ஈரோடு மகிமாலீசுவரர் கோயில்

மகிமாலீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:மகிமாலீசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

ஈரோடு மகிமாலீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் அமைந்துள்ளது. இரு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் இவ்வூர் ஈரோடை என்றழைக்கப்பட்டு, பின்னர் ஈரோடு என்றானது. இவ்வூர் முன்னர் மகிமாலீசுவரம் என்றழைக்கப்பட்டது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக மகிமாலீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி மங்களாம்பிகை ஆவார். சித்திரை சதய நட்சத்திரத்தில் தேர்த் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]

அமைப்பு

இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல் கீழே விழாத வகையில் உள்ளது. 63 நாயன்மார்கள் சிலைகளும் 16 வகை லிங்கத் திருமேனிகளும் உள்ளன. [1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya