உத்ரெக்ட்
உத்ரெக்ட் (Utrecht, /ˈjuːtrɛkt/; டச்சு ஒலிப்பு: [ˈytrɛxt] (ⓘ)) டச்சு மாகாணமான உத்ரெக்ட்டின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும். இது இரான்ட்சுடாடு நகரத்தொகுதியின் கிழக்கு மூலையில் உள்ளது. நெதர்லாந்திலுள்ள நகராட்சிகளில் நான்காவது மிகப் பெரும் நகராட்சியாக விளங்குகின்றது. 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 330,772 ஆக இருந்தது. உத்ரெக்ட்டின் தொன்மையான நகரமையம் பிந்தைய நடுக்காலத்துக் கட்டிடங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டிலிருந்து இது நெதர்லாந்தின் சமய மையமாக விளங்குகின்றது. டச்சுப் பொற்காலம் வரை இதுவே நெதர்லாந்தின் மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது; நாட்டின் பண்பாட்டு மையமாகவும் மிகவும் மக்கள்தொகை மிகுந்த நகரமாகவும் ஆம்ஸ்டர்டம் முன்னேறியது. 1321க்கும் 1382க்கும் இடையே கட்டப்பட்ட டோம்கெர்க் பேராலயம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.[6] 1674இல் ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் இப்பேராலயத்தின் ஒரு பகுதி அழிபட்டது. இப்பகுதி மீண்டும் கட்டப்படவில்லை. எனவே இப்பகுதி பேராலயத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக உள்ளது. நெதர்லாந்தின் பெரியப் பல்கலைக்கழகமான உத்ரெக்ட் பல்கலைக்கழகம் இங்குள்ளது. தவிரவும் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்நகரில் உள்ளன. நாட்டின் மையத்தில் இருப்பதால் இருப்பூர்தி, சாலைப் போக்குவரத்துக்கு மையச்சாக விளங்குகின்றது. பண்பாட்டு நிகழ்வுகளில் ஆம்சுட்டர்டாமை அடுத்து நாட்டின் இரண்டாமிடத்தில் உள்ளது.[7] 2012இல் லோன்லி பிளானட் உலகின் பாராட்டப்படாத இடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் உத்ரெக்ட்டை சேர்த்துள்ளது. ![]() மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia