உடன்போக்குஉடன்போக்கு என்பதைத் "கொண்டுதலைக் கழிதல்" என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] காதல் கொண்ட தலைவன் தன்மீது காதல் கொண்ட தலைவியைத் தன் ஊருக்கு அழைத்துச் செல்வதைத் தொல்காப்பியர் கொண்டுதலைக் கழிதல் என்கிறார். காதலனுடன் காதலி சென்றாள் என்னும் பொருள்படப் பிற்கால இலக்கணங்கள் அதனை உடன்போக்கு எனக் குறிப்பிடுகின்றன. இது பாலைத்திணை உரிப்பொருளில் அடங்கும் செய்தி. பண்டைய தமிழகத்தில் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர்க்குச் சொல்லாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுவது என்று பொருள்படும். தலைவி தலைவனுடன் செல்வதால் உடன் போக்கு என்று கூறப்படுகிறது. தோழி அறிவுரை கூறி தலைவியைத் தலைவனுடன் அனுப்புதல் [2] செவிலி அனுப்பிவைத்தல் [3] பற்றிய பாடல்கள் சங்க நூல்களில் உள்ளன. தற்காலம்தற்காலத்தில் இது வீட்டை விட்டு ஓடுதல் என்று கூறப்படுகிறது. அந்த காதலர்கள் ஓடுகாலி என்ற வசவுச் சொல்லாலும் தற்காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.[4] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia