உந்தத்திறன் ஒப்பளவுஉந்தத்திறன் ஒப்பளவு (moment magnitude scale, சுருக்கி MMS; குறியீடு: MW) நிலநடுக்கங்கள் வெளிப்படுத்தும் ஆற்றல் அடிப்படையில் அவற்றின் அளவை மதிப்பிடும் ஓர் நிலநடுக்கவியல் அளவையாகும்.[1] நில நடுக்கத்தின் நில அதிர்வு உந்தத்திறனைக் கொண்டு இந்த ஒப்பளவு கணக்கிடப்படுகிறது; நில அதிர்வு உந்தத்திறன் புவியின் இறுக்கத்தினை சராசரி பாறையடர்த்தி இடைவெளியில் நகர்வின் அளவு மற்றும் நகர்ந்த புவிப்பரப்பு இவற்றால் பெருக்கிப் பெறுவதாகும்.[2] 1930களின் ரிக்டர் அளவிற்கு (ML) மாற்றான ஒன்றாக 1970களில் உருவாக்கப்பட்டது. இவற்றின் சூத்திரங்கள் வெவ்வேறானவையாக இருந்தபோதும் இந்தப் புதிய ஒப்பளவு பழையதின் வழக்கமான தொடர்ச்சியான அளவு மதிப்புகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த ஒப்பளவே தற்போது ஐக்கிய அமெரிக்க நிலப்பொதியியல் அளவீடு அமைப்பால் அண்மைக்கால பெரும் நிலநடுக்கங்களை மதிப்பிட பயன்படுத்துகிறது. .[3] வரைவிலக்கணம்உந்தத்திறன் ஒப்பளவு , என்பதால் குறிக்கப்படுகிறது, இங்கு என்பது செய்யப்பட்ட பொறிமுறை வேலை ஆகும். பரிமாணமில்லா எண்ணான உந்தத்திறன் பின்வருமாறு வரையறுக்கப்படும்: இங்கு நிலநடுக்கம் சார்ந்த உந்தத்தின் அளவு. இது தைன் செண்டிமீட்டர்களில் (10−7 நியூ.மீ)[1] தரப்படும். மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia