இயற்பியலையும், உயிரியலையும் ஒப்பிடும் பொது உயிரி இயற்பியல் புதிய மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் துறை ஆகும்.
1592 - கலீலியோ கலிலி படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு 1610 வரை வடிவியல், இயக்கவியல், மற்றும் வானியல் பயிற்றுவித்தார்.[2] இவர் குழி, குவி ஆடிகளுடைய கூட்டு நுண்ணோக்கியைக் கண்டறிந்தார்.
1602 - வில்லியம் ஹார்வி இரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிற இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தார்.
1840களில், பெர்லினைச் சேர்ந்த உடலியக்கவியல் வல்லுநர்கள் (the Berlin school of physiologists) உடற்செயலியலை உயிரற்ற காரணிகளைக் (வெப்பம், அழுத்தம், ஒளி) கொண்டு ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் ஹெர்மான் வான் ஹெல்மோட்ஸ்(Hermann von Helmholtz), எர்னஸ்ட் ஹென்ரிச் வெபெர்(Ernst Heinrich Weber), கார்ல் எஃப். டபில்யூ. லட்விக் (Carl F. W. Ludwig), ஜோன்னஸ் பீட்டர் முல்லர் (Johannes Peter Müller).[3]
1957ல் - உயிரி இயற்பியல் குழுமம் தொடங்கப்பட்டது. இன்று உலகெங்குமுள்ள ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரி இயற்பியல் வல்லுநர்கள் உறுப்பினர்களாயுள்ளனர்.[4]
கண்ணோட்டம்
மூலக்கூறு உயிரி இயற்பியல், உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலைப் போன்று உயிர் இயக்கத்தின் பல்வேறு வினாக்களுக்கும் சிறப்பான அளவில் விடையளிக்கின்றன.
உயிரி இயற்பியலாளர்கள்,
உயிரிகளின் கல அமைப்புகளின் இயக்கம், பரிமாணம், சூழல் விளைவுகள் பற்றியும்,