உதாசிஉதாசி (Udasi) என்பது வட இந்தியாவை மையமாகக் கொண்ட துறவற சாதுக்களின் மத பிரிவாகும். உதாசிகள் சீக்கிய தத்துவத்தின் முக்கிய உரைபெயர்ப்பாளர்களாகவும், அகாலி இயக்கம் தலையெடுக்கும் வரை முக்கியமான சீக்கிய ஆலயங்களின் பாதுகாவலர்களாகவும் இருந்தனர். இவர்கள் 18ஆம், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல மதமாற்றங்களை சீக்கிய தத்துவத்துக்குள் கொண்டு வந்தனர். [1] இருப்பினும், இவர்களின் மத நடைமுறைகள் சீக்கியம் மற்றும் இந்து மதத்தின் ஒத்திசைவின் எல்லையாகும். கால்சா சீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்திய சிங் சபைகள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீக்கிய அடையாளத்தை மறுவரையறை செய்தபோது, உதாசி மஹந்தர்கள் சீக்கிய ஆலயங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [2] அப்போதிலிருந்து, உதாசிகள் சீக்கியர்களை விடத் தங்களை இந்துக்களாகவே கருதுகின்றனர். [3] வரலாறு"உதாசி" என்ற சொல் சமசுகிருத வார்த்தையான "உதாசின்" என்பதிலிருந்து உருவானது, [4] அதாவது "பிரிக்கப்பட்ட, பயணம்", ஆன்மீக மற்றும் தற்காலிக வாழ்க்கைக்கான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. [5] அல்லது உதாசிலிருந்து ("பற்றின்மை"), உலக அக்கறைகளை கைவிடுதல் என்பதை குறுக்கிறது. [6] குருநானக்கின் மூத்த மகன் ஸ்ரீ சந்த் (1494-1643) அவர்களின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. அவர் சமூகத்தில் பங்கேற்பதில் தனது தந்தையின் முக்கியத்துவத்திற்கு மாறாக, சந்நியாசத்தையும், பிரம்மச்சரியத்தை பரப்பினார். மற்றொரு சீக்கிய பாரம்பரியம் உதாசிகளை குரு அர்கோவிந்தின் மூத்த மகனான பாபா குர்திட்டாவுடன் இணைக்கிறது. மேலும் உதாசிகள் ஸ்ரீ சந்த் அல்லது குர்திட்டாவிலிருந்து தோன்றியதா என்பது குறித்து சர்ச்சை உள்ளது. [7] வழிபாடுஉதாசிகள் சிவன், விஷ்ணு, துர்க்கை, பிள்ளையார், சூர்ய தேவன் ஆகிய ஐந்து இந்து தெய்வங்கள் அடங்கிய பஞ்சாயத்தானையும் வணங்குகிறார்கள். [8] மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia