உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவில்
தான்தோன்றீஸ்வரர் கோவில் (Thanthodreeswarar Temple, Woraiyur) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி நகரிலுள்ள உறையூர் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. கி.பி 885 ஆம் ஆண்டு சோழா் கால கல்வெட்டுகள் இங்கு உள்ளன. தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆறு கால பூசைகள் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு மூன்று திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கோயில் பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது. சொல்லியல் மற்றும் விளக்கம்தானே தோன்றியவர் என்பது பொருள்கொண்ட ”தான்தோன்றீ” என்ற சொல்லில் இருந்து, இக்கோயிலின் முக்கியக் கடவுளான சிவனின் பெயரான ”தான்தோன்றீஸ்வரர்” என்பது தோன்றியது. இந்து தொன்மங்களின்படி, சோழ அரசு காந்திமதி சிவனின் தீவிர பக்தை ஆவார். அவர் கற்பவதியாக இருக்கும் போது மலைக்கோட்டை தாயுமானவரை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்காக புறப்பட்டு செல்கையில் அவர் உடல் சோர்வுற்றது. இறைவனை காண முடியாமல் தன்னுடைய உடல் வாட்டுகிறதே என்றெண்ணி கண்ணீர் விட்டு வேண்டினார். அவருடைய பக்தியில் மனமிறங்கி சிவபெருமான் இராணியின் பக்தியினால் மகிழ்ச்சி அடைந்து, லிங்க வடிவத்தில் இவ்விடத்தில் அவளுக்கு காட்சியளித்து சுகப்பிரசவத்திற்கு ஆசிா்வதித்ததாக நம்பப்படுகிறது.[1] கட்டிடக்கலை![]() இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. இங்கு கி.பி 885 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழா் கால கல்வெட்டுகள் உள்ளன. தற்போது இந்தக் கோயில் பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது. தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஒரு வெளிப்பிரகாரமும் இரண்டு நிலை விமானமும் உள்ளது. கோயிலின் மையத்தில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் (சிவன்) கருங்கல்லால் ஆன லிங்க வடிவத்தில் கிழக்கு முகமாக காட்சியளிக்கிறாா். முருகன், நந்தி மற்றும் நவக்கிரகம் ஆகியவை மண்டபத்தில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பிற சிவன் கோயில்களில் உள்ளது போல தான்தோன்றீஸ்வரர் சன்னதிக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. தான்தோன்றீஸ்வரர் துணைவியான குங்குமவள்ளி அவரது இரண்டு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தியவாறு வடக்கு முகமாக காட்சியளிக்கிறாா். கோயில் கருங்கல் சுவர்களால் சூழப்பட்டுள்ளது.[1] வழிபாடு![]() நாள்தோறும் மற்றும் திருவிழாக்காலங்களிலும் வழிபாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற சிவன் கோயில்களைப் போலவே, குருக்கள் சைவச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிராமண உட்பிாிவைச் சார்ந்தவர்கள். ஒரு நாளைக்கு ஆறு முறை வழிபாடுகள் செய்யப்படுகிறது; உஷத்காலம்: காலை 5.30 மணி, காலசந்தி: காலை 8:00 மணி, உச்சிக்காலம்: காலை 10 மணி, சாயரட்சை: மாலை 5 மணி, இரண்டாம் காலம்: இரவு 7:00 மணி. அா்த்த சாமம்: இரவு 8:00 மணி. தான்தோன்றீஸ்வரர் மற்றும் அம்மன் இருவருக்கும் அபிடேகம், அலங்காரம், நெய்வேத்தியம், தீப ஆராதனை ஆகியவை ஒவ்வொரு பூசையிலும் நடைபெறுகின்றன. சன்னதி முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்க வேத முறைப்படி குருக்கள் வேதங்கள் மூலம் வழிபட்டனா். சோமவாரம் மற்றும் சுக்ரவாரம் போன்ற வாராந்திர சடங்குகளும், பிரதோசம், அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, சதுர்த்தி போன்ற மாத சடங்குகளும் நடைபெறுகின்றன.[2] அம்மனுக்கு வளைகாப்புஇத்தளத்தின் அம்மனான குங்குமவல்லி தாயாருக்கு ஆண்டுக்கு இரு முறை வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் தை மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மூன்று நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. முதல் நாள் - கர்ப்பிணிகள் அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களை காணிக்கையாக தருவர். இரண்டாம் நாள் - திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வளையல்களை காணிக்கையாக தருவர். மூன்றாம் நாள் - திருமண தடை, ஜாதக தோசம் உள்ளவர்கள் வளையல்களை காணிக்கையாக தருவர். இந்த மூன்று நாட்களிலும் பூசைக்குப் பின்னர் காணிக்கையாக கொடுத்த பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக தரப்படும். களத்ரதோஷம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், திருமண தடை நீங்கவும், சந்தானபாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் உண்டாகவும், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்காக வளைகாப்பில் பெண்கள் கலந்துகொள்கின்றனர்.[3] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia