ஈரயோடோசில் சல்பேட்டு
ஈரயோடோசில் சல்பேட்டு (Diiodosyl sulfate) என்பது (IO)2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடினும் கந்தக அமிலமும் சேர்ந்து இந்த கார உப்பு உருவாகிறது. மஞ்சள் நிறத்தில் படிகங்களாக ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது. [1] தயாரிப்புஅயோடிக் அமிலமும் கந்தக அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது:
கந்தக அமிலத்திலுள்ள அயோடின் கரைசல் வழியாக ஓசோனாக்கப்பட்ட ஆக்சிசனைச் சேர்த்தால் வினை நிகழ்ந்து ஈரயோடோசில் சல்பேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்ஈரயோடோசில் சல்பேட்டு மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. குளிர்ந்த நீரில் குறைவாகக் கரைகிறது.[2] அடர் கந்தக அமிலத்தில் ஈரயோடோசில் சல்பேட்டு கரையும். பின்னர் இதை இக்கரைசலில் இருந்து மறுபடிகமாக்கலாம். வேதிப் பண்புகள்வளிமண்டல ஈரப்பதத்தின் செல்வாக்கினால் ஈரயோடோசில் சல்பேட்டு நீராற்பகுப்புக்கு உட்பட்டு அயோடின், அயோடிக் அமிலம் மற்றும் கந்தக அமிலமாக சிதைகிறது. ஈரயோடோசில் சல்பேட்டை சூடுபடுத்தினாலும் சிதைவடைகிறது:[3]
கந்தக(VI) ஆக்சைடுடன் ஈரயோடோசில் சல்பேட்டு வினையில் ஈடுபடுகிறது:[4]
அடர் கந்தக அமிலத்துடன் சேர்ந்து ஓர் அமில உப்பை ஈரயோடோசில் சல்பேட்டு உருவாக்குகிறது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia