இஸ்ரேல் பாதுகாப்பு முகமை
இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு முகமை அல்லது சின் பெத் (Israel Security Agency or Shin Bet), உள்நாட்டு உளவு அமைப்பாகும். இதன் தலைமையிடம் டெல் அவிவ் நகரம் ஆகும். இது உள்நாட்டு உளவுப் பணிகளை கவனிக்கும் இந்திய உளவுத்துறை போன்றதே. இஸ்ரேல் தனது வெளிநாட்டு உளவுப் பணிகளை மொசாட் அமைப்பு மூலம் செய்கிறது. அமைப்புசபாக் அமைப்பு இஸ்ரேலின் நான்கு நடவடிக்கைக் குழுக்களைக் கொண்டது:[2]
இந்த அமைப்பு பாதுகாப்பு முகமையாக இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் பகுதியாக செயல்படாது. இந்த அமைப்பு இஸ்ரேலிய பிரதம அமைச்சரின் அலுவலகத்தின் கீழ் செயல்படுகிறது. விமர்சனங்கள்2023 இஸ்ரேல்-பாலத்தீனம் போரில் காசாக்கரையில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 7 அக்டோபர் 2023 அன்று 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய போதும், ஹமாஸ் குழுவினர் எல்லைப்புற வேலிகளை அகற்றிவிட்டு இஸ்ரேல் பகுதியில் புகுந்து நூற்றுக்கணக்கானவர்களை பணயக் கைதிகளாக சிறைபிடித்தும், கொன்றதற்கும் முன்கூட்டி உளவு அறிய தவறியதற்கு இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு முகமை பொறுப்பேற்றது.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia