உபாசனா அல்லது வித்யை அல்லது வேதகால தியானம் (Upasana) (சமசுகிருதம்: उपासना) என்பது ஏதேனும் ஒரு பயனுக்காக, உருவத்துடன் கூடிய ஒரு குறிப்பிட்ட இறைவனை (இஷ்ட தேவதை) அல்லது ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து பல காலம் மனதால் தொடர்ந்து நினைப்பதே ஆகும்.[1][2] .தியானம் என்பது மனதை ஒரு முகப்படுத்தும் செயலாகும். உபநிடதங்களில் பல்வேறு பலன்களுக்கு பல்வேறு உபாசனைகள் கூறப்பட்டுள்ளது.[3].[4]
வேத காலத்தில் இந்திரன், வாயு, வருணன், ருத்ரன், அக்கினி போன்ற தேவதைகளை திருப்தி செய்து நல்வாழ்வு பெற வேண்டி யாகங்கள் செய்யப்பட்டது.
யாகங்கள் செய்வதால் கிடைக்கும் பலனைகளை விட பலமடங்கு பயன்கள் தரத்தக்கதான ஈஸ்வர உபாசனைகள் அல்லது வித்யைகள் உபநிடத ரிஷிகள் அறிமுகப்படுத்தினர். இவ்வுபாசனைகளால் ஆன்மீக வளர்ச்சி உண்டாயிற்று.
உபநிடத உபாசனைகள்
உபநிடதங்களில் பல்வேறு நன்மைகளுக்காக 34 உபாசனைகள் கூறப்பட்டுள்ளது. ஒரே உபாசனை ஒன்றிக்கும் மேற்பட்ட உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது.
↑Edward F Crangle (1994), The Origin and Development of Early Indian Contemplative Practices, Otto Harrassowitz Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-3447034791, pages 59-63