ஈரோடு புத்தகத் திருவிழா
ஈரோடு புத்தகக் கண்காட்சி அல்லது ஈரோடு புத்தகத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் வ உ சி பூங்காவில் நடத்தப்படும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. 2005 ஆம் ஆண்டு முதல் இந்தக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப் பெற்று வருகின்றது. கண்காட்சி அரங்குகள்12 நாட்கள் நடத்தப் பெறும் இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படும். இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும். பத்து நாட்கள் நடத்தப்படும் இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படும். 2014 வருடத்திற்கான ஈரோடு புத்தகத் திருவிழாஆகஸ்ட் 1-இல் ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் துவங்கியது. ஆகஸ்டு 12 வரை நடைபெற்றது. ஆகஸ்டு 1 மாலை ஆறு மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார். "தமிழ்வேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத் தமிழர் படைப்பரங்கம்' என்ற உலகத் தமிழர் படைப்புகளுக்கான அரங்கில் பிற நாடுகளில் வசிக்கும் படைப்பாளர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] கருத்தரங்கம்இக்கண்காட்சியில் மாலை 5. 30 மணிக்கு முக்கிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவை இடம் பெற்றன. திட்டமிடப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சிகள்: ஆகஸ்ட் 2014
மேற்கோள்கள்இதையும் பார்க்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia