உறியடி (திரைப்படம்)உறியடி (Uriyadi (English: Breaking pot) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் அரசியல் ,பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[1][2] இதனை விஜய் குமார் என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருந்தார். மேலும் மைம் கோபி மற்றும் சிட்டிசன் சிவக்குமார் ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தனர்.மே 27, 2016 இல் இந்தத் திரைப்படம் வெளியானது. நேர்மறையான வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக இதன் திரைக்கதை[3], இயக்கம்[4], காட்சி அமைப்பு போன்றவை பெரிதும் பாராட்டினைப் பெற்றது[5][6] . தமிழ்த் திரைப்படத்தில் வெளிவந்த அரசியல் ,பரபரப்பூட்டும் திரைப்பட வகைகளில் ஒரு முக்கியமான படைப்பாக இது கருந்தப்படட்து.[6][7][8] இதன் தொடர்ச்சியானது உறியடி 2 எனும் பெயரில் ஏப்ரல் 5, 2019 இல் வெளியானது. தயாரிப்பு2011 ஆம் ஆண்டில் விஜய் குமார் இந்தத் திரைப்படத்திற்கான கதையினை எழுதினார். பின் அவர் அமெரிக்கா சென்றார். முதலில் விடியும் வரை விம்ம்மீன்களாவோம் எனத் தலைப்பிடப்பட்டது. ஒரு வருடத்தில் இதற்கான கதையினை எழுதி முடித்து விட்டார். பின் 2500 காட்சிகளை கட்சிப் பலகையில் தயாரித்து வைத்துக் கொண்டார். தனது முதல் படம் என்பதாலனைத்தும் திட்டமிட்டபடி செல்ல வேண்டும் எனத் தீர்மானித்து அதன் படி துவக்கப் பணிகளைச் செய்தார். அனைத்துத் துவக்கப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இவர் 2013 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியா திரும்பி சாவனிர் புரடக்சன்ஸ் எனும் சொந்த பட நிறுவனத்தைத் துவக்கினார். மேலும் கதாப்பாத்திரங்களில் திரைத் துறைக்கு வருவதற்கு நீண்ட நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். பின் படப்பிடிப்பிற்கு முன்பாக மூன்று மாதம் நடிப்புப் பட்டறையினை நடத்தினார்.[9][10] சில தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களைத் தவிர அனைவருமே புது முகங்களாக இருந்தனர். சூலை 2013 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு அதே ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு முடிந்தது. படப்பை மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் முடிந்தது. இந்தக் கதை 90 களில் நடப்பதனைப் போல வடிவமைக்கப்பட்டதனால் தற்போது இருக்கும் தேவையற்ற பின்புற காட்சிகளை நீக்குவதே பெரும் சிக்கலாக இருந்ததாக இவர் தெரிவிதார். பெரும்பானமையான காட்சிகள் நெடுஞ்சாலைகளில் நடப்பதனைப் போலவே அமைக்கப்பட்டிருக்கும்.[11] வெளியீடுபடப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் ஆகஸ்ட் 2014 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. பின் சான்று பெறுவதற்காக சென்சார் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படட்து. பின் சில காட்சிகளை நீக்க சென்சார் குழு பரிந்துரை செய்தது. அதனை நீக்க படக் குழு ஒப்புக்கொண்ட பின் படத்திற்கு ஏ சான்று கொடுக்கப்பட்டது. அதன்பிறகு படத்தினை வெளியிட முயற்சி மேற்கொண்டார்.[12] இந்தத் திரைப்படத்தினை தனது படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக வெளியிட தீர்மானித்த இயக்குநர் நலன் குமாரசாமி பின் துணைத் தயாரிப்பாளராக ஆனார்.[12][13] மே 27, 2016 ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்தது. காட்சிகள் நீக்கப்படாத முழுப்படத்தினையும் வெளியிடுமாறு பல ரசிகர்கள் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அவை சென்னைப் பெரு வெள்ளத்தில் அவை அழிந்து போனதாகவும் இவர் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்[14][15].[16] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia