர்ந்த மாரி காத்தரீன் டெ கிரான்செ (Mary Catherine des Granches) என்பாரை மணந்தபின் இவர் குமுகத்தில் தன் செல்வாக்கு நிலையை உயர்த்திக்கொண்டார். இவருடைய உயர்ந்த குமுக நிலையை அறிய இவருடைய பெயர் அடிக்கடி செயின்ட்-மாலோவில் உள்ள சர்ச்சில் உள்ள பிறப்புப் பதிவேட்டில், காட்பாதர் (Godfather) அல்லது சாட்சி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து அறியலாம்[5] . முதல் கடற்பயணம்![]() கி. பி. 1534ஆம் ஆண்டு பிரான்சின் கூட்டு நாடான பிரித்தனி பிரான்சுடன் இணைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இடச்சியின் அரசர் பிரான்சின் முதலாம் பிரான்சிசிடம் கார்ட்டியே புனித மோலோவில் உள்ள தேவாலயத்தின் ஆயரால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்கு முன்னரே பிரான்சிசு மன்னர் கி. பி. 1524ஆம் ஆண்டில் பிளாரன்டைனின் சியோவன்னிடா வெராசனோ என்னும் கடலோடியை வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரங்களில் பிரான்சின் சார்பாக கடலோடுமாறு அழைத்திருந்தார்.[6][7] நியூபவுன்லேண்டு மற்றும் பிரேசில் பயணங்கள் மூலம் கார்ட்டியர், புதிய நிலங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் சிறந்தவராக இருப்பார் என்று ஆயர் லி வெனியூர் தெரிவித்துள்ளார். கார்ட்டியர் ஏப்ரல் 20, 1534 [8] ஆம் ஆண்டு பிரான்சிசு மன்னனிடம் நிதி பெற்று ஆசியாவிற்கு கடல்வழி பயணம் மேற்கொள்ள மேற்கு வழியை கண்டறியும் எண்ணத்தோடு புறப்பட்டார்.[9] . அந்த ஆண்டின் மே 10 இல் தொடங்கிய கடல் வழியான இவரது பயணம் இருபது நாட்கள் நீடித்தது. நியூஃபவுண்ட்லேண்டின் சில பகுதிகளை இவர் ஆய்வு செய்தார். தற்போது இவை கனடாவின் அட்லாண்டிக் மாகாணங்களாகவும் செயின்ட் லாரன்சு வளைகுடாவிலும் உள்ளடங்கியுள்ளன. மெக்தாலன் தீவுக்கூட்டத்தில் இருக்கும் பிரியோன் தீவுக்கு வடகிழக்கில் உள்ள ஒரு பகுதியில் பறவைகள் சரணாலயம் ஒன்றைக் கண்டார். இவருடைய குழுவினர் அங்கிருந்த சுமார் ஆயிரம் பறவைகளை படுகொலை செய்தனர். பெரிய ஓக் எனப்படும் இப்பறவைகள் இன்று முற்றிலுமாக அழிந்து போயின. சாலியர் விரிகுடாவுக்கு வடக்குப் பகுதியில் உள்ள கனடாவின் பழங்குடி மக்களுடன் கார்டியரின் முதல் இரண்டு சந்திப்புக்கள் பெரும்பாலும் சுருக்கமானவையாகவும் சில வர்த்தக ரீதியாகவும் நிகழ்ந்தன. அக்கடல்வழியில் உள்ள கடலோடி ஒருவனின் இரண்டு மகன்களை இவர் கடத்தி இருந்ததால் இவர் பல இடர்களுக்கு இடையே இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.[10] இவர் தான் செய்ய நினைத்த கடல்பயணங்களின் குறிப்புகளையும் இவர் கடல்பயணத்தில் கிடைத்த ஐரோப்பிய பொருட்களையும் பற்றி எழுத்து ஆதாரங்கள் காணப்படுவதால் இவர் தான் நினைத்தபடியே முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார் என உறுதி ஆகிறது.[11]. இரண்டாம் கடற்செலவு![]() ![]() யாக்குவசு கார்ட்டியர் அடுத்த ஆண்டு மே மாதம் 19 இல் மூன்று கப்பல்கள், 110 ஆட்கள் மற்றும் சிறை பிடிக்கப்பட்ட இரண்டு சிறைக் கைதிகளுடன் தன்னுடைய இரண்டாவது கடற்பயணத்தை மேற்கொண்டார். செயின்ட் லாரன்சை அடைந்த அவர் முதன்முறையாக செயின்ட்லாரன்சு நதியில் பயணம் செய்து டொனாகோனோ ஆட்சிபுரிந்த ஈரோகுவியன் தலைநகரமான சிடேடானோவுக்குச் சென்றார். கார்டியர் தனது முக்கிய கப்பல்களை சிடேடாகோனாவுக்கு அருகே ஒரு துறைமுகத்தில் விட்டுவிட்டு இப்போது மான்ட்ரியல் என அழைக்கப்படும் ஓக்கெலகாவுக்கு ஒரு சிறிய கப்பல் மூலமாக அக்டோபர் 2, 1535 இல் வந்து சேர்ந்தார். சிறிய ஏழ்மையான சிடேடாகோனா கிராமத்தைக் காட்டிலும் ஓக்கெலகா சுவாரசியமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நிரம்பிய கூட்டம் ஆற்றங்கரைக்கு வருகை தந்து இந்த பிரஞ்சுக்காரரை வாழ்த்தியது. அவர்கள் வந்து சேர்ந்த இடம் செயின்டே-மேரி சால்ட்டின் தொடக்கம் என்று உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது – அங்குள்ள பாலத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு இப்போதும் அங்குள்ளது. நதியில் நீரோட்டம் தடைபட்டதால் இவரது சீனப்பயணம் மேலும் தொடர முடியாமல் முடிந்தது. ஓக்கெலகா மக்களுடன் இரண்டு நாட்கள் செலவழித்த பின்னர் கார்டியர் அக்டோபர் 11 அன்று சிடேடாகோனாவுக்குத் திரும்பினார். 1535-1536 குளிர்காலத்தை சிடேடாகோனாவில் அவர் செலவழிக்க முடிவு செய்தார். கார்ட்டியர் மற்றும் அவரது குழுவினர் குளிர்காலத்தைச் சந்திக்க , கோட்டையை வலுப்படுத்தி, எரிபொருள் உணவு ஆகியனவற்றைச் சேகரித்தனர். மூன்றாவது கடற்பயணம் 1541-1542அக்டோபர் 17, 1540 இல், பிரான்சிசு கடற்படைத் தளபதி யாக்குவசு கார்டியரை கனேடியமயமாக்கல் திட்டத்தின் தலைவராக நியமிப்பதற்காக கனடாவுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டார். இருப்பினும் பிரெஞ்சு கனடாவின் படைத்தலைவராகவும், அரசரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய இராபர்வால் என்பவரால் இந்நியமனம் தடுக்கப்பட்டது. இராபர்வாலின் தலைமையின் கீழ் கார்ட்டியர் முதன்மை கடலோடியாக இப்பயணம் தொடங்கியது. இராபர்வால் ஆயுதங்களுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்ததால் கார்ட்டியரை கப்பல்களுடன் பயணத்தைத் தொடங்க அனுமதித்தார். 1541 ஆம் ஆண்டு மே 23 இல் கார்டியர் தனது மூன்றாவது பயணத்திற்காக ஐந்து கப்பல்களுடன் செயிண்ட்-மாலோவை விட்டுப் புறப்பட்டார். கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வழியை கண்டுபிடிக்கும் எண்ணம் எதுவும் இந்த நேரத்தில் அவருடைய சிந்தனையில் இல்லை. சாகுனெய் இராச்சியம் மற்றும் அதன் செல்வங்களை கண்டுபிடிப்பதும், செயிண்ட் லாரன்சு ஆற்றின் குறுக்கே ஒரு நிரந்தர குடியேற்றத்தை ஏற்படுத்துவதும் கார்ட்டியருடைய அப்போதைய இலக்குகளாக இருந்தன. செப்டம்பர் 7 இல் சாகுனெய் இராச்சியத்தைத் தேடி ஒரு நீண்ட காலப் பயணத்தை மேற்கொண்டார். ஓச்செலகாவை அவர் அடைந்தபோது மோசமான வானிலை மற்றும் ஒட்டாவா ஆற்றின் தொடர்ச்சியான நீரோட்டங்களால் இடர்பாடுகளைச் சந்தித்தார். 1542 சூன் மாதத்தின் தொடக்கத்தில் கப்பல்களில் தங்கம் மற்றும் வைரங்களுடன் கார்ட்டியர் பிரான்சுக்கு திரும்பினார். இராபர்வால் கப்பல்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் கார்ட்டியரின் இறுதிப் பயணமாக இது முடிவடைந்தது[13]. ஓய்வுகார்ட்டியே கடைசியாக தன் வாழ்வை பிரான்சில் செயின்ட்-மாலோ பகுதியில் கழித்தார். அங்கு போர்த்துகீசிய மொழிபெயர்ப்பாளராக அவ்வப்பொழுது இருந்து உதவினார். அவர் தம் 65 அல்லது 66 ஆவது அகவையில்[14] விரைந்து பரவிய தொற்றுநோயால் இறந்தார்.[15] இவருக்குப் பின்னர் 1608 வரையிலும் கனடாவில் வேறு ஐரோப்பிய குடியேற்றங்கள் ஏதுவும் நிகழவில்லை. பின்னர் 1608 இல் சாமுவேல் சாம்ப்பிளேன் என்பவர் இன்றைய கியுபெக் நகரத்தை நிறுவினார். நினைவிடங்கள்![]()
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
உசாத்துணை
புற இணைப்புகள்
![]() |
Portal di Ensiklopedia Dunia