ஈட்டி (2015 திரைப்படம்)

ஈட்டி
இயக்கம்ரவி அரசு
தயாரிப்புமைக்கேல் ராயப்பன்
கதைரவி அரசு
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புஅதர்வா
ஸ்ரீதிவ்யா
திருமுருகன் /ஜெயப்பிரகாசு
ஆடுகளம் நரேன்
செல்வா
ஒளிப்பதிவுசரவணன் அபிமன்யு
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்குளோபல் இன்போடெய்ன்மெண்ட் (பி) லிமிடெட்
விநியோகம்குளோபல் இன்போடெய்ன்மெண்ட் (பி) லிமிடெட்
வெளியீடு11 திசம்பர் 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு5 கோடி
மொத்த வருவாய்12 கோடி

ஈட்டி 2015 ஆம் ஆண்டு அதர்வா மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில், ரவி அரசு இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ்குமார் இசையில், எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றதுடன் வணிக ரீதியில் வெற்றி பெற்றது[1][2][3][4][5][6].

கதைச்சுருக்கம்

புகழ் (அதர்வா) ஒரு தடகள வீரர். தடை தாண்டும் ஓட்டத்தில் பல வெற்றிகளையும், பதக்கங்களையும் பெற்றவர். உள்ளூரில் நடைபெற்ற தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் தேசிய அளவிலான சாதனையை முறியடித்தவர். அவரது பயிற்சியாளர் தேவராஜ் (ஆடுகளம் நரேன்) தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளச் செய்வதற்காக அவனுக்கு பயிற்சியளிக்கிறார்.

புகழ் தன் குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசிக்கிறார். அவரது தந்தை சுப்ரமணியன் (ஜெயப்ரகாஷ்) காவலராகப் பணிபுரிகிறார். தன் மகன் தடகளத்தில் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று விரும்பி, அவனை ஊக்கப்படுத்துகிறார். புகழுக்கு உடலில் சிறு காயம்பட்டால் கூட இரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறும் பாதிப்பு உள்ளது. இதனால் அவன் இறக்கவும் நேரலாம்.

சென்னையிலுள்ள கல்லூரி மாணவியான காயத்ரிக்கும் (ஸ்ரீ திவ்யா) புகழுக்கும் அலைபேசியில் பேசிக்கொள்வதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின் காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தது இல்லை. சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள வரும் புகழ் அதைக் காரணமாக் கொண்டு காயத்ரியை சந்திக்கத் திட்டமிடுகின்றான். பயிற்சியாளருக்குத் தெரியாமல் காயத்ரியை சந்திக்கச் செல்லும் புகழ் அங்கு எதிர்பாராவிதமாக காயத்ரியின் அண்ணன் தினேஷால் (திருமுருகன்) ஏகா என்பவனுடன் மோதல் ஏற்படுகிறது. அப்போது நடக்கும் சண்டையில் தன் மீது காயம் படாமல் சாதுர்யமாக சண்டையிடுகிறான். ஆனால் அங்கு அவனை முதன்முதலாக நேரில் பார்க்கும் காயத்ரி அவனைப் பற்றி தவறாக எண்ணுகிறாள்.

காயத்ரியின் பிறந்தநாள் அன்று புகழை சந்திக்கும் தினேஷ் வீட்டுக்கு அழைத்து வருகிறான். வீட்டில் அனைவரிடமும் தன் உயிரைக் காப்பாற்றியவன் என்று புகழை அறிமுகப்படுத்துகிறான். இதனால் குழப்பம் நீங்கும் காயத்ரி, புகழைக் காதலிக்கத் தொடங்குகிறாள். சில நாட்களில் தினேஷ் அவனது எதிரி ஏகாவால் கொல்லப்படுகிறான். புகழின் பயிற்சியாளர் தேவராஜை தாக்குவதால் அவர் படுகாயம் அடைகிறார். இறுதியில் புகழைக் கொல்ல வரும் ஏகா மற்றும் அவனது ஆட்களை காவல் இணை ஆணையர் (செல்வா) புகழின் பாதுகாப்புக்காகக் கொடுத்த அவருடைய துப்பாக்கியினால் சுட்டுக் கொல்கிறான். மறுநாள் நடைபெறும் தடகளப் போட்டியில் கலந்துகொள்ளும் முன் புகழை ஒருவன் காயப்படுத்துகிறான். இரத்தம் தொடர்ந்து வெளியேறும் நிலையிலும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறான். அவனுக்கும் காயத்ரிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இறுதியில் காவல் துணை கண்காணிப்பாளராக தஞ்சாவூரில் பதவியேற்கிறான் புகழ்.

நடிகர்கள்

  • அதர்வா - புகழேந்தி
  • ஸ்ரீ திவ்யா - காயத்ரி
  • சாந்த குமார் - சிறப்புத் தோற்றம்
  • நரேன் - தேவராஜ்
  • செல்வா - ருத்ரகுமார்
  • ரயில் ரவி
  • அச்யுத் குமார் - நசூர் மீரான்
  • ஜெயப்ரகாஷ் - சுப்ரமணியன்
  • அழகம் பெருமாள் - வேணுகோபால்
  • ஆடுகளம் முருகதாஸ் - புகழின் நண்பன்
  • ஆர். என். ஆர். மனோகர் - சம்பத்
  • கவின் ஜே. பாபு
  • திருமுருகன் - தினேஷ்
  • காளி வெங்கட் - செந்தில்
  • கிரேன் மனோகர்
  • ராமச்சந்திரன் துரைராஜ் - ஐசக்
  • அஸ்வின் ராஜா - ரமேஷ்
  • ஸ்ரீ பாலாஜி - சார்லஸ்
  • சுபாஷ் - மதியழகன்
  • ரியாஸ் - கார்த்திக்
  • ஈஸ்வர்
  • சோனியா வெங்கட் - புகழின் தாய்
  • ரிந்துரவி - காயத்ரியின் தாய்
  • ஷாலு சம்மு
  • நித்யஸ்ரீ வெங்கட்ராமன் - புகழின் தங்கை

தயாரிப்பு

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 29 நவம்பர் 2013 இல், அதர்வா தடகள வீரராக இருக்கும் சுவரொட்டி வடிவமைப்பு வெளியிடப்பட்டு துவங்கியது[7].

இசை

படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார். பாடல் வெளியீடு சோனி மியூசிக் இந்தியா.

பாடல் வரிசை
வ. எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 பஞ்சு மிட்டாய் ஏகாதசி ஹரிஹரசுதன் 4:43
2 உன் சுவாசம் நா. முத்துக்குமார் ஜி. வி. பிரகாஷ் குமார், எம்சி விக்கி, மாயா 4:41
3 நான் புடிச்ச மொசக்குட்டியே ஏகாதசி ஜி. வி. பிரகாஷ் குமார், சக்திஸ்ரீ கோபாலன் 4:15
4 ஒரு துளி அண்ணாமலை சித்தார்த் மகாதேவன் 4:16
5 குய்யோ முய்யோ நா. முத்துக்குமார் ரஞ்சித், வந்தனா ஸ்ரீனிவாசன், மாளவிகா சுந்தர் 4:22
6 ஏ லீப் ஆப் பெய்த் : ஈட்டி தீம் (இசைக்கருவிகள்) 1:56

படவெளியீடு

ஈட்டி படத்தின் திரை முன்னோட்டம் வெளியீடு[8][9].

300 திரையரங்குகளில் ஈட்டி திரைப்படம் வெளியானது.[10]

படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சன் தொலைக்காட்சி பெற்றது.

படத்தின் பாடல் வெளியீடு[11]

விமர்சனம்

தி இந்து தமிழ் திசை: விறுவிறுப்பான திரைக் கதையாலும் காட்சிப்படுத்திய விதத்தினாலும் ‘ஈட்டி’ தன் இலக்கை எட்டிவிடுகிறது[12].

இந்தியா க்ளிட்ஸ்: மொத்தத்தில் 'ஈட்டி' கூர்மையானதுதான்[13]

நம்ம தமிழ் சினிமா: படத்தில் நிஜ தடை ஓட்ட வீரனின் உடல் மொழிகளை நூறு சதவீதம் கைக் கொண்டிருக்கிறார் அதர்வா [14] .

மாலைமலர்: விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி பாராட்டைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ரவி அரசு[15].

தமிழ் வெப்டுனியா: ரவி அரசு தெளிவான திரைக்கதையால் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்[16].

தமிழ்.சமயம்.காம்: தஞ்சை கோபுர காட்சிகளில் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு உள்ளிட்டவை 'ஈட்டி 'படத்தின் பெரும் பலங்கள்![17]

மேற்கோள்கள்

  1. "படத்தின் வெற்றி விழா சந்திப்பு".
  2. "ஈட்டி வெற்றி விழா சந்திப்பு".
  3. "ஈட்டி செய்தி தொகுப்பு".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "ஈட்டி".
  5. "ஈட்டி".
  6. "ஈட்டி செய்தித்தொகுப்பு".
  7. "அதர்வா". Archived from the original on 2013-12-02. Retrieved 2019-03-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "ஈட்டி - ட்ரைலர்".
  9. "ஈட்டி- ட்ரைலர்". http://ns7.tv/en/node/132707. [தொடர்பிழந்த இணைப்பு]
  10. "ஈட்டி வெளியீடு". https://cinema.dinamalar.com/tamil-news/39836/cinema/Kollywood/Adharva-starring-Eetti-to-release-in-300-theatres.htm. 
  11. "பாடல் வெளியீடு".
  12. "ஈட்டி விமர்சனம்".
  13. "ஈட்டி விமர்சனம்".
  14. "ஈட்டி விமர்சனம்".
  15. "ஈட்டி விமர்சனம்".[தொடர்பிழந்த இணைப்பு]
  16. "ஈட்டி விமர்சனம்".
  17. "ஈட்டி விமர்சனம்".

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya