உலகத் திருக்குறள் மாநாடு

உலகத் திருக்குறள் மாநாடு திருக்குறளை பல்வேறு நோக்குகளில் ஆய்வுசெய்வதற்காகக் கூட்டப்படும் மாநாடு ஆகும்.

மாநாடுகள்

இதுவரை பின்வரும் இடங்களில் இம்மாநாடு நடைபெற்று உள்ளது[1]

  • முதலாவது மாநாடு : கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா.
  • இரண்டாது மாநாடு : இங்கிலாந்து
  • மூன்றாவது மாநாடு : ஆஸ்திரேலியா
  • நான்காவது மாநாடு : தில்லி

ஐந்தாவது மாநாடு

ஐந்தாவது மாநாடு 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டின் பொதுத்தலைப்பு "திருக்குறள் உலகப் பொதுநூல்" என்பது ஆகும். அம்மாநாட்டின் கருத்தரங்கிற்கு "அகம்" எனவும் கலையரங்கிற்கு "புறம்" எனவும் பெயரிடப்பட்டு இருக்கிறது. இம்மாநாட்டை தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள சிகாகோ தமிழ்ச் சங்கம், அமெரிக்கா உலகத்தமிழ் மாமன்றம் ஆகியன இணைந்து ஒருங்கிணைக்கின்றன.

ஆறாவது மாநாடு

ஆசியாக் கண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் நடைபெறும்

ஏழாவது மாநாடு

ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்சு நாட்டில் நடைபெறும்.

சான்றடைவு

  1. தினமணி, 2023-01-14, சனிக்கிழமை, மதுரைப்பதிப்பு, பக்.5
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya