உச்சி (வடிவவியல்)வடிவவியலில் உச்சி (ⓘ) என்பது சிறப்புவகையானதொரு புள்ளியாகும். இப்புள்ளிகள் வடிவவியல் வடிவங்களின் முனைகள் மற்றும் வெட்டுமிடங்களைக் குறிக்கின்றன. கணிப்பொறி வரைகலையில், உச்சிகளானவை, முப்பரிமாண மாதிரிகளில் மேற்பரப்புகளின்(குறிப்பாக முக்கோணங்கள்) முனைகளை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முனைகள் ஒவ்வொன்றும் ஒரு திசையன்களால் குறிக்கப்படுகின்றன.[1][2][3] ![]() வரையறைகள்கோணத்தின் உச்சி![]() ஒரு கோணத்தின் உச்சி என்பது இரு கதிர்கள்(rays) அல்லது இரு கோடுகள் அல்லது இரு கோட்டுத்துண்டுகள், ஆரம்பிக்கும் அல்லது சந்திக்கும் புள்ளியாகும். அல்லது இரு நேர்பக்கங்கள் உருவாகக்கூடிய விதத்தில் அமையும், இரு கதிர்கள் அல்லது இரு கோடுகள் அல்லது இரு கோட்டுத்துண்டுகளின் சேர்ப்பாகவும் கோணத்தின் உச்சியைக் கூறலாம். பல்பரப்பின் உச்சி
குவிவு/குழிவுஒரு பலகோணத்தில், ஒரு உச்சியை உருவாக்கும் இரு விளிம்புகளுக்குகிடையேயுள்ள உட்கோணமானது π ரேடியனுக்கும் குறைவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது என அழைக்கப்படும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும். ஒரு பன்முகத்திண்மம் அல்லது ஒரு பல்பரப்பின் உச்சிகள் குவிவானதாக இருக்க வேண்டுமானால், அந்த உச்சியை மையமாகக் கொண்ட சிறிய அளவிலான (போதுமான அளவு) கோளம் குவிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும். அதாவது ஒரு பன்முகத்திண்மம் அல்லது ஒரு பல்பரப்பின் உச்சியை மையமாகக் கொண்ட சிறிய அளவிலான (போதுமான அளவு) கோளமும் அந்த பன்முகத்திண்மம் அல்லது பல்பரப்பும் வெட்டிக் கொள்ளும் பகுதி குவிவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது ஆகும், இல்லையெனில் அந்த உச்சி குழிவானது எனப்படும். முதன்மை உச்சிஎளிமையான ஒரு பலகோணத்தின் ஒரு உச்சி ஆனது, முதன்மை உச்சியாக இருக்க வேண்டுமானால்:
முதன்மை உச்சிகளில் காதுகள் மற்றும் வாய்கள் என இரு வகை உண்டு. (ears and mouths) காதுகள்எளிமையானதொரு பலகோணம் P -ன் ஒரு முதன்மை உச்சி - ஆனது காது என அழைக்கப்பட வேண்டுமானால், -ஐ இணைக்கும் மூலைவிட்டம் , முழுவதுமாக P -பலகோணத்திற்குள்ளாகவே அமைய வேண்டும். வாய்கள்எளியதொரு பலகோணம் P -ன் ஒரு முதன்மை உச்சி - ஆனது வாய் என அழைக்கப்பட வேண்டுமானால், மூலைவிட்டம் , P -பலகோணத்திற்கு வெளியே அமைய வேண்டும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia