உபுண்டு (இயக்குதளம்)
உபுண்டு (/ʊˈbʊntuː/ uu-BUUN-too)[1][2] (Ubuntu) என்பது, குனூ/லினக்சு இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். இது டெபியனை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற, திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்றுமுழுதாக இலவசமாகக் கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களைப் பணம் எதுவும் செலுத்தாமல் அஞ்சல் மூலம் பெறக்கூடியதாக இருந்தது. உபுண்டு என்ற ஆப்பிரிக்கச் சொல்லிற்கான பொருள், மானிட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்சு" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.[3] வெளியீடுகள்![]() ![]() உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டபடி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், 18 அக்டோபர், 2007 அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் தளையறு மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீடுகள் தமக்கென தனித்தனியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும் கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும் குறிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக உபுண்டு 4.10 ஆனது 2004 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் வெளிவந்ததாகும்.
இவ்வழங்கலை கொண்டு அன்றாட கணினி பாவனைகள் அனைத்தையும் செய்யமுடியும். அத்தோடு வழங்கியாகவும் இதனை பயன்படுத்த முடியும். மேசைக்கணினிகளைப் போலவே மடிக்கணினிகளுக்கும் இது சிறப்பான ஆதரவை வழங்குகிறது. மார்க் ஷட்டில்வர்த் (Mark Shuttleworth) என்பவருடைய கனோனிக்கல் நிறுவனம் (Canonical Ltd) எனும் நிறுவனம்[19] உபுண்டுவுக்கு அனுசரணை வழங்குகிறது. தன்மைகள்![]()
மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்![]() நிறுவும் போது, நாம் தெரிவு செய்ய வேண்டிய கேடிஇ திரைமேலாளர்கள் உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,
Mainஇதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், இற்றைப்படுத்தல்களும் வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன. Restrictedஇதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத வன்பொருள் இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணியினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம். Universeஇப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது. Multiverseஇதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் பொது மக்கள் உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை. மேகக் கணினி கூட்டம் (Cloud computing)உபுண்டு சர்வர் பதிப்பு மேகக் கணினி கூட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. (உபுண்டு 11.04 பதிப்பும் அதற்கு மேலும்) உபுண்டு வழங்கலின் வடிவங்கள்பல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது. இயக்கும் முறையை அடிப்படையாகக்கொண்ட வடிவங்கள்
வன்பொருள் கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வடிவங்கள்கணினியில் பொருத்தப்பட்டுள்ள முறைவழியாக்கியின் (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன.
உபுண்டுவின் அளவுகள்சகோதர செயற்றிட்டங்கள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia