உலகப் பறவைகளின் உசாநூல்

உலகப் பறவைகளின் உசாநூல் (உ.ப.உ) வகைப்பாட்டுக் கிளைகளைக் காட்டும் பக்கம்.
உலகப் பறவைகளின் உசாநூலில் (உ.ப.உ) பறவை வரிசைகளைப் பற்றிய பக்கம்
உலகப் பறவைகளின் உசாநூலில் (உ.ப.உ) பறவை வகுப்பில் உள்ள வரிசையில் உள்ள இனத்தைப் பற்றிய விரிப்பு

உலகப் பறவைகளின் தரவேடு (அ) உசாநூல் (Handbook of Birds of the World ) என்பது பல தொகுதிகளாக வெளியாகி இருக்கும் உலகின் பறவைகளைப் பற்றிய சான்றுகோளாக கொள்ளத்தக்க பல்தொகுதி உசாநூல்[1] இப்பல்லடுக்குத் தொகுதி லின்க்ஸ் எடிசியோன்ஸ் (Lynx Edicions ) என்னும் எசுப்பானிய (Spanish) பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்றது. இப்பல்லடுக்குத் தொகுதிகளின் சிறப்பு என்னவென்றால் முதன்முதலாக உலகில் உள்ள எல்லாப் பறவைகளைப் பற்றியும் விரிவான கட்டுரைகள் கொண்டதாக இருப்பதாகும். இதுகாறும் 12 தொகுதிகள் வெளி வந்துள்ளன. இப்பல்லடுக்குத் தொகுதி மொத்தம் 16 தொகுதிகளாக 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு முற்று பெற இருக்கின்றது. அப்படி முற்று பெறும் நிலையில், இதுவே உயிரின வகைப்பாட்டில் விலங்குகள் என்னும் அரசில் உள்ள வகுப்பு என்னும் வகைப்பாட்டுப் பிரிவில் உள்ள முழு உயிரினங்களையும் பற்றி, விரிவாக எழுதிய, முதற்பெரும் பல்லடுக்குத் தொகுதி நூலாக இருக்கும்.

இவ் உசாநூலில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், முதலில் பறவை என்னும் வகுப்பில் உள்ள ஒவ்வொரு வரிசை, குடும்பம் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் எழுதி, பின்னர் அக்குடும்பத்தில் உள்ள பேரினங்கள், இனங்கள் பற்றியும், அவற்றின் வாழ்முறை, வாழிடம், பரவல் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இப் பல்லடுக்குத் தொகுதிகள் 40 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் கூடுதலான புகழ்பெற்ற துறையறிஞர்களின் உதவியாலும், ஏறத்தாழ 35 சிறந்த ஓவியர்களின் பங்களிப்பாலும் உருவாகி வருகின்றது. இது மட்டுமல்லாமல் 834 ஒளிப்படக் கலைஞர்களும் உதவுகிறார்கள்.

இந்நூல் வரிசையின் தொகுப்பாசிரியர் ஹோசெ டெல் ஓயோ (Josep del Hoyo), ஆண்ட்ரூ எலியட் (Andrew Elliott) ஹோர்டி சார்கட்டால்) (Jordi Sargatal) மற்றும் டேவிட் ஏ கிறிஸ்டி (David A Christie). பறவைகளைப் பற்றிய விக்கிப்பீடியா திட்டத்திற்கு ( WikiProject Birds.)[2]. இந்த உலகப் பறவைகளின் உசாநூல் ஒரு தரமான சான்றுநூலாகப் பயன்படுகின்றது

இப் பல்லடுக்குத் தொகுதியின் முதல் தொகுதி 1992 ல் வெளிவந்த உடனேயே பல பரிசுகளைப் பெற்றது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. உசாநூல் என்பது ஒன்றைப் பற்றி அறிய சான்றாகக் கொள்ளப்படும் அறிவுத்துணைநூல். உசாவுதல் = கலந்து ஆலோசித்தல்
  2. http://en.wikipedia.org/wiki/WP:BIRD
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya