இவாங்கா டிரம்ப்
இவாங்கா டிரம்ப் (Ivanka Marie Trump, 30 அக்டோபர் 1981) என்பவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப்பின் மகள் ஆவார். இவருடைய தாயார் டோனல்ட் டிரம்ப்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் ஆவார். மாதிரி அழகியாகவும் வணிகம் புரிபவராகவும் இவாங்கா டிரம்ப் இருந்தார். தற்சமயம் தம் தந்தையான டோனல்ட் டிரம்புக்கு அரசு அலுவல்களில் ஆலோசகராக இருந்து வருகிறார். அமெரிக்கத் தலைமையகமான வெள்ளை மாளிகையில் சம்பளம் பெறாத அலுவலர் எனக் கருதும் வகையில் அலுவலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இது அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.[2] ஆரம்பகால வாழ்க்கைஇவானா மேரி டிரம்ப் [3]மன்ஹாட்டன், நியூயார்க் நகரத்தில் இவானா மேரி மற்றும் டோனால்ட் டிரம்ப் (அமெரிக்காவின் 45 ஆவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் [4] ஆவார்) தம்பதியின் மகளாகப் பிறந்தார். இவர் தன்னுடைய தாயின் சுருக்கப்பெயரான ''இவானா'' என்றே அழைக்கப்பட்டார்[5]. டிரம்பினுடைய பெற்றோர் 1992 ஆம் ஆண்டு திருமண முறிவு பெற்றனர், அப்போது இவானாவிற்கு பத்து வயது இருந்தது.[4][6] டிரம்ப் தன்னுடைய 15 ஆவது வயது வரை மன்ஹாட்டன் நகரில் உள்ள சாபின் பள்ளியில் பயின்றார். பின்பு அவர், வாலிங்ஃபோர்ட், கன்னெக்டிகட்டிலுள்ள சோயட் ஹாலில் பயின்றார். அங்கு பயின்ற பள்ளி வாழ்க்கையானது சிறைச்சாலை போன்று இருந்ததாககவும் அப்போது அவருடைய நண்பர்கள் நியூயார்க்கில் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.[7] சோயாட்டில் பள்ளிப்படிப்பை முடித்தபிறகு [8] ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பயின்றார். பின்பு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[9][10] வாழ்க்கைவணிகம்தன்னுடைய குடும்ப வணிக நிறுவனமான தெ டிரம்ப் நிறுவனங்களில் உதவி தலைமை அதிகாரியாக சேர்வதற்கு முன்பாக ஃபாரஸ்ட் சிட்டி என்டெர்பிரைசஸ் எனும் நிறுவனத்தில் சிறிதுகாலம் பணிபுரிந்தார்.[11] பின்பு 2007 ஆம் ஆண்டில் வைர நிறுவனம் ( டைமண்ட் கார்ப்) ஒன்றில் பங்குதாரராக இருந்தார், பின்பு மன்ஹாட்டன் நகரில் இவாங்கா ஃபைன் நகைக்கடை ஒன்றினை தொடங்கினார்.[12][13] நவம்பர் 2011 அன்று தன்னுடைய விற்பனை நிலையத்தை மடிசன் அவென்யூவிலிருந்து அதிக இட வசதி கொண்ட சோஹோ மாவட்டத்தில் 109 மெர்சர் தெருவிற்கு மாற்றினார்.[14][15] விளம்பரத் தோற்றம் காட்டல்இவாங்கா தன்னுடைய பருவ வயதில் வார இறுதியிலும் , விடுமுறையிலும் மாதிரி அழகியாக இருந்தார் , ஆனால் பள்ளி நாட்களில் அவர் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதில்லை என் அவரின் தாயார் இவானா டிரம்ப் கூறியுள்ளார்.[16] பின்னாளில் அவர் டிரம்ப் நிறுவனத்தின் அதிகாரியாக ஆனார், மேலும் தான் தொடங்கிய நகைக் கடை , ஆடைகள், காலணிகள் நிறுவனம் போன்ற பல நிறுவனங்களுக்கு தானே மாதிரி அழகியாகவும் தோன்றினார். மேக்சிம் ஹாட் 100 (2007) என்பதின் கருத்துக்கணிப்பில் 83 ஆவது இடம் பிடித்தார். 2007 ஆம் ஆண்டின் சிறந்த 99 பெண்களில் இவருக்கு 99 ஆவது இடம் கிடைத்தது. ஆஸ்க் மென்.காம் 2008 கருத்துக்கணிப்பில் இவருக்கு 84 ஆவது இடம் கிடைத்தது. தொலைக்காட்சிபயிற்சி பெறுபவர்( தி அப்பிரன்டீஸ்) ( The apprentice)2006 ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையின் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய தி அப்பிரன்டீஸ் ( The apprentice) எனும் நிகழ்ச்சியில் கரோலின் கெப்செர் என்பவருக்கு ஜில்லெட் டாஸ்க்[17] எனும் பகுதியில் தீர்ப்பளிப்பதற்கு உதவிபுரிந்தார். இதுதான் தொலைக்காட்சியில் அவரின் முதல் நிகழ்ச்சி. நிகழ்ச்சிகளின் போது அந்த அணி வீரர்களிடம் அவ்வப்போது டிரம்ப் கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார்.[18] பிற தொலைக்காட்சிப் பங்களிப்புகள்1997 ஆம் ஆண்டில் மிஸ் டீன் அமெரிக்கா என்ற அழகுப் போட்டியினை தொகுத்து வழங்கினார். இதில் அவருடைய தந்தையும் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.[16] 2003 ஆம் ஆண்டில் செல்வந்தர்களின் குடும்பத்தில் பிறந்தவர்களின் அனுபவத்தினை வைத்து எடுத்த ஒரு குறும்படத்தில் (பார்ன் ரிச்) சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2006 ஆம் ஆண்டில் புராஜக்ட் ரன்வே எனும் நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்காற்றினார். 2010 ஆம் ஆண்டில் டிரம்பும் தனது கணவரும் புரளி பேசும் பெண் (காசிப் கேர்ள் ) எனும் தொடரின் 6 ஆவது பகுதியில் தங்களையே சித்தரித்துக் கொண்டனர்.[19] 2015 ஆம் ஆண்டு சனிக்கிழமை இரவு நேரலை(saturday night live) எனும் நிகழ்ச்சியில் இவான்காவாகவே தோன்றினார். நூல்கள்2009 ஆம் ஆண்டில் முதல் புத்தகமான வேலை மற்றும் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான துருப்புச் சீட்டு எனும் நூல் (எழுத்துப் படைப்பு)வெளிவந்தது[20] 2017 ஆம் ஆண்டில் பெண்களின் வெற்றிக்கான விதிகளை மாற்றி எழுதுதல் எனும் இரண்டாவது நூல் (எழுத்துப் படைப்பு) வெளிவந்தது.[21] சமூக செயல்பாடுகள்2007 ஆம் ஆண்டில், இலரி கிளின்டனின் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பரப்புரைக்கு டிரம்ப் $ 1,000 நன்கொடை அளித்தார்.[22] டிரம்ப் தான் பெண்களுக்கான வழக்கறிஞர் என்று கூறினார்.[23] தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் ‘பணியாளர் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சிகளில், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க நம்மால் முடியும்’ என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடைபெற்றது. ‘ஸ்டெம்’ கல்வித் திட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இத்துறைகளில், ஆண்களுக்கு நிகரான பெண்களின் பங்கு உயரும் என்றார்.[1] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia