உயிர்ச்சத்து பி12
வைட்டமின் பி12 கட்டமைப்பு ரீதியாக மிகவும் சிக்கலான உயிர்ச்சத்து என்பதோடு உயிர்வேதியியல் ரீதியாக மிகவும் அபூர்வமான தனிமமான கோபால்ட்டை கொண்டிருக்கிறது. வைட்டமினது அடிப்படை கட்டமைப்பை உயிரியல்தொகுப்பு செய்வது பாக்டீரியாக்கள் மூலம் மட்டும் தான் முடியும். ஆனால் வைட்டமினின் வெவ்வேறு வடிவங்களுக்கு இடையில் மாற்றுவது மனித உடலில் செய்யப்பட முடியும். வைட்டமினின் ஒரு பொதுவான செயற்கை வடிவமான சயனோகோபாலமின் இயற்கையாக நேர்வதில்லை. ஆனால் இதன் ஸ்திரத்தன்மை மற்றும் குறைந்த விலையின் காரணமாக, இது பல்வேறு மருந்து தயாரிப்பகங்களிலும் அது தொடர்பான துணையளிப்புகளிலும், உணவுடன் சேர்க்கப்படும் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உடலில் மெத்தில்கோபாலமின் மற்றும் அடினோசில்கோபாலமின் ஆகிய உடலியல் வடிவங்களாக இது மாற்றப்பட்டு மிகக் குறைந்த அடர்த்தியில் சயனைடை விட்டுச் செல்கிறது. மிக சமீபத்தில், ஹைட்ராக்ஸோகோபாலமின், மெத்தில்கோபாலமின் மற்றும் அடினோசில்கோபாலமின் ஆகியவை கூடுதல் விலையுடனான மருந்து தயாரிப்புகளிலும் உணவுச் சேர்க்கைகளிலும் காணப்படடுகிறது. இவற்றினை பயன்படுத்துவது இப்போது விவாதத்திற்குரியதாய் இருக்கிறது. வரலாற்றுரீதியாக, பித்தபாண்டு (சோகை) நோயுடன் கொண்டிருந்த உறவின் மூலம் தான் வைட்டமின் பி12 கண்டுபிடிக்கப்பட்டது, இது வயிற்றில் உள்ளக காரணியை சுரக்கும் சுவர் செல்களை (parietal cells ) அழிக்கும் ஒரு சுயதாங்குதிறன் கொண்ட நோயாகும். உள்ளக காரணி பி12 வைட்டமினின் இயல்பான உறிஞ்சலுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே உள்ளக காரணி பற்றாக்குறை என்பது, வாழழி(பெர்னீசியசு) சோகை நோயில் காண்பது போல, வைட்டமின் பி12 பற்றாக்குறைக்கு காரணமாகிறது. அதன்பின், இன்னும் பல வைட்டமின் பி12 பற்றாக்குறையின் நுண்ணிய வகைகளும் அவற்றின் உயிர்வேதியியல் விளைவுகளும் தெளிவுபடுத்தப் பெற்றிருக்கின்றன. பெயரீட்டியல்வைட்டமின் பி12 (பொதுவாக பி12 அல்லது சுருக்கமாக பி12 ) அல்லது சயனோகோபாலமின் என்று அறியப்படும் வைட்டமின் பி12 என்கிற பெயர் பொதுவாக இந்த வைட்டமினின் அனைத்து வடிவங்களையும் குறிக்கிறது. ஆனாலும் இதன் பயன்பாடு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று சில மருத்துவ பயிற்றுனர்கள் ஆலோசனையளிக்கின்றனர்.
இறுதியாக, சூடோ-பி12 (Pseudo-B12) எனப்படுவதானது சில பாசி வகைகளில் காணப்படும் பி12 போன்ற பொருட்களைக் குறிப்பிடுவதாகும். ரத்தத்தில் பி12 மற்றும் பி12 போன்ற சேர்மங்களின் அளவுகளைக் கண்டறியும் மிகவும் நுட்பமான நோய்த்தடுப்புபொருள்-தாங்கிய சீரம் மதிப்பீட்டு சோதனைகளில் இந்த பொருட்கள் பி12 நடவடிக்கைக்கான அடையாளங்களை காட்டும். ஆயினும், இந்த பொருட்கள் மனிதருக்கான பி12 உயிரியல் செயல்பாடு எதனையும் கொண்டிருக்க மாட்டா. இது சைவ உணவினருக்கும் பி12 உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களை உட்கொள்ளச் செய்யாத வரம்புபட்ட உணவுப் பழக்கம் கொண்டுள்ளவர்களுக்கும் ஒரு அபாய எச்சரிக்கையளிக்கும் உண்மையாகும். ஏனென்றால் பி12 பற்றாக்குறைக்காக செய்யப்படும் வழக்கமான நோய்த்தடுப்பு மதிப்பீட்டு சோதனையில் இயல்பான “பி12” அளவுகள் இருப்பதாக இது தோற்றம் கொடுக்கலாம்.[2] கட்டமைப்புவைட்டமின் பி12 கோபால்ட் மற்றும் கொர்ரின் வளைய மூலக்கூறுகளின் ஒரு தொகுப்பாகும். இந்த மூலக்கூறுகள் உடலில் அவற்றின் குறிப்பிட்ட வைட்டமின் செயல்பாட்டின் மூலம் வரையறை செய்யப்படுகின்றன. பி12 உருவாக்க செயல்புரியப்படும் கோபால்ட்-கொர்ரின் மூலக்கூறுகள் அனைத்தும் பாக்டீரியா மூலம் கூட்டுச்சேர்க்கை செய்யப்பட வேண்டும். சயனோகோபாலமின் என்பது இந்த பி காம்ப்ளெக்ஸில் ஒரு வைட்டமினாக இருக்கும் இத்தகையதொரு சேர்மம் ஆகும். ஏனென்றால் உடலில் ஒரு செயலூக்கமிக்க கோ-என்சைம் வடிவமாக இது வளர்சிதைமாற்றமுற முடியும். ஆயினும், பி12 இன் சயனோகோபாலமின் வடிவம் பொதுவாக இயற்கையாகவே நிகழும் ஒன்றல்ல. பி12 சயனோகோபாலமின் வடிவம் ஆழ்ந்த சிவப்பு வண்ணமுடையது, திடப்படுதல் எளிது, மற்றும் அது காற்றில் ஆக்சிஜனேற்றமுறும் திறன் குறைந்தது என்பதால், பொதுவாக உணவுச் சேர்க்கைகள் மற்றும் பல பொதுவான மல்டிவைட்டமின்களுக்கான பி12 வடிவமாக இது பயன்படுத்தப்படுகிறது. அனைத்து சயனோகோபாலமினும் வைட்டமின் பி12 தான். ஆனால் அனைத்து பி12 வைட்டமின்களும் சயனோகோபாலமின் அல்ல.[3] பி12 தான் அனைத்து வைட்டமின்களிலும் வேதியியல்ரீதியாக மிகவும் சிக்கலானதாகும். பி12 கட்டமைப்பு ஒரு கொர்ரின் வளையத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. ஆறு ஒருங்கிணைப்பு தளங்களில் நான்கு கொர்ரின் வளையத்தால் வழங்கப்படுகிறது. ஐந்தாவது ஒரு டை மெத்தில்பென்ஸிமிடஸோல் குழுவால் வழங்கப்படுகிறது. எதிர்வினை நடவடிக்கையின் மையமாக இருக்கும் ஆறாவது ஒருங்கிணைப்பு தளமானது ஒரு மாறியாகும்.[4] கூட்டுச்சேர்க்கைவைட்டமின் பி12 தாவரங்கள் அல்லது விலங்குகளால்[5] உருவாக்கப்பட முடியாது ஏனென்றால் அதன் கூட்டுச்சேர்க்கைக்கு அவசியமான என்சைம்களை பாக்டீரியாக்கள் மட்டுமே கொண்டுள்ளன. பி12 வைட்டமினின் மொத்தமான கூட்டுச்சேர்க்கை ராபர்ட் பர்ன்ஸ் உட்வேர்டு[6] மற்றும் ஆல்பர்ட் எஸ்சென்மோசர் மூலம் தெரிவிக்கப்பட்டது,[7][8] இது உயிர்ம கூட்டுச்சேர்க்கையில் செவ்வியல் சாதனைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. பி12 வைட்டமினின் தொழில்துறை உற்பத்தி தேர்ந்தெடுத்த நுண்ணுயிர்வகைகளின் நொதித்தல் முறை மூலம் நிகழ்கிறது.[9] ஒரு சமயத்தில் ஈஸ்ட் எனக் கருதப்பட்ட ஸ்ட்ரெப்டோமைசெஸ் கிரைசீயஸ் பல வருடங்களுக்கு பி12 வைட்டமினின் வர்த்தகரீதியான உற்பத்தி ஆதாரமாகத் திகழ்ந்தது.[10][11] இன்று சூடோடோமோனோஸ் டிநைட்ரிஃபிகன்கள் மற்றும் புரோபியோனிபாக்டீரியம் ஷெர்மனி வகையினங்கள் தான் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.[12] இவை பல சமயங்களில் விளைச்சலை அதிகப்படுத்தும் சிறப்பு சூழல்களின் கீழ் வளர்க்கப்படுகின்றன. ரோனி-போலென்க் ஆஃப் பிரான்ஸ் (Rhône-Poulenc of France) போன்ற நிறுவனங்கள் இந்த வகைகளில் ஒன்று அல்லது இரண்டினுடையதின் மரபணுரீதியாக பொறியியல் மாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளை ஒரு சமயத்தில் பயன்படுத்தியது.[13] ரோனி-போலென்க்கின் மருந்து தயாரிப்பு பிரிவு சனோஃபி-அவெந்திஸ் நிறுவனத்திற்குள் இணைக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து மரபணுரீதியாக மாற்றப்பட்ட உயிரினவகைகளை பயன்படுத்துவதைத் தொடர்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. செயல்பாடுகள்வைட்டமின் பி12 பொதுவாக உடலின் ஒவ்வொரு செல்லின் வளர்சிதைமாற்றத்திலும் தொடர்புபட்டிருக்கிறது. குறிப்பாக டிஎன்ஏ கூட்டுச்சேர்க்கை மற்றும் கட்டுப்பாட்டை பாதிக்கும். மற்றும் கொழுப்பு அமில சேர்க்கை மற்றும் எரிசக்தி உற்பத்தி ஆகியவற்றையும் கூட பாதிக்கும். ஆயினும் பி12 வைட்டமினின் செயல்பாட்டு விளைவுகள் பலவும் (எல்லாமே அல்ல என்றாலும் கூட) ஃபோலிக் அமிலத்தின் (இன்னொரு பி வைட்டமின்) போதுமான அளவுகள் மூலம் இடம்பெயர்க்கப்பட முடியும். உடலில் இருக்கும் ஃபோலேட்டை மறுஉற்பத்தி செய்ய பி12 பயன்படுத்தப்படுவதே இதன் காரணம். அநேக “பி12 பற்றாக்குறை அறிகுறிகள்” உண்மையில் ஃபோலேட் பற்றாக்குறை அறிகுறிகளாகும். ஏனெனில், உடலில் தைமைன் உற்பத்திக்கான ஃபோலிக் அமிலம் போதுமான அளவில் வழங்கப்படாத போது டிஎன்ஏ கூட்டுச்சேர்க்கை வறிய முறையில் நிகழ்ந்து தோன்றுகிற பித்தபாண்டு மற்றும் மெகாலோப்லாஸ்டோசிஸின் ஆகிய அனைத்து விளைவுகளையும் அவை அடக்கியிருக்கின்றன.[14] போதுமான ஃபோலிக் அமிலம் இருக்கும்போது, அறியப்பட்ட அனைத்து பி12 தொடர்பான அறிகுறிகளும் இயல்பாகின்றன.[15] பி12 பற்றாக்குறைக்கு எந்த “தங்க நிர்ணய” பரிசோதனையும் இல்லை.[16] ஏனெனில் ஒரு பி12 பற்றாக்குறை நிகழும்போது, சீரம் மதிப்புகள் பராமரிக்கப்படலாம், திசு பி12 சேகரங்கள் காலியாகலாம். பற்றாக்குறையின் வாயிற்புள்ளிக்கு மேலான சீரம் பி12 மதிப்புகள் போதுமான பி12 நிலையை[17] சுட்டிக்காட்டுவதற்கான அவசியமில்லை. மையலின் கூட்டுச்சேர்க்கை (கீழிருக்கும் வகைமுறையைக் காணவும்) மற்றும் மைய நரம்பு அமைப்பின் குறிப்பிட்ட மற்ற செயல்பாடுகளுக்கு அவசியமாக இருக்கும் ஃபோலேட் துணையளிப்பால் MUT செயல்பாடு பாதிப்புற முடியாது. டிஎன்ஏ கூட்டுச்சேர்க்கை தொடர்பான MTR செயலின்மை (கீழே காணவும்) தொடர்பான பி12 வைட்டமினின் பிற செயல்பாடுகள் பல சமயங்களில் ஃபோலிக் அமிலத்தின் துணையளிப்பு மூலம் சரி செய்யப்படலாம். ஆனால் ஹோமோசைஸ்டீனின் அதிகரித்த அளவுகளைக் கொண்டு செய்யப்படக் கூடாது, இது பொதுவாக MTR மூலம் மெதியோனின் ஆக மாற்றப்படும். அதிகரித்த ஹோமோசைஸ்டீன் என்பது ஃபோலிக் அமில பற்றாக்குறை காரணமாகவும் நிகழ்ந்திருக்கலாம், ஏனென்றால் ஃபோலிக் அமிலத்தின் டெட்ராஹைட்ரோஃபோலேட் (THF) செயலூக்கமுற்ற வடிவத்தை மறு உற்பத்தி செய்ய பி12 உதவுகிறது.[18] இவ்வாறாக திறம்பட்ட டிஎன்ஏ உற்பத்திக்கு அவசியப்படும் செயல்பாடுமிக்க ஃபோலேட் வடிவத்தை பாதுகாப்பது என்கிற பி12 வைட்டமினின் மிகச் சிறந்ததாக அறியப்பட்ட செயல்பாடு (இது டிஎன்ஏ கூட்டுச்சேர்க்கை, செல்பிரிப்பு மற்றும் ரத்தசோகை ஆகியவற்றுடன் தொடர்புபட்டிருக்கிறது) உண்மையில் பி12 மூலம் மத்தியஸ்தம் செய்யப்படும் ஒரு சிறப்பு செயல்பாடு ஆகும்.[19] 1990களின் பிற்பகுதியில் இருந்து பல நாடுகளில் மாவினை உறுதிப்படுத்த ஃபோலிக் அமிலத்தை சேர்க்க துவங்கியுள்ளனர். இதனால் ஃபோலேட் பற்றாக்குறை என்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக ஆகியிருக்கிறது. அதே சமயத்தில், ரத்த சோகை மற்றும் ரத்த சிவப்பணு அளவுக்கான டிஎன்ஏ சோதனைகள் சாதாரண மருத்துவ சோதனைகளிலும் கூட வழக்கமாய் செய்யப்படுவதாகி விட்டது என்பதால் (எனவே இந்த ஃபோலேட் மத்தியஸ்த உயிர்வேதியியல் விளைவுகள் பல சமயங்களில் நேரடியாகக் கண்டறியப்படலாம்), பி12 பற்றாக்குறையின் MTR சார்ந்த விளைவுகள் ரத்த சோகையாக இல்லாமல் டிஎன்ஏ பிரச்சினைகளாக (பழமையில் இருந்தது போல) தோற்றமளிக்கின்றன. ஆனால் இப்போது முக்கியமாக ரத்தம் மற்றும் சிறுநீரில் ஹோமோசைஸ்டீனின் எளிமையான குறைந்து புலப்படும் அதிகரிப்பாக (ஹோமோசைஸ்டீனூரியா) இருக்கின்றன. இந்த நிலை ரத்தக்குழாய்களுக்கு நீண்ட கால சேதம் மற்றும் ரத்த உறைவில் (நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு) முடியலாம். ஆனால் இந்த விளைவு ஆஸ்த்ரோஸ்கிளிரோசிஸ் மற்றும் வயதுறுவது ஆகியவற்றுடன் தொடர்புடைய பிற பொதுவான நிகழ்முறைகளில் இருந்து பிரிக்க கடினமானதாய் இருக்கிறது. போதுமான ஃபோலேட் மற்றும் மெத்தியோனைன் அளவுகள் இருந்தும், பி12 பற்றாக்குறையால் விளையும் குறிப்பிட்ட மையலின் சேதாரம், MUT தொடர்பான வேதிவினைகளின் மூலம் பி12 உடன் நேரடியாகத் தொடர்புபட்டதாய் இருக்கிறது. அளவுக்கு அதிகமான MMA இயல்பான கொழுப்பு அமில கூட்டுச்சேர்க்கையை தடுக்கும். அல்லது அது இயல்பான மலோனிக் அமிலத்துடன் இணைவதற்குப் பதிலாய் கொழுப்பு அமிலத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும். இந்த இயல்புமீறிய கொழுப்பு அமிலம் இதனைத் தொடர்ந்து மையலின் உடன் இணைவு கொள்ளும் போது, மையலின் மிகவும் பலவீனப்பட்டு டிமையலினேஷன் நிகழும். துல்லியமான வகைமுறை(கள்) நிச்சயமாகத் தெரியவில்லை என்றாலும் விளைவு மைய நரம்பு அமைப்பு மற்றும் தண்டுவடத்தின் கூர்மைகுறைந்த இணைந்த சீர்குலைவாக இருக்கிறது.[20] காரணம் எதுவாய் இருந்தாலும், ஃபோலிக் அமிலம் நல்ல வழங்கல் இருந்து, அதனால் ரத்த சோகையாக இருக்க முடியாது என்கிற நிலையில், நரம்பு வியாதிகளுக்கு பி12 பற்றாக்குறை தான் காரணமாகிறது என்பது அறியப்படுகிறது. மனித உட்கிரகிப்பும் பரவலும்பி12 வைட்டமினின் மனித உடலியல் பாத்திரம் சிக்கலானது. எனவே வைட்டமின் பி12 பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லக் கூடிய சூழ்நிலைகளுக்கு அது இலக்காகும் சாத்தியமிருக்கிறது. அநேக சத்துகளைப் போலல்லாமல், வைட்டமின் பி12 உட்கிரகிப்பு உண்மையில் வாயில் இருந்து துவங்குகிறது. படிக வடிவ பி12 சிறிய அளவுகளில் சீதச்சவ்வின் மூலமாக உறிஞ்சப்படுகிறது.[17] உணவுப் பொருட்களில் இருக்கும் வைட்டமின் பி12 வயிற்றில் இரைப்பை என்சைம்கள் மூலம் செரிமானிக்கப்படுகிறது. உணவில் உள்ள புரதங்களில் இருந்து பி12 விடுவிக்கப்பட்ட உடன், ஹப்டோகோரின்கள் மற்றும் கோபாலபிலின்கள் போன்ற R-புரதங்கள் சுரக்கின்றன. இவை பி12 வைட்டமினை விடுவித்து பி12-R காம்ப்ளக்சை உருவாக்க தலைப்படுகின்றன. இரைப்பை சுவர் செல் நலிவின் (பித்தபாண்டுவில் உள்ள பிரச்சினை) காரணமாக இந்த படி தோல்வியுற்றால் அதன்பின் பெரிய அளவுகளில் (ஒரு நாளைக்கு 500 முதல் 1000 மைக்ரோகிராம்கள் வரை) வாய்வழியாய் உட்கொள்ளப்பட்டு நிர்வகிக்கப்பட்டால் ஒழிய போதுமான அளவு பி12 உறிஞ்சப்படுவதில்லை. பி12 உட்கிரகிப்பில் உள்ள சிக்கலின் காரணமாக வயதான நோயாளிகள் - சுவர் செல் செயல்பாடு குறைந்ததன் காரணமாக இவர்களில் நிறைய பேருக்கு அமிலமிகுதி நிலை இருக்கும் - பி12 பற்றாக்குறை அபாயத்தை அதிகமாய்க் கொண்டிருப்பர்.[21] முன்சிறுகுடலில், புரோட்டியேஸ்கள் R-புரதங்களை ஜீரணித்து பி12 வைட்டமினை வெளியிடுகின்றன. அது பின் உள்ளக காரணி உடன் இணைந்து பி12-உ.கா. ஆக உருவாகிறது. உறிஞ்சப்படுவதற்கு பி12 உள்ளக காரணி உடன் இணைந்திருக்க வேண்டும். ஏனெனில் கடைச் சிறுகுடலில் உள்ள என்டிரோசைட்களின் மீதிருக்கும் ரிசெப்டார்கள் பி12-உ.கா. கூட்டினை மட்டுமே அடையாளம் கண்டு கொள்கின்றன. இத்துடன், உள்ளக காரணி குடல் பாக்டீரியா மூலம் வைட்டமின் சிதைமாற்றமுறுவதில் இருந்து பாதுகாக்கிறது. வைட்டமின் பி12-உள்ளக காரணி காம்ப்ளக்ஸ் இணை (IF/B12) பொதுவாக சிறு குடலின் கடைப் பகுதியில் உறிஞ்சப்படுகிறது. எனவே, உணவில் கொள்ளப்படும் வைட்டமின் பி12 சரியாக உறிஞ்சப்பட, வயிறு, நாளச்சுரப்பி கணையம், உள்ளக காரணி, மற்றும் சிறு குடல் ஆகியவை முறையாக செயல்பட வேண்டும். இந்த உறுப்புகளில் ஒன்றில் பிரச்சினை இருந்தாலும் வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் வருகிறது. டிரான்ஸ்கோபாலமின்கள் மற்றும் அவற்றின் ரிசெப்டார்களின் உற்பத்தியில் நேரும் விளைவுகள் பி12 வைட்டமினின் செயல்பாட்டு பற்றாக்குறை நிலைமைகளை ரத்தத்தில் இயல்பான பி12 அளவுகளைக் கொண்டிருக்கும் சில நோயாளிகளிலும் கூட உருவாக்கலாம்.[22] உள்ளக காரணி குறைந்து காணப்படும் தனிநபர்கள் பி12 உட்கிரகிக்கும் திறனைக் குறைவாகக் கொண்டிருக்கின்றனர். வாய்வழி எடுக்கும் அளவுகளில் 80-100% மலத்தின் வழியே வெளியேறுவதில் இது முடிகிறது, போதுமான உள்ளக காரணி கொண்டிருக்கும் நபர்களில் இது 30-60% ஆக இருக்கும்.[21] உடலில் சேகரிக்கப்பட்டுள்ள மொத்த வைட்டமின் பி12 அளவு, வயது வந்தவர்களுக்கு சுமார் 2,000-5,000 மைக்ரோகிராம்கள் வரை இருக்கும். இதில் சுமார் 50% கல்லீரலில் தான் சேகரிக்கப்பட்டுள்ளது.[17] இதில் சுமார் 0.1% குடலுக்குள்ளான சுரப்புகளால் இழக்கப்படுகிறது ஏனெனில் இந்த சுரப்புகளில் அனைத்துமே மறுஉறிஞ்சல் செய்யப்படுவதில்லை.[17] கல்லீரல் பல ஆண்டுகளுக்கு அவசியமான பி12 ட்டமினை சேகரித்து வைக்க முடியும்; எனவே இந்த வைட்டமினின் சத்து பற்றாக்குறை என்பது மிக அபூர்வம். பி12 அளவுகள் எந்த வேகத்தில் மாறுகின்றன என்பது, எவ்வளவு பி12 உணவுப் பழக்கத்தின் மூலம் பெறப்படுகிறது, எவ்வளவு சுரக்கப்படுகிறது மற்றும் எவ்வளவு உறிஞ்சப்படுகிறது ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையைச் சார்ந்த விடயமாகும். ஆரம்ப சேகரிப்புகள் குறைவாக இருந்து மரபணுரீதியான காரணிகளும் சாதகமற்று இருந்தால் ஒரு வருடத்திற்குள் கூட பி12 பற்றாக்குறை தோன்றலாம், அல்லது, பல தசாப்தங்களுக்கும் கூட தோன்றாமலேயும் இருக்க முடியும். குழந்தைகளிடையே, பி12 பற்றாக்குறை மிகத் துரிதமாய் காணத்தக்கதாய் இருக்கலாம்.[23] பித்தபாண்டுவின் சிகிச்சை வரலாறுபி12 பற்றாக்குறை தான் பித்தபாண்டுவுக்கு காரணமாகும். மருத்துவத்தில் இந்த நோய் முதலில் நோய்முதல் அறிய முடியாத பொதுவாக-மரண அபாயமுள்ள நோயாகத் தான் குறிப்பிடப்பட்டது. இதற்கான சிகிச்சை மருத்துவம் தற்சமயமாய் கண்டறியப்பட்டதாகும். ஜார்ஜ் விப்பில் விலங்குகளில் ரத்தப்போக்கை ஏற்படுத்தி சோகையை செயற்கையாகத் தூண்டிக் கொண்டிருந்தார். பின் அந்த விலங்குகளுக்கு பல்வேறு வகையான உணவுகளைக் கொடுத்து ஆய்வு செய்து எந்த உணவுகள் அனீமியாவில் இருந்து துரித நிவாரணம் பெற வகை செய்கிறது என்பதை அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். இந்த செயல்முறையின் போது, பெருமளவில் ஈரலை செலுத்துவது மிக துரிதமாக ரத்த இழப்பு சோகையைக் குணப்படுத்துவதை அவர் கண்டறிந்தார். இதனால், அந்த சமயத்தில் காரணமும் தெரியாத சிகிச்சையும் இல்லாதிருந்த இந்த பித்தபாண்டு நோய்க்கு ஈரல் செலுத்துவதை முயற்சி செய்யலாம் என்று அவர் அனுமானித்தார். இதனை அவர் முயற்சி செய்து பார்த்ததோடு 1920களில் வெற்றியின் அறிகுறிகளையும் எட்டியிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து கவனமாய் செய்த மருத்துவ ஆய்வுகளின் பின், ஜார்ஜ் மினாட் மற்றும் வில்லியம் மர்பி நாய்களில் சோகையைக் குணப்படுத்திய ஈரல் உட்பொருளை தனியாக பிரித்து அடையாளம் காண தலைப்பட்டனர். அது இரும்பு என்று அவர்கள் கண்டுபிடித்தனர். மனிதர்களில் பித்தபாண்டுவைக் குணப்படுத்திய, பகுதியாய் பிரித்தெடுக்கப்பட்ட நீரில்-கரையும் ஈரல்-உட்பொருள் முற்றிலும் வேறுபட்ட இன்னொன்று - அது பயன்படுத்தப்பட்ட சூழலில் நாயினத்தின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் அவர்கள் கூடுதலாய் கண்டுபிடித்தனர். 1926 ஆம் ஆண்டில் மினாட் மற்றும் மர்பி இந்த பரிசோதனைகள் குறித்து தெரிவித்தவை தான் இந்த நோய் குறித்த உண்மையான முன்னேற்றத்தை அடையாளம் காட்டின. இருப்பினும் நோயாளிகள் தொடர்ந்து பல வருடங்களுக்கு பச்சையாக ஈரலைச் சாப்பிடடுவதும் அதன் சாற்றை அருந்துவதும் அவசியமாய் இருந்தது. 1928 ஆம் ஆண்டில், வேதியியல் விஞ்ஞானி எட்வின் கோன் ஒரு ஈரல் பிழிவு ஒன்றை தயாரித்தார். இது இயற்கையான ஈரல் தயாரிப்புகளைக் காட்டிலும் 50 முதல் 100 மடங்கு அதிக திறனுடையதாய் இருந்தது. இந்த பிழிவு தான் இந்த நோய்க்கான முதல் சோதிக்கத்தக்க சிகிச்சை மருந்தாக இருந்தது. பலனளிக்கக் கூடிய சிகிச்சை நோக்கிய பாதையைக் காட்டும் வகையில் அவர்களது ஆரம்ப பணிகளுக்காக, விப்பில், மினாட் மற்றும் மர்பி ஆகியோர் 1934 ஆம் ஆண்டின் உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியின் திருப்பமாக, ஈரல் சாற்றில் வைட்டமின் பி12 என்னும் ஒரு கரையும் வைட்டமின் இருப்பது கண்டறியப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் வேதியியல் விஞ்ஞானிகளான அமெரிக்காவின் கார்ல் ஏ. ஃபோல்கர்ஸ் மற்றும் இங்கிலாந்தின் அலெக்சாண்டர் ஆர்.டோட் ஆகியோருக்கு முன் ஈரல் பிழிவுகளில் இருந்து வைட்டமின் தனியாகப் பிரித்தெடுக்கப்படாததாய் இருந்தது. அந்த பொருள் அனைத்து வைட்டமின்களிலும் மிகவும் சிக்கலான அமைப்பு கொண்ட கோபாலமின் என்பது நிரூபணமானது. அது தசைகளில் நேரடியாகவும் உட்செலுத்தத்தக்கதாக இருந்தது, இது பித்தபாண்டுவுக்கு சிகிச்சையளிப்பதை மிகவும் எளியதாக்கியது.[24] மூலக்கூற்றின் வேதியியல் கட்டமைப்பு 1956 ஆம் ஆண்டில் டோரோத்தி க்ரோஃபூட் ஹோட்ஜ்கின் மற்றும் அவரது குழுவினர் மூலம், படிகவியல் தரவின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. இறுதியாக, பாக்டீரியா வளர்ப்பு முறைகள் மூலம் பெருமளவில் வைட்டமின் தயாரிக்கும் வழிமுறைகள் 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. இவை இந்த நோய்க்கான நவீன சிகிச்சை வடிவத்திற்கு இட்டுச் சென்றன. பற்றாக்குறையின் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்வைட்டமின் பி12 பற்றாக்குறை கடுமையான மற்றும் திரும்பவியலாத பாதிப்புகளை குறிப்பாக மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் ஏற்படுத்தலாம். இயல்பு நிலைக்கு சற்று குறைந்த அளவுகளில், அயற்சி, மனச்சோர்வு மற்றும் ஞாபக மறதி ஆகிய அறிகுறிகளின் ஒரு வரிசை உணரப்படலாம்.[25] ஆயினும், இந்த அறிகுறிகளை மட்டுமே கொண்டு வைட்டமின் பற்றாக்குறை நோய்க்காரணமென்று அறுதியிட முடியாது. பித்து மற்றும் உளப்பிணி அறிகுறிகளுக்கும் வைட்டமின் பி12 பற்றாக்குறை காரணமாகலாம்.[26][27] மருத்துவ அறிகுறிகள் : பி12 வைட்டமின் பற்றாக்குறையின் முக்கிய அறிகுறி பித்தபாண்டு ஆகும். இது முத்தரப்பட்ட அறிகுறிகளால் குணாதிசயப்படுத்தப்படுகிறது:
இந்த அறிகுறிகள் ஒவ்வொன்றும் தனியாகவோ அல்லது மற்றவற்றுடன் இணைந்தோ தோன்றலாம்.
நோயின் பாதையில், மனநல பாதிப்புகளும் நேரலாம். இவற்றில் எரிச்சல், கவனம்/கவனக்குவிப்பு பிரச்சினைகள், தற்கொலை எண்ணங்களுடனான மனச்சோர்வு நிலை ஆகியன அடங்கும். ரத்தம் தொடர்பான கோளாறுகள் சரியான பின் இந்த அறிகுறிகள் மறையாமலும் போகலாம். அத்துடன் நரம்பியல் அறிகுறிகள் இருக்கும் காலம் எவ்வளவு நீளமாய் இருக்கிறதோ, அந்த அளவுக்கு முழுமையாய் அறிகுறிகள் மறையும் வாய்ப்பும் குறைகிறது. ஆதார உணவுகள்வைட்டமின் பி12 இயற்கையாக மாமிசம் (குறிப்பாக ஈரல் மற்றும் நட்சத்திரமீன்), பால் மற்றும் முட்டையில் கிடைக்கிறது. விலங்குகள் இதனை பாக்டீரியாக்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெறுகின்றன. இந்த பாக்டீரியாக்கள் குடல்நாளத்தில் பி12 உறிஞ்சப்படும் பகுதிக்கு மேல் பக்கமாய் வசிக்கின்றன. எனவே, தாவரபட்சிகள் பி12 வைட்டமினை தங்களது அசை இரைப்பைகளில் உள்ள பாக்டீரியாக்களில் இருந்தோ, அல்லது (பெருங்குடலில் தாவர பொருளின் நொதிப்பு இருந்தால்) செகோட்ரோப் வெளியேற்றங்கள் உட்செலுத்தமுறுவதன் மூலமோ பெறுகின்றன. முட்டைகள் பல சமயங்களில் நல்ல பி12 ஆதாரமாகக் கூறப்பட்டாலும், அவையும் உட்கிரகிப்பை தடுக்கும் ஒரு காரணியைக் கொண்டிருக்கின்றன.[28][29] தாவர உணவுகளில் இருக்கும் எந்த பி12 வைட்டமினும் மனிதர்களுக்கு அநேகமாய் கிடைக்கத்தக்கதாய் இல்லை என்பதால் இந்த உணவுகளை பாதுகாப்பான ஆதாரங்களாகக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தாவர உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் தூய சைவ உணவு பழக்கமுடைய மனிதர்கள் அதற்கேற்ற வகையில் தங்கள் உணவுப் பழக்கத்தில் துணைப் பொருட்களை சேர்த்துக் கொள்ள பொதுவாக கவனம் செலுத்த வேண்டும். பி12 மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் உணவுகள் (சில சோயா தயாரிப்புகள் மற்றும் சில காலையுணவு பயறுதானிய வகைகள்) மற்றும் பி12 துணையளிப்புகள் மட்டுமே பி12 வைட்டமினின் நம்பிக்கையான தாவர உணவு வகை ஆதாரங்களாகும்.[30][31] முட்டை மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளும் சைவ உணவர்கள் பால் பொருட்களில் இருந்து போதுமான பி12 வைட்டமினைப் பெறுகிறார்கள். தூய சைவ உணவர்களாக இருந்து இத்தகைய துணையுணவுகள் அல்லது பி12 சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணாதிருந்தால் அவர்களுக்கு பி12 பற்றாக்குறை தென்படலாம். பி12 வலுவூட்டப்பட்ட காலையுணவு பயறுதானியங்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட சோயா தயாரிப்புகளை வலுவூட்டப்பட்ட உணவுகளுக்கு உதாரணமாய்க் கூறலாம். பி12 இயற்கை உணவு ஆதாரங்கள்மீன், மாமிசம், பறவைக் கறி, முட்டைகள், பால் மற்றும் பால் பொருட்கள் உட்பட விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுகளில் வைட்டமின் பி12 காணப்படுகிறது.[32] துணையளிப்புகள்பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 துணைப்பொருளாகச் சேர்க்கப்படுகிறது. அத்துடன் வைட்டமின் மாத்திரைகளின் வடிவிலும் கிடைக்கிறது. ஆரோக்கியமான உடல்களில் திரவமாக, தோல் வழி செலுத்தம் (transdermal patch) மூலமாக, நாசித் துவார விசிறல் வழியாக, அல்லது ஊசி வழியாகவும் வைட்டமின் பி12 துணைப் பொருட்களை செலுத்த முடியும். அத்துடன் இது தனியாகவோ அல்லது பிற துணைப்பொருட்களுடன் சேர்க்கையாகவோ கிடைக்கிறது. சயனோகோபாலமின் கல்லீரலில், முதலில் ஹைட்ராக்ஸோகோபாலமின் அதன்பின் மெத்தில்கோபாலமின் மற்றும் அடினோசில்கோபாலமின், ஆகிய அதன் செயல்பாடுமிக்க வடிவங்களாக மாற்றப்படுகிறது. நாவுக்கடியில் வைத்து இன்னும் நேரடியாக பி12 உறிஞ்சப்படும் வகையில் செய்யும் வழி அவசியமானதென்றோ அல்லது உதவியானதென்றோ நிரூபிக்கப்படவில்லை. கோபாலமின் 500 மைக்ரோகிராம் வாய்வழி சாதாரணமாய் எடுத்துக் கொள்ளப்பட்டதற்கும் நாவுக்கடியில் வைத்து உறிஞ்சச் செய்யப்பட்டதற்கும் சீரம் அளவுகளில் இந்த இரண்டு வகைகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை என்று 2003 ஆய்வு ஒன்று கண்டறிந்தது.[33] . பொதுவாக உயர்ந்த அளவுகளில் (500 மைக்ரோகிராம்கள்) இருந்ததால் தான் விழுங்கப்படுவதை நாவுக்கடி முறை மூலம் மாற்றுவது திறம்பட்டதாய் இருக்கிறதே அன்றி, அது மாத்திரை வைக்கும் இடத்தால் அல்ல. ஊசியும் தோல் ஒட்டுக்களும் ஜீரண உட்கிரகிப்பு சேதமுற்றிருக்கும் சந்தர்ப்பங்களில் சில நேரங்களில் பயன்படலாம். ஆனால் நவீன உயர் திறன் வாய்வழி துணையளிப்புகள் (500 முதல் 1000 மைகி அல்லது இன்னும் அதிகமாக) இருக்கும் இந்தக் காலத்தில் இந்த வழி அவசியப்படுவதில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. பித்தபாண்டுவே முழுக்கவும் வாய்வழி மருந்துகள் மூலமே சிகிச்சையளிக்கப்பட முடியும்.[34][35][36] ஆயினும் நோயாளிக்கு பிறப்பிலேயே சில குறைகள் இருந்தால் நாளங்களுக்குள் தசைகளுக்குள் ஹைட்ரோக்ஸோகோபாலமினை திரவ வடிவத்தில் செலுத்துவது அல்லது தோல் ஒட்டின் மூலம் பி12 செலுத்துவது அவசியப்படும்.[37][38][39][40][41] சில குளிர்பானங்கள் மற்றும் இன்னும் பல சக்தி பானங்களிலும் பி12 வைட்டமினின் சயனோகோபாலமின் வடிவம் சில சமயங்களில் சேர்க்கப்படுகிறது. பரிந்துரைகள்ஒரு வயது வந்தவருக்கான உணவுமூலமான பரிந்துரை உட்செலுத்த அளவு ஒரு நாளைக்கு 2 முதல் 3 மைக்ரோகிராம்கள் ஆக இருக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட உணவுவழி ஏற்புவரம்புக்கு (RDA) மிகாத அளவுகளில் பி12 வைட்டமினை வாய்வழி உட்கொள்வது பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. கருவுற்ற தாய்மார்களுக்கு வைட்டமின் பி12 க்கான உணவுவழி ஏற்பு வரம்பு ஒரு நாளைக்கு 2.6 மைகி ஆகவும், பால் சுரக்கும் காலத்தில் 2.8 மைகி ஆகவும் இருக்கிறது. கருவுற்ற காலத்தில் வைட்டமின் பி12 அதிகமான அளவுகளில் எடுத்துக் கொள்வதில் பாதுகாப்பு விஷயம் குறித்த நம்பகமான தகவல்கள் குறைவாகவே உள்ளன. சைவ உணவுவாசிகள் பி12 கொண்டு வலுவூட்டப்பட்டிருக்கும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தினந்தோறும் அல்லது வாரந்தோறும் பி12 துணையளிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பல அமைப்புகளும் பரிந்துரைக்கின்றன.[30][42][43] சைவ உணவு உண்போருக்கும் தாவர உணவுவாசிகளுக்கும் வலுவூட்டப்பட்ட காலையுணவு பயிறுதானிய வகைகள் பி12 வைட்டமினுக்கான குறிப்பான மதிப்புமிகுந்த ஆதாரமாக இருக்கிறது. இத்துடன், 51 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதானோர் உணவுவழி ஏற்பு வரம்பை பூர்த்தி செய்யும் வகையில் பி12 வலுவூட்டப்பட்ட உணவு அல்லது துணையளிப்புகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் தான் இந்த பற்றாக்குறையை சந்திக்கும் வாய்ப்பினை அதிகம் கொண்டவர்களாவர் [17]. ஒவ்வாமைகள்கோபாலமின், கோபால்ட், அல்லது வேறு எந்த தயாரிப்பு உள்ளடக்க பொருளுக்கும் ஒவ்வாமை கொண்ட மக்களுக்கு கருத்து அடிப்படையில் வைட்டமின் பி12 துணையளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆயினும், ஒரு வைட்டமின் அல்லது சத்துப்பொருளுக்கு நேரடி ஒவ்வாமை என்பது வெகு அபூர்வமானது. எனவே அவ்வாறு அறியப்பட்டால், பிற காரணங்கள் இருக்கிறதா எனக் கண்டறியப்பட வேண்டும். பக்கவிளைவுகள், எதிர்அடையாளங்கள் மற்றும் எச்சரிக்கைகள்
பிற மருத்துவ பயன்பாடுகள்ஹைட்ராக்ஸிகோபாலமின், அல்லது ஹைடோக்ஸோகோபாலமின் - இது வைட்டமின் பி12a என்றும் அழைக்கப்படுகிறது - ஐரோப்பாவில் வைட்டமின் பி12 பற்றாக்குறை மற்றும் சயனைடு விஷமுறிவு சிகிச்சை இரண்டிற்குமே பயன்படுத்தப்படுகிறது.[44] அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) சயனைடு விஷமுறிவுக்கான துல்லிய சிகிச்சைக்கு ஹைட்ரோக்ஸோகோபாலமினைப் பயன்படுத்த ஒப்புதலளித்தது (2006 ஆம் ஆண்டில்). வயதானவர்களுக்கு உயர்ந்த வைட்டமின் பி12 அளவுகள், அலெய்மர்’ஸ் நோய் மற்றும் சேதமுற்ற அறிகை செயல்பாடு இவற்றுடன் தொடர்புடைய மூளை செயல்நலிவு அல்லது சுருக்கத்திற்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கிறது.[45] மனிதர்களில் ஒற்றை பளீர் வெளிச்சத்திற்கு ஆளாகும் நோய்நிலையில் மேம்பாடு காண வைட்டமின் பி12 பயன்படுகிறது. தூக்க தொந்தரவுகள் நேரலாம்.[46] பி12 வைட்டமினின் தேர்வுசெய்த பயன்பாடு தடிப்புத் தோல் அழற்சிக்கு சிறந்த சிகிச்சையாக அறியப்பட்டுள்ளது.[47] வேதிப் பரிமாற்றங்கள்மருந்துகளுடனான வேதிப் பரிமாற்றங்கள்
மருத்துவ தாவரங்கள் மற்றும் உணவுத் துணையளிப்புகளுடனான வேதிப்பரிமாற்றங்கள்
குறிப்புதவிகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia