உயிரணு தன்மடிவு
உயிரணு தன்மடிவு என்பது திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பின் (பிசிடி) செயல்முறையாகும். இந்த செயல்முறை பல உயிரணுக்கள் கொண்ட உயிரினங்களில் நிகழலாம். திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பில், தொடர்ந்து நடைபெறக்கூடிய உயிரி ரசாயனத்துக்குரிய நிகழ்வுகள் உள்ளடங்கியுள்ளன. இது குறிப்பிடத்தக்க உயிரணு உருவியல் மற்றும் இறப்பு ஏற்பட வழிவகுக்கிறது; குறிப்பாக சொல்லப்போனால், தொடந்து ஏற்படும் உயிரி ரசாயனத்துக்குரிய நிகழ்வினால் பலவகையான உருவியல் சார்ந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களில் உள்ளடங்குபவை: கொப்புளம் ஏற்படுதல், ஜவ்வு சமச்சீரின்மை மற்றும் பற்று தன்மையை இழத்தல், உயிரணு சுருங்குதல், அணுக்கரு துண்டாகுதல், குரோமட்டின் சுருங்குதல் மற்றும் நிறமி சார்ந்த டிஎன்ஏ துண்டாகுதல் (1-4) போன்ற மாற்றங்கள் உயிரணு ஜவ்விற்கு நிகழும். (அப்போப்டொசிஸ் டிஎன்ஏ துண்டாகுதலை காண்க.) உயிரணு சிதைவுக்கூளங்களின் அகற்றல் செய்முறைகளினால் உயிரினங்களுக்கு சேதம் ஏற்படாது. இது நசிவிலிருந்து அப்போப்டொசிஸை வேறுபடுத்துகிறது. ![]() நசிவுக்கு முரணாக, கடுமையான உயிரணுக் காயத்தின் காரணமாக உயிரணு இறப்பு ஏற்படுகிறது. பொதுவாக, அப்போடொசிஸ், உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சியின் போது பலன்களை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, விரல்களுக்கு இடையே உள்ள உயிரணுக்கள் இறப்பதன் காரணத்தினால் வளரும் மனித மூலவுருவில் கை விரல்கள் மற்றும் கால் விரல்களில் வேறுபாடு ஏற்படுகிறது; இதனால் விரல்கள் பிரிக்கப்படுகின்றன. ஒரு சராசரி வயதுவந்த மனிதனில், அப்போப்டொசிஸின் காரணத்தினால் ஒவ்வொரு நாளும், 50 முதல் 70 பில்லியன் வரை உயிரணுக்கள் இறக்கும். 8 முதல் 14 வயது வரை உள்ள ஒரு சராசரி குழந்தைக்கு, ஒரு நாளில் சுமார் 20 பில்லியன் முதல் 30 பில்லியன் வரை உயிரணுக்கள் இறக்கும். ஒரு வருடத்தில், உயிரணுக்களின் தொகுதியின் அடுத்தடுத்தான அழிவு மற்றும் இனப்பெருக்கத்திற்கான இந்த அளவுகள், ஒரு தனிநபரின் உடல் எடைக்கு சமமாக இருக்கும். 1990களின் ஆரம்ப காலத்திலிருந்து அப்போப்டொசிஸை குறித்து செய்யப்படும் ஆராய்ச்சி போதுமான அளவு அதிகரித்துள்ளது. இது ஒரு உயிரியல் சார்ந்த நிகழ்வாகும். இதனுடைய முக்கியத்துவத்திற்கு கூடுதலாக, குறைபாடுள்ள திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு செயல்முறைகள், நோய்களின் நீடித்த வகையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. குருதியூட்டகுறை சார்ந்த நோயில் ஏற்படுவது போன்றே அதிகரித்த அப்போப்டொசிஸினால் ஹைட்ரோடிரோஃபி ஏற்படுகிறது. அப்போப்டொசிஸ் நிகழ்வு போதிய அளவு நடைபெறாவிட்டால், புற்றுநோய் போன்று கட்டுப்படுத்த முடியாத உயிரணு இனப்பெருக்கம் ஏற்பட வழிவகுக்கும். கண்டறிதல் மற்றும் சொற்பிறப்பியல்உயிரணு இறப்பு என்பது ஓர் உயிருள்ள உயிரினத்தில் முற்றிலும் இயல்பாக நிகழும் செயல்முறையாகும். இந்நிகழ்வு 100 வருடங்களுக்கு முன்னதாக அறிவியல் அறிஞர்களால் முதன் முதலாக கண்டறியப்பட்டது. 1842 ஆம் ஆண்டில், கார்ல் வாக்ட் என்ற ஒரு ஜெர்மனிய அறிவியல் அறிஞர், முதன் முதலாக அப்போப்டொசிஸின் கொள்கைகளை விவரித்தார். 1885 ஆம் ஆண்டில், வால்தெர் ஃப்லெம்மிங் என்ற உடற்கூறு வல்லுநர், திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பின் செயல்முறையை இன்னும் துல்லியமாக விளக்கினார். எனினும், 1965 ஆம் ஆண்டு வரை, இதை பற்றிய விஷயங்கள் பேசப்படவே இல்லை. யூனிவர்சிட்டி ஆஃப் குவின்ஸ்லாண்டில், ஜான் ஃபாக்ஸ்டன் ராஸ் கெர் என்பவர் மின்னணு நுண்ணோக்கியின் மூலம் திசுக்களை ஆய்வு செய்து வந்தார். இந்த ஆய்வின் போது, அப்போப்டொசிஸை ( கிரேக்கம்: apo - என்பதிலிருந்து ptosis - விழுதல்) காயத்தினால் ஏற்படும் உயிரணு இறப்பிலிருந்து வேறுபடுத்தி காண்பித்தார்.[1] தோற்றநிலைக் கொள்கையின் விவரிப்பு தாளின் வெளியீட்டை பின்தொடர்ந்து, அலாஸ்தர் ஆர். குர்ரீ மற்றும் யூனிவர்சிட்டி ஆஃப் அபர்டீனில் குர்ரீயின் பட்டதாரி மாணவரான ஆண்ட்ரூ வைலீ[2] ஆகியோருடன் இணைந்துக்கொள்ளும்படி கெர் அழைக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டில், மூவரும் சேர்ந்து பிரித்தானிய ஜர்னல் ஆஃப் கான்சரில் ஒரு புதுமையான கட்டுரையை வெளியிட்டனர்.[3] கெர் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட உயிரணு நசிவு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். ஆனால் கட்டுரையில், இயற்கையான உயிரணு இறப்பின் செயல்முறை அப்போப்டொசிஸ் என்று கூறப்பட்டிருந்தது. கெர், வைலீ மற்றும் குர்ரீ ஆகியோர் அப்போப்டொசிஸ் என்ற சொல்லை அறிவுறுத்தியதற்காக யூனிவர்சிட்டி ஆஃப் அபர்டீனின் கிரேக்க மொழி பேராசிரியரான ஜேம்ஸ் கார்மக் என்பவருக்கு நன்றி உரைத்திருந்தனர். கெர், அப்போப்டொசிஸை குறித்த தன்னுடைய விளக்கவுரைக்காக , பால் எர்லிச் மற்றும் லுட்விக் டார்ம்ஸ்டாட்டர் பரிசை, மார்ச் 14ம் தேதி 2000த்தில் பெற்றார். அவர் பாஸ்டன் உயிரியல் வல்லுநரான ராபர்ட் ஹார்விட்ஸுடன் அந்த பரிசை பகிர்ந்துகொண்டார்.[4] கிரேக்கத்தில் அப்போப்டொசிஸ் என்பதற்கு செடிகள் அல்லது மரத்திலிருந்து இதழ்கள் அல்லது இலைகள் "விழுதல்" என்று அர்த்தம்கொள்ளபடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிரேக்கத்தில் இதற்கு மருத்துவ அர்த்தம் இருந்ததால், கிரேக்க மொழி பேராசிரியரான கார்மக் என்பவர் இந்த சொல்லை மருத்துவ பயன்பாட்டிற்காக மறுபடியும் அறிமுகப்படுத்தினார். முற்கால கிரேக்க மருத்துவர்கள் இந்த சொல்லை "எலும்புகளிலிருந்து விழுதல்" என்ற அர்த்தத்திற்காக பயன்படுத்தினர். கிரேக்க உடற்கூறு வல்லுநர்கள் இதனுடைய அர்த்தத்தை "உதிரும் படைகள் விழுதல்" என்பதற்கும் பயன்படுத்தினர். இந்த பெயரை கார்மக் அறிவுறுத்தும் போது, இதனுடைய பயன்பாட்டை குறித்து அவருக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் இருந்தது. இரண்டாவது p எழுத்து உச்சரிப்பின் போது சொல்லப்படக்கூடாது (உச்சரிப்பு /æpəˈtoʊsɨs/ "ap-a-tow'-sis"[5]) மற்றும் இரண்டாவது p எழுத்து கிரேக்கத்தில் உச்சரிக்கப்படுவது (உச்சரிப்பு /æpəpˈtoʊsɨs/),[6] போன்றே உச்சரிக்கப்படவேண்டும் என்று இரண்டு வகையாக கருத்துக்கள் நிலவின. அந்த சொல்லை சரியாக உச்சரிப்பதில் வாதம் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.[சான்று தேவை] ஆங்கிலத்தில், கிரேக்க -pt- மெய்யெழுத்து தொகுப்பில் p என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வரும் போது உச்சரிக்கப்படமாட்டாது (எடுத்துக்காட்டாக, pterodactyl (டெரோடாக்டைல்), Ptolemy (டாலமி) (இது போன்ற சொல்லில் 'P' என்ற எழுத்து உச்சரிக்கப்படமாட்டாது)). ஆனால், helicopter (ஹெலிக்காப்டர்) அல்லது பூச்சிகளின் வகைகளில் diptera (டிப்டேரா) , lepidoptera (லெப்பிடாப்டெரா) போன்ற சொற்களில் உயிரெழுத்து முன்வரும் வடிவங்களுடன் இணைந்து வரும் போது 'p' என்ற எழுத்து உச்சரிக்கப்படுகின்றது. பிரித்தானிய ஜர்னல் ஆஃப் கான்சர், 1972ம் ஆண்டு ஆகஸ்டு;26(4):239-57ல் உள்ள கெர், வைலீ மற்றும் குர்ரீ ஆகியோரின் மூல தாளில் உச்சரிப்பு குறித்த அடிக்குறிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். "யூனிவர்சிட்டி ஆஃப் அபர்டீனில் கிரேக்க துறையில் பேராசிரியரான ஜேம்ஸ் கார்மக்கிற்கு, இந்த சொல்லை அறிவுறுத்தியதற்காக, நாங்கள் அதிகமாக நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். "apoptosis" (அப்போப்டொசிஸ் என்பதன் கிரேக்க எழுத்துக்கோர்வை) என்ற வார்த்தை கிரேக்கத்தில், பூக்களிலிருந்து இதழ்கள் "கீழே விழுதல்" அல்லது மரத்திலிருந்து இலைகள் "விழுதல்" என்பதை விவரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மூலத்தோற்றைத்தை தெளிவாக காண்பிப்பதற்காக, கடைசிக்கு முந்தைய அசையில் அழுத்தம் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். சொல்லின் இரண்டாவது பாதி "ptosis" (டொசிஸ்) ("p" என்ற எழுத்து உச்சரிக்கப்படக் கூடாது) என்று உச்சரிக்கப்படவேண்டும். இது "விழுதல்" என்ற அதே பொருளிலிருந்து தான் வந்துள்ளது மற்றும் இது சோர்வடைந்த மேல் இமையை விவரிப்பதற்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது." செயல்பாடுஉயிரணு தீர்முனைப்புஒரு உயிரணு சரிசெய்ய முடியாத அளவிற்கு பழுதாகியிருந்தாலும், வைரசினால் தொற்றடைந்திருந்தாலும் அல்லது பசி போன்ற அயர்வு நிலையின் ஊடாக சென்றிருந்தாலும் அப்போப்டொசிஸ் ஏற்படலாம். அயனியாக்க கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்ட டிஎன்ஏ அல்லது நச்சு வேதிப்பொருட்கள் ஆகியவற்றால் கட்டி-ஒடுக்கும் மரபணு p53 ன் செயல்கள் மூலமாக அப்போப்டொசிஸ் தூண்டப்படலாம். அப்போப்டொசிஸ் ஏற்படுவதற்கான "முடிவு", உயிரணுவிடமிருந்து, அதனை சுற்றியுள்ள திசுவிடமிருந்து அல்லது தடுப்பாற்றல் மண்டலத்தில் உள்ள உயிரணுவிடமிருந்து வரலாம். இது போன்ற நேரங்களில், உயிரினங்களிலிருந்து ஊட்ட உணவை மேலும் அவை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதற்காக அல்லது அங்கேயே அவை தங்கி வைரஸ் சார்ந்த நோய்த்தொற்றை மேலும் பரப்பாதபடிக்கும், அப்போப்டொசிஸ் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட உயிரணுவை அகற்றிவிடுகின்றன. புற்றுநோயை தவிர்ப்பதிலும் அப்போப்டொசிஸ் பங்கு வகிக்கின்றது. திசு மரபு பிறழ்வு அல்லது உயிரி ரசாயனத்திற்குரிய ஒடுக்குதல் போன்ற காரணங்களினால், ஒரு உயிரணுவால், இயற்கையாக இறக்க முடியாவிட்டால், அவை தொடர்ந்து பிரிந்து ஒரு கட்டியாக உருவெடுக்கும். எடுத்துக்காட்டாக, பாப்பிலோமா வைரஸ்களினால் ஏற்படும் தொற்று, உயிரணுவின் p53 புரதத்தை வைரஸ் சார்ந்த மரபணு நேர்க்கொள்ளும் படி செய்யும். இந்த புரதம் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு செயலில் உள்ள முக்கிய அங்கத்தினராகும். இயற்கையாக உயிரணு இறக்கச் செய்யும் ஆற்றலில் இதன் தலையீட்டின் காரணத்தினால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் உருவாவதில் பங்கு வகிக்கிறது. சீரான உடல் நிலைவயதுவந்த உயிரினத்தில், உயிரணு இறத்தல் மற்றும் பிரிதல் வாயிலாக உயிரணுக்களின் எண்ணிக்கை சீரான நிலையில் இருந்துவரும். உயிரணுக்கள் செயல்பிழை அல்லது நோயுற்றால் அதற்கு பதிலாக மற்றொரு உயிரணு பதிலீடு செய்யப்படும். உயிரணு இறக்கும் போது மற்றொரு உயிரணுவின் இனப்பெருக்கம் ஆரம்பித்திருக்க வேண்டும்.[7] இந்த அடக்குதல் இயக்கமுறை, சீரான உடல்நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழும் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தங்களது உட்புற நிலைகளை பராமரித்துக்கொள்வதற்கு இந்த இயக்க முறை அவசியமாக உள்ளது. சில அறிவியல் அறிஞர்கள், ஹோமியோடைனமிக்ஸை மிகவும் துல்லியமான சொல்லாக பரிந்துரைத்தனர்.[8] இதற்கு தொடர்புடைய சொல்லான அல்லோஸ்டாசிஸ் என்பது உடலின் மூலமாக மிகவும் நெருக்கமான நிலையின் ஒரு சமநிலைத் தன்மையை பிரதிபளிக்கிறது. திசுவிலுள்ள உயிரணு பிளவின் விகிதம் (உயிரணு விருத்தியடைவதன் காரணமாக உயிரணுப் பிரிதல் ஏற்படுகிறது), உயிரணு இறப்பின் விகிதத்தின் மூலமாக சமநிலைபடுத்தப்படுகிறது. இந்நிலையின் போது உடல் சீரான நிலையை அடைகிறது. இந்த சமநிலைக்கு இடையூறு ஏற்பட்டால், பின்வரும் சாத்தியமான உயிருக்கு ஆபத்தான இரண்டு கோளாறுகளில் ஒன்று ஏற்படலாம்:
சீரான உடல்நிலையில் எதிர்வினைகளின் ஒரு சிக்கலான தொடர் உள்ளடங்குகிறது. ஒரு உயிரினத்தினுள் தொடர்ந்து நடைபெறும் செயல்முறை, உயிரணு சைகைகளின் வெவ்வேறு வகைகளை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு செயல்குறைப்பாடும், நோயை ஏற்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அறிகுறிக்காட்டும் வழியின் ஒழுங்கின்மையினால் பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பிற்கு எதிரான சைகையை தெரிவிக்கும் வழி, கணையம் சார்ந்த காளப்புற்று திசுக்களை செயல்படுத்த வைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உருவாகுதல்![]() திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு, தாவர மற்றும் விலங்கு திசுக்கள் உருவாதலின் ஓர் தொகுப்பாக உள்ளது. ஓர் உறுப்பு அல்லது திசு உருவாவதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட உயிரணுவில் நீடித்த பிரிதலும் வேறுபாடுகளும் ஏற்படும். இதன் விளைவாக வரும் தொகுபயன், அப்போப்டொசிஸ் மூலமாக சரியான வடிவத்தில் "கத்திரிக்கப்படுகின்றது". உயிரணு நசிவு, காயத்தின் காரணமாக உயிரணு இறப்பு ஏற்படுதல் போன்றவை போலல்லாமல், அப்போப்டொசிஸ், உயிரணு சுருங்கல் மற்றும் இனப்பெருக்கமடைதல் போன்றவற்றினால் ஏற்படுகிறது. இது போன்ற சுருங்கல் மற்றும் துண்டாகுதல், உயிரணுக்களை உயிரணு விழுங்கலாக செய்கின்றது. இதனுடைய பொருட்கள், சுற்றியுள்ள திசுவினுள், நீர்பகுப்பொருள் சார்ந்த நொதிகள் போன்ற சாத்தியமான தீங்கு விளைவிக்கக்கூடிய உயிரணு அக பொருட்கள் வெளியிடப்படாமலே திரும்பவும் பயன்படுத்தப்படுகிறது. கோழிக்குஞ்சின் மூலவுருக்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சி, குறிப்பிட்ட உயிரணுவின் இனப்பெருக்கம், குறிப்பிட்ட அப்போப்டொசிஸுடன் இணைந்து, முதுகெலும்பிகளில் திசுக்களை உருவாக்குகின்றன என்று அறிவுறுத்தியது. முதுகெலும்பியின் மூலவுறு உருவாதலின் போது, முதுகுத்தண்டு மற்றும் தரைத்தள தட்டு (நடுநிலையான குழாய் கட்டமைப்பு) கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சைகைகாட்டும் மூலக்கூறின் (ஷ்) ஓர் சரிவை சுரக்க செய்கிறது. இந்த சரிவு தான் மூலவுறு சார்ந்த நடுநிலை குழாயில் உருபடிமம் உருவாவதற்கு உயிரணுக்களை வழிநடத்துகிறது. உயிரணுக்கள் அதனுடைய மென் சவ்வில், ஒரு வாங்கியின் மூலமாக ஷ்ஷை பெறுதலை பேட்ச்டு1 (Ptc1) என்று அழைக்கப்படுகிறது. இது உயிரோடு இருந்து இனப்பெருக்கமடையும். ஷ் இல்லாத போது, இந்த Ptc1 வாங்கியின் (சவ்வினுள் உள்ள காபொட்சில்-முனையம்) ஏதாவது ஒரு முனை, அப்போப்டொசிஸ்-தயாரிக்கும் திரளத்தை வெளியாக்கும் செயலான காஸ்பேஸ்-3யினால் பிளவு ஏற்படுத்தப்படுகிறது.[9][10] உருவாக்கத்தின் போது, அப்போப்டொசிஸிசை தூண்டுவதற்காக வெவ்வேறான திசுக்கள், வெவ்வேறான சைகைகளை பயன்படுத்துகின்றன மற்றும் அப்போப்டொசிஸ் மிகவும் கவனத்துடன் முறைப்படுத்தப்படுகின்றன. பறவைகளில், விரல் இடுக்குகளில் உள்ள திசுக்களில் அப்போப்டொசிஸை தூண்டுவதற்காக எலும்பு உருவத் தோற்றவியல் சார்ந்த புரதங்கள் (பிஎம்பி), சைகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பழப்பூச்சி ஈக்களில், ஸ்டிராய்டு ஹார்மோன்கள் உயிரணு இறப்பை முறைப்படுத்துகின்றன. உருவாக்கம் சார்ந்த குறிப்புகளும் அப்போப்டொசிஸை தூண்டலாம். எடுத்துக்காட்டாக, குறைவான டிஆர்ஏ-1 படியெடுத்தல் காரணி செயல்பாடு மூலமாக சி. எலிகன்கள் ஆண்களில் இரு பாலின உடலி குறிப்பிட்ட நரம்பணுக்களின் குறிப்பிட்ட பாலினத்தின் உயிரணு இறப்பு (டிஆர்ஏ-1 , உயிரணு இறப்பை தடுக்க உதவுகிறது) வடிநீர் உயிரணு இடைவினைகள்ஒரு மனித உடலில் உள்ள பி வடிநீர் உயிரணுக்களின் உருவாக்கம் மற்றும் டி (T) வடிநீர்ச் உயிரணுக்கள் ஒரு சிக்கலான செயல்முறையாகும். இது பலவகைப்பட்ட உயிரணுக்களின் மிகப்பெரிய கூட்டத்தை உருவாக்குகிறது. அதை தொடர்ந்து உடலுக்கு சாத்தியமான தீங்கு விளைவிக்ககூடியவைகளை அகற்றுகிறது. அப்போப்டொசிஸ் என்பது ஒரு இயங்குமுறையாகும். இது, உடலில் உள்ள பயனற்ற மற்றும் சாத்தியமான தீங்கை விளைவிக்கும் முதிர்ச்சியடையாத உயிரணுக்களை அகற்றுகிறது. T உயிரணுக்களில், பிழைப்புதிறன் சைகைகளின் விலகலின் மூலமாக அப்போப்டொசிஸ் ஆரம்பிக்கப்படுகிறது (கீழே உள்ள செயல்முறையை பார்க்கவும்).[11] உயிரணு நச்சிய T உயிரணுக்கள் இலக்கிடப்பட்ட சவ்வில் உள்ள நுண்ணியத் துளைகளை திறப்பதன் மூலமாகவும் இயல்பான அப்போப்டொசிஸ் சார்ந்த வழியை மாற்றுவழி செய்யும் வேதிப்பொருட்களை வெளியிடுவதன் மூலமாகவும் அப்போப்டொசிஸை நேரடியாக தூண்டுகின்றன. சுரக்கும் பெர்ஃபோரினின் செயலினால் நுண்ணிய துளைகள் உருவாக்கப்படுகின்றன. துகள்களில் கிரான்சைம் பி உள்ளது. ஆஸ்பட்டேட் எச்சங்களை பிளவு செய்வதன் மூலமாக காஸ்பேஸ்களின் பலவகையை செரின் புரதநொதிப்பு செயல்படுத்த செய்கிறது.[12] செயல்முறை![]() அப்போப்டொசிஸின் செயல்முறை, உயிரணு சைகைகளின் ஒரு வெவ்வேறான வரம்பின் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இது உயிரணு புறம்பு ரீதியாக (வெளியார்ந்த தூண்டல்கள் ) அல்லது உயிரணு அக ரீதியாகவும் (உட்புற தூண்டல்கள் ) ஆரம்பிக்கலாம். உயிரணு புறம்பு ரீதியான சைகைகளில், நச்சுகள்[13], ஹார்மோன்கள், வளர்ச்சி காரணிகள், நைட்ரிக் ஆக்ஸைடு[14] அல்லது சைட்டோகைன் ஆகியவை உள்ளடங்கும். இதனால், ப்ளாஸ்மா சவ்வை தாண்டி செல்லவேண்டும் அல்லது ஒரு பதிலளிப்பின் திறன்காக ஆற்றல் மாற வேண்டும். இந்த சைகைகள், நேர்மறையாகவோ (அதாவது, தூண்டல்) எதிர்மறையாகவோ (அதாவது அடக்குதல்) அப்போப்டொசிஸை பாதிக்கலாம். (சேர்த்தல் மற்றும் மூலக்கூறினால் அதற்கு பிறகு ஆரம்பிக்கும் அப்போப்டொசிஸை நேர்மறையான தூண்டல் என்று சொல்லலாம். ஒரு மூலக்கூறின் மூலமாக அப்போப்டொசிஸை நன்றாக அடக்குதல் அல்லது ஒடுக்குதலுக்கு எதிர்மறையான தூண்டல் என்று சொல்லலாம்.) ஒரு அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு உயிரணு அக அப்போடொடிக் அறிகுறிக்காட்டலை ஆரம்பித்ததனால் உயிரணு தற்கொலை ஏற்படலாம். குளுக்கோகாட்டிகாய்டுகள்[12], வெப்பம்[12], கதிரியக்கம்[12], ஊட்டச்சத்து இழப்பு[12] வைரஸ் சார்ந்த தொற்று[12], உயிர்வளிக்குறை[12] மற்றும் அதிகரித்த உயிரணு அக கால்சியம் செறிவு[15] ஆகியவற்றின் மூலமாக அணுக்கரு வாங்கிகளின் கட்டமைப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, சவ்விற்கு பாதிப்பு ஏற்படுவதனால், பாதிக்கப்பட்ட உயிரணுவின் மூலமாக உயிரணு அக அப்போப்டொடிக் சைகைகளின் வெளியீடு எல்லாவற்றாலும் தூண்டப்படலாம். பல ஏடிபி ரைபோஸ் பாலிமரேஸ் போன்ற உயிரணு சார்ந்த பொருட்களின் எண்ணிக்கை, அப்போப்டொசிஸை முறைப்படுத்தவும் கூட உதவலாம்.[16] நொதிகளால் உயிரணு இறப்பு முறைகள் தொடங்கப்படுவதற்கு முன், அப்போப்டோடிக் குறியீடுகள், சீர்படுத்தும் புரதங்களை அப்போப்டொசிஸ் வழிகளை தொடங்கும் படி செய்ய வேண்டும். அப்போப்டொடிக் குறியீடுகளினால் உயிரணு இறப்பு ஏற்பட இந்த படி அனுமதிக்கிறது அல்லது உயிரணுக்கள் இறக்க வேண்டியதில்லை எனில், முறைகளை நிறுத்தவும் செய்கிறது. இதில் பல புரதங்கள் ஈடுபட்டிருந்தாலும் இரண்டு முக்கியமான சீர்படுத்தும் முறைகள் கண்டறியப்பட்டுள்ளன: மணியிழையங்களின் செயல்பாட்டை இலக்காக வைப்பது, அல்லது அப்போப்டொடிக் இயக்கங்களுக்கு அடாப்டர் புரதங்களின் வழியாக நேரடியாக அப்போப்டொடிக் குறியீடுகளை உடனடியாக வரச் செய்கிறது. மருந்துகளின் செயல்பாடு மூலமாக உயிரணுவுக்குள் இருக்கும் கால்சியம் அளவுகளை அதிகப்படுத்துதல் தொடக்கத்திற்கான மற்றொரு வெளிப்புற வழியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவும் இணைக்கப்பட்ட புரதநொதிச்சத்து கால்பைன் மூலமாக அப்போப்டொசிஸை உருவாக்க முடியும். மணியிழையங்கள் சீர்படுத்துதல்பல உயிரணு வாழ்க்கைக்கு மனியிழையங்கள் முக்கியமானவை. இவை இல்லாமல், உயிரணுக்கள் காற்று சுவாசம் செய்ய முடியாமல் இறந்து விடுகின்றன. சில அப்போப்டொடிக் வழிகள் இந்த உண்மையை சாதகமாக்கிக் கொள்கின்றன. மணியிழையங்களை இலக்காகக் கொண்டிருக்கும் அப்போப்டொடிக் புரதங்கள் அவற்றை பல வகைகளில் பாதிக்கின்றன. சவ்வுத் துளைகள் உருவாவதன் மூலம் இவை மணியிழைய வீக்கத்தை உருவாக்கலாம் அல்லது மணியிழைய சவ்வுகளின் ஊடுறுவும் திறனை அதிகரித்து அப்போப்டொடிக் விளைவிகளை கசியச் செய்யலாம்.[12] மணியிழையின் சவ்வுத்திறனை சிதறச் செய்ய உதவி அதன் மூலம் அதை மேலும் ஊடுறுவும் தன்மையுடையதாக மாற்றுவதன் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு அப்போப்டொசிஸ் ஏற்படச் செய்கிறது என்பதற்கு மேலும் அதிகப்படியான ஆதாரங்கள் உள்ளன.[14] ஊடுருவும் திறன் அதிகமாவதைத் தொடர்ந்து எஸ்எம்ஏசி(SMAC)கள் (காஸ்பேஸின் இரண்டாவது மணியிழை மூலம் உருவாக்கப்பட்ட வினையூக்கிகள்) எனப்படும் மணியிழை புரதங்கள் சைடோசோல்களில் வெளியேற்றப்படுகிறது. எஸ்எம்ஏசி அப்போப்டொசிஸ் புரத ஒடுக்கிகளோடு (ஐஏபி(IAP)கள்) இணைந்து கொண்டு அவற்றை செயலிழக்கச் செய்கிறது. இதனால் அப்போப்டொடிக் முறைகளை ஐஏபிகள் நிறுத்துவதை தடுத்து அப்போப்டொஸிஸ் தொடருவதற்கு வழிவகுக்கிறது. காஸ்பேஸ்கள் எனப்படும் சிஸ்டீன் நொதிச்சத்து குழுவின் செயல்பாடுகளையும் ஐஏபி பொதுவாக குறைக்கிறது.[17] இதனால் உயிரணுக்கள் உடைதல் ஏற்படுகிறது, ஆகையால் வழக்கமான உடைதலை ஏற்படுத்தும் நொதிகள் மணியிழை ஊடுறுவுதலால் மறைமுகமாக சீர்ப்படுத்தப்படுகிறது என்பது போன்று தெரியும். வெளிப்புற மணியிழை சவ்வில் எம்ஏசி என்ற தடம் உருவாகும் காரணத்தால் மணியிழையில் இருந்து சைட்டோகுரோம் சி வெளியேற்றப்படுகிறது.[18] அப்போப்டொசிஸுக்கு தொடர்புடைய உருவ மாற்றங்களுக்கு முன் ஏற்படுவதால் இது ஒரு சீர்படுத்தும் செயல்பாடாகவும் இருக்கிறது.[12] சைடோகுரோம் சி வெளியேற்றப்பட்டவுடன் அது Apaf-1 மற்றும் ATP ஆகியவற்றோடு இணைகிறது, அதன் பின்னர் அது புரோ-காஸ்பேஸ்-9 உடன் இணைந்து அப்போப்டொஸோம் என்ற புரத இணையை உருவாக்குகிறது. அப்போப்டொஸோம் புரோ-காஸ்பாஸை அதன் செயல்படும் வகையான காஸ்பேஸ்-9 ஆக மாற்றுகிறது, இது மேலும் வினை ஊக்கியான காஸ்பாஸ்-3 ஐ தூண்டுகிறது. சி.எலிகன்களில் காணப்படும் ced-9 மரபணுக்களின் ஒத்தமப்பு, முலையூட்டிக்குரிய Bcl-2 குடும்பத்தை சேர்ந்த அப்போப்டொடிக்-எதிர் மரபணுக்களால் குறியீடிடப்பட்டவை போன்ற பல வகையான புரதங்கள் மற்றும் எம்ஏசியும் சீர்படுத்துதலுக்கு உள்ளாகிறது.[19][20] புரதங்களின் மூலம் மறைமுகமாகவும் அல்லது எம்ஏசியில் நேரடியான செயல்பாடுகளின் மூலம் Bcl-2 புரதங்கள் அப்போப்டொசிசை வளர்க்கவும் அல்லது தடுக்கவும் செய்கிறது. மணியிழையால் சைடோசோம் சி வெளியேற்றப்பட்ட பிறகும் அப்போப்டோசிசை நிறுத்த சில Bcl-2 புரதங்களின் செயல்பாடுகளினால் முடியும் என்பதை குறித்துக் கொள்வது மிகவும் அவசியம்.[12] நேரடி குறியீடு வெளிப்பாடு![]() ![]() ![]() பாலூட்டிகளில் அப்போப்டொடிக் இயக்கங்களின் நேரடி தொடக்கத்திற்கு இரண்டு கோட்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: டிஎன்எஃப்-தூண்டப்பட்ட மாதிரி (கட்டி அழுகல் காரணி) மற்றும் ஃபாஸ்-ஃபாஸ் அனைவி நடுவு செய்யப்பட்ட மாதிரி. இரண்டிலும் வெளிப்புற குறியீடுகள் இணைக்கப்பட்ட டிஎன்எஃப் வாங்கி (டிஎன்எஃப்ஆர்) குடும்பத்தை[21] சேர்ந்த வாங்கிகள் இடம்பெற்றிருக்கும். டிஎன்எஃப் என்பது செயல்படுத்தப்பட்ட இரத்த விழுங்கணுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சைடோகைன் மற்றும் இரட்டை ஹிபலோப்டின் அப்போப்டொஸிஸின் முக்கியமான வெளிப்புற நடுநிலையாக உள்ளது. மனித உடலில் இருக்கும் உயிரணுக்களில் பலவற்றில் இரண்டு டிஎன்எஃப் வாங்கிகள் இருக்கும்: டிஎன்எஃப் ஆர்1 மற்றும் டிஎன்எஃப் ஆர்2 . ஃபாஸ் தொடர்புடைய இறத்தல் திரள புரதம் (எஃப்ஏடிடி) மற்றும் டிஎன்எஃப் வாங்கி இறத்தல் திரளம் (டிஆர்ஏடிடி) ஆகிய நடுநிலை சவ்வு புரதங்கள் வழியாக காஸ்பாஸ் தூண்டுதலை உருவாக்கக் கூடிய வழியை டிஎன்எஃப் மற்றும் டிஎன்எஃப்-ஆர்1 இணைப்பு தொடங்கி வைக்கிறது என தெரிய வந்துள்ளது.[22] உயிரணுக்களின் நிலைப்புத் திறன் மற்றும் அழற்சி விளைவிக்கின்ற பதிலளிப்புகள் ஆகியவற்றில் பங்கேற்கும் படி எடுத்தல் காரணிகள் தூண்டப்படுவதை வாங்கிகளின் இணைப்பு மறைமுகமாக உருவாக்குகிறது.[23] அதிகப்படியான டிஎன்எஃப் உருவாக்கம் மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் குறிப்பாக தன்தடுப்பாற்று நோய்களில் அடிப்படையான பங்கு வகிப்பதன் காரணத்தை, டிஎன்எஃப் மற்றும் அப்போப்டொசிஸ் இடையேயான இணைப்பு காட்டுகிறது. ஃபாஸ் வாங்கி (Apo-1 அல்லது CD95 என்றும் அழைக்கப்படுவது), ஃபாஸ் அணைவி (FasL) டிஎன்எஃப் குடும்பத்தின் மாறுபக்க சவ்வு புரத பாகத்தையும் இணைக்கிறது.[21] எஃப்ஏடிடி (FADD), காஸ்பேஸ் -8 மற்றும் காஸ்பேஸ்-10 அடங்கிய இறப்பை உருவாக்கும் குறியீட்டு நிலையை (DISC), எஃப்ஏஎஸ் மற்றும் எஃப்ஏஎஸ்எல் ஆகியவை இடையேயான இடைவினை உருவாக்குகிறது. சில வகையான உயிரணுக்களில் (வகை 1), பதப்படுத்தப்பட்ட காஸ்பாஸ்-8 காஸ்பேஸ் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை நேரடியாக தூண்டுகிறது மற்றும் உயிரணுக்களில் அப்போப்டொசிஸ் செயல்பாட்டையும் தூண்டுகிறது. மற்ற வகையான உயிரணுக்களில் (வகை II), ஃபாஸ் தட்டு ஒரு பின்னூட்டு வளைவை தொடங்குகிறது. இது, மணியழையில் இருந்து அதிகமான அப்போப்டொடிக் உடனான காரணிகள் வெளியேற்றப்படுவதையும் காஸ்பாஸ்-8ன் வினை ஊக்கத்திறனை அதிகரிக்கவும் செய்கிறது.[24] பாலூட்டிகளின் உயிரணுக்களில் டிஎன்எஃப்-ஆர்1 மற்றும் ஃபாஸ் தூண்டுதலைத் தொடர்ந்து அப்டோடிக் உடன் மற்றும் (BAX,[25] BID, BAK, அல்லது BAD)அப்போப்டொடிக்-எதிர் (Bcl-Xl மற்றும் Bcl-2 ) BcL-2 குடும்ப உறுப்பினர்களிடையே சமநிலை உருவாக்கப்படுகிறது. மணியிழையின் வெளிப்புற சவ்வில் உருவாகும் அப்போப்டொடிக் உடனான ஹோமோடைமர்கள் விகிதம் தான் இந்த சமநிலை. எஸ்எம்ஏசி மற்றும் சைடோகுரோம் சி காஸ்பாஸ் வினை ஊக்கிகளின் வெளியேற்றத்திற்காக மணியழை சவ்வை ஊடுறுவும் திறனுடன் மாற்றுவது இந்த அப்போப்டொடிக் உடனான ஹோமோடைமர்களின் வேலை. அப்போப்டொடிக் அல்லாத உயிரணுக்களின் சாதாரணமான உயிரணு நிலைகளில் அப்போப்டொடிக் உடனான புரதங்களை கட்டுப்படுத்துதல் குறித்து சரி வர புரிந்து கொள்ளப்படவில்லை. ஆயினும், விடிஏசி2 என்ற மணியழை வெளிச் சவ்வு புரதம் பிஏகே உடன் இடைவினை புரிந்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய அப்போப்டொடிக் விளைப்பியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.[26] இறப்பு குறீயீடு வந்தவுடன், செயல்படும் வகையில் உள்ள பொருட்கள் விடிஏசி2 வை இடம் மாற்றும் மற்றும் பிஏகே செயல்பட வைக்கக் கூடிய வகையில் இருக்கும். ஏஐஎஃப் (அப்போப்டொசிஸ் தூண்டும் காரணி) நடுநிலையாக இருக்கும் காஸ்பேஸ்-அல்லாத வழியும் இருக்கிறது.[27] செயல்படுத்துதல்அப்போப்டொஸிஸ் உருவாக்கக் கூடிய பல வழிகளும், குறியீடுகளும் உள்ளன ஆனால் உயிரணு இறப்பை ஏற்படுத்த ஒரே ஒரு இயக்க முறையே உள்ளது.[சான்று தேவை] ஒரு உயிரணு தூண்டுதலை பெற்ற பிறகு அது செயல்படுகின்ற புரதசத்து காஸ்பேஸ்கள் மூலமாக உயிரணு நுண்மங்களாக முறையான உடைதலுக்கு உள்ளாகிறது. அப்போப்டொசிஸ் அணுபவிக்கும் ஒரு உயிரணு ஒரு உருவியல் குணத்தை காட்டும்:
அப்போப்டொசிஸ் வேகமாக முன்னேறும் மற்றும் அதன் பொருட்களும் வேகமாக அகற்றப்படுவதாலும், அதனை கண்டறிவதும், பார்ப்பதும் கடினமாகின்றது. காரியோரெக்சிஸின் போது, எண்டோந்யூக்லியேஸ் செயல்பாடுகள் சிறிய டிஎன்ஏ துகள்களை வழக்கமான அளவுடையதாக மாற்றுகிறது. மின் பகுப்பு முறைக்குப் பின் இவை அகார் ஜெல்லின் (கடல் கஞ்சி) மீது தனிப்பட்ட “ஏணிப்படி” போன்ற தோற்றத்தைத் தருகிறது. இந்த டிஎன்ஏவில் ஏணிப்படி தோற்றத்துக்காக செய்யப்படும் சோதனைகள் குருதி ஓட்டக்குறை அல்லது நச்சுத் தன்மையினால் ஏற்பட்ட உயிரணு இறப்பையும் அப்போப்டொசிஸையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இறந்த உயிரணுக்களை அகற்றுதல்அருகில் இருக்கும் உயிரணு விழுங்கல் உயிரணுக்கள் இறந்த உயிரணுக்களை அகற்றுவதற்கு எஃபரோச்ய்டொசிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.[31] அப்போப்டொசிஸின் கடைசி படியை அனுபவிக்கும் இறக்கும் உயிரணுக்கள், ஃபாஸ்ஃபேடிடில்செரீன் போன்ற உயிரணு விழுங்கு மூலக்கூறுகளை உயிரணு மேற்பகுதியில் காட்டும்.[32] ஃபாஸ்ஃபேடிடில்செரீன் பொதுவாக பிளாஸ்மா ஜவ்வின் சைடோசோலிக் மேற்பகுதியில் காணப்படுகிறது, ஆனால் அப்போப்டொசிஸின் போது அது ஒரு கற்பனை புரதமான ஸ்க்ரேம்பலீஸ் என்பதன் மூலம் உயிரணு புறம்பு மேற்பகுதிக்கு மறு பகிர்வு செய்யப்படுகிறது.[33] இரத்த விழுங்கணுக்கள் போன்ற சரியான வாங்கிகளைக் கொண்ட உயிரணுக்களைக் கொண்டு இந்த மூலக்கூறுகள் உயிரணு விழுங்குதலுக்காக உயிரணுவில் குறியீடு செய்கிறது.[34] அடையாளம் கண்ட பின்னர் உயிரணு விழுங்கி அதன் உயிரணு சட்டகத்தை விழுங்கப்படுதலுக்காக உயிரணுக்களை மறுசீரமைப்பு செய்கிறது. உயிரணு விழுங்கிகளால் இறக்கும் உயிரணுக்களை அகற்றுதல் எந்த வித தீங்கும் பதிலளிப்பும் இல்லாமல் முறையாக நடைபெறும். நோய் உணர்தல்![]() ![]() குறைபாடுள்ள அப்போப்டொடிக் வழிகள்பல வகையான அப்போப்டொடிக் வழிகள், இதுவரை சரியாக புரிந்து கொள்ள முடியாத பல வகையான வித்தியாசமான உயிரிரசாயன பொருட்களைக் கொண்டுள்ளது.[7] ஒரு வழி தோராயமாக ஒரே சீராக இருப்பதால் பாதிப்படையும் தன்மையோடு இருக்கிறது. ஒரு பொருளை மாற்றினாலோ அல்லது அகற்றினாலோ மற்றதில் பாதிப்பு ஏற்படுகிறது. உயிரினத்தில், இது ஆபத்தான தாக்கங்களை ஏற்படுத்தும். பொதுவாக நோய் அல்லது குறைபாடு ஏற்படும். பலதரப்பட்ட அப்போப்டொடிக் வழிகளை மாற்றுவதால் ஏற்படும் அனைத்து நோய்களைப் பற்றியும் ஆலோசனை செய்வது நடைமுறையில் முடியாத காரியம், ஆனால் அவை அனைத்துக்குமான பொதுவான பொருள் என்பது ஒன்று தான்: சாதாரண அப்போப்டோசிஸ் நடக்க முடியாத படி உயிரணுக்களின் ஆற்றல் குறையும் படி வழிகளின் சாதாரண செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, “உபயோகிக்கப்பட வேண்டிய தேதி” முடிவடைந்த உயிரணுக்கள் அவற்றைப் போன்றவற்றை மேலும் உருவாக்கக் கூடியவையாகவும் தவறான பாகங்களை அதன் சந்ததி உயிரணுக்களுக்கு அளித்து, உயிரணு அக நோயுடையதாகவோ அல்லது புற்றுநோய் உடையதாகவோ ஆகக் கூடிய சாத்தியக் கூறை அதிகப்படுத்துவாகவும் மாறிவிடுகிறது. இந்த கருத்தின் செயல்பாடாக சமீபத்தில் விவரிக்கப்பட்ட உதாரணமான என்சிஐ-ஹெச்460 எனப்படும் நுரையீரல் புற்று நோயின் வளர்ச்சியில் பார்க்க முடியும்.[35] ஹெச்460 உயிரணு கோடின் உயிரணுக்களில் X-இணைத்த அப்போப்டோசிஸ் புரதத்தின் ஒடுக்கி (XIAP) அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. எக்ஸ்ஐஏபி(XIAP)கள் கஸ்பாஸ்-9ன் பதப்படுத்தப்பட்ட வகையில் இணைந்து கொண்டு, அப்போப்டோடிக் வினை ஊக்கியான சைடோகுரோம் சியின் செயல்பாட்டை குறைக்கிறது. ஆகையால், இந்த அதிக வெளிப்பாடு அப்போப்டோடிக் உடனான இயக்கிகளின் அளவை குறைக்கிறது. இதன் விளைவாக, அப்பொப்டொடிக் எதிர் மற்றும் அப்போப்டொடிக் உடனான விளைப்பிகளின் சமநிலை முதலாவதற்கு பாதகமாக அமைகிறது மற்றும் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள், இறக்க வேண்டும் என்ற நிலையிலும் தொடர்ந்து அதைப் போன்ற உயிரணுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கும். பி53ன் சீர்படுத்தாமை உயிரிரசாயன காரணிகளின் தொகுப்பினால் டிஎன்ஏ பாதிக்கப்படும் போது கட்டி-குறைக்கும் புரதமான பி53 பெருகத் தொடங்குகிறது. பி53 மரபணுவின் படியெடுத்தல் நடந்து மற்றும் அதன் விளைவாக பி53 புரதத்தின் அளவு அதிகரித்து, புற்று நோய் உயிரணு அப்போப்டொசிஸ் அதிகமாகும் படி செய்யும் ஆல்ஃபா-இண்டர்ஃபெரான் மற்றும் பீட்டா-இண்டர்ஃபெரான் ஆகியவை இந்த வழியின் பாகத்தில் அடங்கும்.[36] பி53, உயிரணுக்கள் அவற்றைப் போன்றவற்றை உருவாக்காமல் தடுக்க உயிரணு சுழற்சியை ஜி1 அல்லது இண்டர்ஃபேஸில் நிறுத்தி, பழுது பார்ப்பதற்கு உயிரணுக்களுக்கு நேரம் கொடுக்கிறது. ஆயினும், உயிரணு பாதிப்பு மிக அதிகமாக இருந்து பழுது பார்க்கும் முயற்சி தோல்வி அடைந்தால் இது அப்போப்டொசிஸை உருவாக்கும். பி53 மற்றும் இண்டர்ஃபெரான் மரபணுக்களின் சீரமைப்புக்கு ஏற்படும் எந்தவித தடையும் குறைபாடுள்ள அப்போப்டொசிஸ் மற்றும் கட்டிகள் உருவாகும் சாத்தியத்தை உருவாக்கும். ஹெச்ஐவி வளர்ச்சி அடைதல்ஹ்யூமன் இம்யூனோடிஃபீஷியன்சி வைரஸ் எய்ட்ஸாக வளர்வது சிடி4+ டி-ஹெல்பர் நிணநீர்கலங்கள் குறைந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் குறைவதால் தான் ஏற்படுகிறது. இந்த டி-ஹெல்பர் உயிரணுக்கள் குறைவதற்கான ஒரு முக்கிய இயங்கு முறை, பல உயிரி ரசாயன வழிகளால் விளையும் அப்போப்டொசிஸ் ஆகும்:[37]
கிருமி தொற்றின் நேரடி விளைவாகவும் உயிரணுக்கள் இறக்கலாம். கிருமி தொற்றுபாதிக்கப்பட்ட உயிரணுக்களில், நுண்ணியிர் கிருமிகள் பல வகையான இயங்கு முறைகளினால் அப்போப்டொசிஸைத் தூண்டலாம்:
பல நுண்ணுயிர் கிருமிகள் அப்போப்டொசிஸ் தடுக்கக் கூடிய வகையில் புரதங்களுக்கு குறியீடு இடும்.[39] பல நுண்ணுயிர் கிருமிகள் Bcl-2வின் நுண்ணுயிர் ஒத்தமைப்புகளை குறியீடு செய்யும். அப்போப்டோசிஸ் செயலூக்குதலுக்கு தேவையான அப்போப்டொடிக் உடனான புரதங்களான பிஏஎக்ஸ் மற்றும் பிஏகே ஆகியவற்றை இந்த ஒத்தமைப்புகள் தடுக்கும். நுண்ணுயிர் கிருமி Bcl-2 புரதங்களின் உதாரணங்களில் அடங்குபவை எப்ஸ்டீன்-பார் நுண்ணுயிர் கிருமி பிஹெச்ஆர்எஃப்1 புரதம் மற்றும் அடீனோவைரஸ் ஈ1பி 19கே புரதம்.[40] சில நுண்ணுயிர் கிருமிகள் காஸ்பாஸ் ஒடுக்கிகளை வெளிப்படுத்தி, காஸ்பாஸ் செயல்பாடுகளை தடுக்கிறது. மாட்டம்மை நுண்ணுயிர் கிருமிகளின் CrmA புரதம் ஒரு உதாரணம். ஆனால், பல வகையான நுண்ணுயிர் கிருமிகள் டிஎன்எஃப் மற்றும் எஃப்ஏஎஸ் ஆகியவற்றின் தாக்கங்களை தடுக்கும். உதாரணமாக, சத்துமபுத்து நுண்ணுயிர் கிருமிகளின் எம்-டி2 புரதங்கள் டிஎன்எஃப் உடன் இணைந்து அதை டிஎன்எஃப் வாங்கியோடு இணைவதையும், பதிலளிப்பை ஏற்படுத்தவும் தடை செய்கிறது.[41] மேலும், பல நுண்ணுயிர் கிருமிகள், பி53 உடன் இணையக் கூடிய பி53 ஒடுக்கிகளை வெளிப்படுத்தி அதன் படியெடுத்தல் தூண்டுதல் செயல்பாட்டை தடுக்கும். இதன் தொடர்ச்சியாக, அப்போப்டொடிக் உடனான புரதங்களின் வெளிப்பாட்டை தூண்ட முடியாத காரணத்தினால் பி53யால் அப்போப்டொசிஸை தூண்ட முடியாது. அடீனோநுண்ணுயிரியான ஈ1பி-55கே புரதம் மற்றும் ஈரல் அழற்சி பி(B) நுண்ணுயிர் கிருமி ஹெச்பிஎக்ஸ்(HBx) புரதம் ஆகியவை இது போன்ற செயல்பாட்டை புரியும் நுண்ணுயிர் கிருமி புரதங்களுக்கான உதாரணங்களாகும்.[42] ஆர்வத்தை தூண்டக் கூடியது என்னவெனில், குறிப்பாக தொற்றின் கடைசி கட்டத்தில் நுண்ணுயிர் கிருமிகள் அப்போப்டொசிஸ் பாதிக்கப்படாத வகையில் இருப்பது. இறக்கும் உயிரணுவின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்படும் அப்போப்டொடிக் பொருட்களில் அவை சேர்க்கப்படக் கூடும் மற்றும் அவை உயிரணு விழுங்கிகளால் விழுங்கப்படுவதால் பதிலளிப்பு தொடங்கப்படுவதை தடுக்கிறது. இது நுண்ணுயிர் கிருமி பரவுதற்கு உதவுகிறது.[41] செடிகளில் அப்போப்டொசிஸ்செடிகளில் திட்டமிடப்பட்ட உயிரணு இறப்புக்கும் விலங்குகளின் அப்போப்டொசிஸுக்கும் பல மூலக்கூறு ஒற்றுமைகள் உண்டு ஆனால் வேறுபாடுகளும் உண்டு. குறிப்பாக ஒரு உயிரணு சுவர் இருப்பது மற்றும் இறந்த உயிரணுக்களின் துகள்களை அகற்ற ஒரு நோயெதிர்ப்பு மண்டலம் இல்லாமை. நோயெதிர்ப்பு பதிலளிப்புக்கு பதிலாக, இறக்கும் உயிரணுக்கள் பொருட்களை தொகுத்து அவற்றை உடையச் செய்து ஒரு வெற்றிடத்தில் வைக்கிறது. இவை உயிரணுக்கள் சாகும் போது உடனே அழுகிவிடும். அப்போப்டொசிஸ் என்ற பெயர் ( பொதுவான திட்டமிடப்பட்ட உயிரணு இறப்பு என்பதற்கு பதிலாக) உபயோகிக்கக் கூடிய வகையில் இந்த மொத்த முறைகள் விலங்குகளில் அப்போப்டொசிஸை ஒத்து உள்ளதா என்பது சரியாகத் தெரியவில்லை.[43] காஸ்பேஸ் இல்லாத அப்போப்டொசிஸ் பல நச்சுத் தன்மை குறித்த ஆய்வுகளில் ஒரு வெளிப்புற வழி குறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மருந்துகளின் செயல்பாட்டினால் உயிரணுக்களுக்குள் ஏற்படும் கால்சியம் அளவு அதிகரிப்பது கூட அப்போப்டொசிஸை ஒரு கால்சியம் இனைந்த நொதிச்சத்து கால்பைன் மூலம் உருவாக்கலாம் என காட்டுகிறது. மேலும் காண்க
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
வார்ப்புரு:Cell cycle வார்ப்புரு:Cell signaling வார்ப்புரு:Fas apoptosis signaling pathway |
Portal di Ensiklopedia Dunia