அசுத்தமான காற்று, நீர், தூசி, உணவு மற்றும் சுகாதாராமற்ற பொருட்கள் போன்றவற்றின் மூலமாக இந்த நச்சுத்தன்மை ஏற்படலாம்.[1]ஈயவண்ணப்பூச்சு கொண்ட பொருட்களை குழந்தைகள் உட்கொள்வதால் இந்த நச்சுத் தன்மை குழந்தைகளைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.[1]வேலைகளில் உள்ள மன அழுத்தம் காரணமாக விடலைப் பருவங்களில் உள்ளவர்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.[3]குருதியில் உள்ள ஈயத்தின் அளவைப் பொருத்து இது அளவிடப்படுகிறது.[1]அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள நோய்த் தடுப்பு மையமானது குருதியில் உள்ள ஈயத்தின் அளவானது விடலைப் பருவத்தினருக்கு 10 µg/dl (10 µg/100 கி) மற்றும் குழந்தைகளுக்கு 5 µg/dl. எனும் அளவினையும் நிர்ணயித்துள்ளது.[4][5]
ஈய நஞ்சூட்டல் என்பது வருமுன் காக்கக்கூடியது ஆகும்.[1]ஈயத்தினால் செய்யப்பட்ட பொருட்களை வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் தவிர்த்தல் மற்றும் காற்றோட்டமான சூழல் போன்றவற்றின் மூலமாகவும் இதனைத் தவிர்க்கலாம்.[6][7] மேலும் நீர் அல்லது மண் போன்றவற்றில் இருந்து நீக்கப்படவேண்டிய ஈயத்தின் அளவுகள் மற்றும் வண்ணப்பூச்சு மற்றும் பாறை எண்ணெய் போன்றவற்றில் சட்டத்தின் படியான அளவுகளில் ஈயத்தினைச் சேர்ப்பது போன்றவற்றின் மூலமாகவும் இதனைத் தவிர்க்கலாம்.[1][6][8] இடுக்கல் சிகிச்சை போன்றவற்றின் மூலமாகவும் இதனைக் குணப்படுத்தலாம்.[8] இந்த சிகிச்சையானது குழந்தைகளின் குருதியில் உள்ள ஈயத்தின் அளவானது 40–45 µg/dl விட அதிகமாக இருக்கும் போது செய்யப்படுகிறது.[8][9]
National Institute for Occupational Safety and Health. "Lead". NIOSH Workplace Safety & Health Topics. Centers for Disease Control and Prevention.
National Pollutant Inventory. "Lead and compounds: Health effects". Fact Sheets. Canberra, Australia: Department of Sustainability, Environment, Water, Population and Communities. Archived from the original on 2012-03-20. Retrieved 2018-10-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
தேசிய பாதுகாப்பு குமுகம் (2008). "Lead Poisoning"(PDF). Fact Sheets. Itasca, Illinois, U.S.: National Safety Council.
Küpper, Hendrik (2017). "Chapter 15. Lead Toxicity in Plants". In Astrid, S.; Helmut, S.; Sigel, R. K. O. (eds.). Lead: Its Effects on Environment and Health. Metal Ions in Life Sciences. Vol. 17. de Gruyter. pp. 491–500. doi:10.1515/9783110434330-015.