உக்கிர மூர்த்திகள்உக்கிர மூர்த்திகள் என்பது பௌத்தர்களால் வணங்கப்படும் உக்கிர உருவத்தில் இருக்கும் தேவர்கள் அல்லது போதிசத்துவர்களைக்குறிக்கும். இவர்கள் அமைதியான போதிசத்துவர்களின் அல்லது தேவர்களின் உக்கிரமான அவதாரங்களாக கருதப்படுகின்றனர். இவர்களது உக்கிரத்தை குறிக்க, இவர்கள் மிகவும் பயமுறுத்தும் வகையிலும், ரத்தம், மண்டை ஓடு போன்றவற்றை தாங்கியவர்கள் போலவும் பயங்கரமாக சித்தரிக்கப்படுகின்றனர்.[1][2][3] இவர்களுடைய சித்தரிப்பு பௌத்த கருத்துகளுக்கு அந்நியமாக தோன்றினாலும், இவர்களில் சித்தரிப்பு வெறும் உருவகமே என்பதை கருத்தில் கொள்வது அவசியம். இவர்கள் இந்த உக்கிரம் மனதில் எழும் தீய எதிர்மறையான எண்ணங்களை அழிக்க நிகழும் ஆற்றல் மிகுந்த செயல்களின் உருவகம் ஆகும். எனவே இவர்கள் நம்முடைய தீய எண்ணங்களை அழிப்பத்தற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளின் அடையாளமே இந்த உக்கிர மூர்த்திகள். மேலும் இவர்கள் தர்மத்தை பின்பற்றுவர்களின் பாதுகாவலர்காளகவும் விளங்குகின்றனர். உக்கிர மூர்த்திகளை கீழ்க்கண்ட பிரிவுகளாக பிரிக்கலாம்:[1]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia