உச்சவிரும்பி

மஞ்சள் கல் தேசியபூங்காவில் உள்ள படிக வெந்நீர் ஊற்றில் வசிக்கும் மிகைவெப்ப விரும்பிகள் இந்த பிரகாசமான நிறத்தை உண்டாக்குகின்றன

உச்சவிரும்பி (Extremophile) என்பது புவியில் வாழும் பெரும்பாலான உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாழ்விடச் சூழலில் தழைத்து வளரும் உயிரினம் ஆகும்.

1980 மற்றும் 90களில் நுண்ணுயிர்கள் உச்ச அளவான சூழலில் வாழும் திறன் பெற்றுள்ளன என்பதை உயிரியலாளர் கண்டறிந்தனர். வெந்நீர் ஊற்றுகள், உறைபனி, அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சு வாயுக்கள், ஆக்சிஜனே இல்லாமை போன்ற சூழலிலும் உயிர்கள் வாழ்வது அறியப்பட்டுள்ளது.

இந்த உயிரினங்கள் அவ்வவற்றிற்கே உரிய சூழல் முடுக்கை நன்கு பயன்படுத்திக் கொண்டது புவியின் தொடக்க காலங்களில் உயிரினங்கள் தோன்ற வழிவகுத்தது என்று கருதப்படுகிறது.[1]

வகைகள்

அமிலவிரும்பி

3 மற்றும் அதற்கு குறைவான pH உள்ள சூழலில் வாழும் உயிரினம்.

காரவிரும்பி

9 மற்றும் அதற்கு அதிகமான pHஉள்ள சூழலில் வாழும் உயிரினம்

உப்பு விரும்பி

வாழ்வதற்கு அதிக உப்பு அவசியம் தேவைப்படும் உயிரினம்

மிகைவெப்ப விரும்பி

80 - 122 டிகிரி செல்சியசு வெப்பநிலையில் வாழும் உயிரினம்

கதிர்வீச்சு எதிர்ப்பி

புறஊதா கதிர்வீச்சு மற்றும் உட்கருக் கதிர்வீச்சையும் எதிர்த்து வாழும் உயிரினம்

வெப்பஅமில விரும்பி

வெப்ப மற்றும் அமில விரும்பி

உலர் விரும்பி

உச்ச கட்ட உலர் சூழலில் (பாலைவனம்) வாழும் உயிரினம்

சான்றுகள்

  1. Gouy M. & Chaussidon M. 2008. Ancient bacteria liked it hot. Nature 451: p635.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya