உலகம் (திரைப்படம்)

உலகம்
இயக்கம்எல். எஸ். ராமச்சந்திரன்
தயாரிப்புமூனாஸ்
சொசைட்டி பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை சி. பி. மூனாஸ்
இசைஎம். எஸ். ஞானமணி
நடிப்புகுமரேசன்
நாகைய்யா
பி. எஸ். வீரப்பா
எம். வி. ராஜம்மா
பி. கே. சரஸ்வதி
எம். எஸ். திரௌபதி
லட்சுமிபிரபா
டி. ஈ. வரதன்
வெளியீடுசூலை 10, 1953
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உலகம் (Ulagam) என்பது 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். இராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குமரேசன், நாகைய்யா, எம். வி. ராஜம்மா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

கதை

கதை மூன்று தலைமுறைகளைக் கொண்டதாக உள்ளது. சபாபதி ஒரு சராசரி வாழ்கை வாழும் மனிதர். அவர் அழகியான மீனாவை மணக்கிறார். பின்னர் சபாபதி நல்வாய்ப்பால் செல்வத்தையும் அந்தஸ்தையும் அடைகிறார். இணையருக்கு சங்கர், மோகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சங்கர் தன் பெற்றோரின் விருப்பப்படி பத்மாவை மணக்கிறார். மோகன் கல்லூரியில் படிக்கிறார். உடல் பயிலும் மாணவியான லலிதா மோகனை நேசிக்கிறாள். ஆனால் மோகன் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை. லலிதா வழக்கறிஞர் படிப்புக்காக வெளிநாடு செல்கிறாள். மோகனின் உறவினரான லீலா தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து மருத்துவம் படித்து வருகிறாள். மோகன் அவளை நேசிக்கிறார். லீலா முதலில் தயங்கினாலும், பின்னர் அவரது காதலை ஏற்றுக்கொள்கிறாள். திருமணத்திற்கு முன்பே அவள் கர்ப்பமடைகிறாள். லலிதா வழக்கறிஞராகி வெளிநாட்டிலிருந்து திரும்புகிறாள். மோகனுக்கும் லீலாவுக்கும் இடையிலான காதலை அவள் அறிகிறாள். அவர்களைப் பிரித்து மோகனை தன் வலையில் வீழ்த்த அவள் பல வழிகளில் முயல்பிறாள். இருப்பினும், அவளின் எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைந்து இறுதியில் ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறாள். அதிர்ச்சியால் லீலாவின் கர்ப்பம் கலைந்துவிடுகிறது. மோகனும் லீலாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். மோகன் உயர் படிப்புக்காக அமெரிக்கா செல்கிறார். இதற்கிடையில், சங்கருக்கும் பத்மாவுக்கும் சந்தர், ஸ்வர்ணா என்னும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். சந்தருக்கு 20 வயதும், ஸ்வர்ணாவுக்கு 16 வயதும் இருக்கும்போது பத்மா இறந்துவிடுகிறாள். சங்கர் ஏழைப் பெண்ணான பிரேமாவை இரண்டாவதாக மணக்க விரும்புகிறார். ஆனால் சந்தர் தன் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை எதிர்க்கிறார். பிரேமா கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். தன் தந்தை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண் அவள்தான் என்பதை அறியாமல், சந்தர் அவளை மீட்டு, லீலாவிடம் சிகிச்சைக்காக அழைத்து வருகிறார். அவள் இப்போது ஒரு மருத்துவராகிவிட்டாள். சந்தரின் இரத்தம் பிரேமாவுக்கு ஏற்றப்படுகிறது. சந்தர் பிரேமாவை காதலிக்கிறார். காவல் ஆய்வாளரான கோவிந்தசாமி விசாரணைக்காக வருகையில் பிரேமாவின் அழகில் கவரப்படுகிறார். ஆனால் பிரேமா அவரை ஏற்க மறுக்கிறாள். இதனையடுத்து பிரேமா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்கிறார். சந்தர் தனது தந்தையுடன் வசிக்க விரும்பவில்லை. அவர் லீலாவுடன் தங்குகிறார். மோகன் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், கோவிந்தசாமி அவரது மனதில் விஷத்தைக் கலக்கும் விதமாக, சந்தர் மற்றும் லீலாவைப் பற்றிய பொய்யான கதைகளை அவிழ்த்து விடுகிறார். சந்தர் இப்போது லீலாவின் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார். அவர் பிரேமாவின் வீட்டிற்குச் சென்று, தன் தந்தை திருமணம் செய்யவிருந்தவர் அவள்தான் என்பதை அறிகிறார். அவளின் நிலைக்கு வருந்துகிறார். பிரேமாவை தற்கொலைக்கு தூண்டியவர் சந்தர் என்று காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி குற்றம் சாட்டுகிறார். கோவிந்தசாமி சந்தரை கைது செய்து சிறையில் அடைக்கிறார். இந்தச் சிக்கல்கள் எவ்வாறு தீருகின்றன என்பதே கதையாகும்.[2]

நடிப்பு

இப்பட்டியலில் உள்ள பெயர்கள் தி இந்துவில் வெளியான பட்டியலைக் கொண்டும்,[1] பாட்டுப் புத்தகத்தைக் கொண்டும் உருவாக்கபட்டது.[2]

நடிகர்கள்
நாட்டுப்புற நடனம்
பரதநாட்டியம்

நடிகர்கள் (தொடர்ச்சி)
  • தொழிலாளியாக டி. பி. பொன்னுசாமி பிள்ளை
  • கடை உரிமையாளராக ஜி. வி. சர்மா
  • பிச்சைக்காரனாக நந்தாராம்
  • காவல் ஆய்வாளராக எம். எஸ். கருப்பையா
  • ஜெயராமாக ஜெயராம்
  • மனோகரனாக குஞ்சிதபாதம் பிள்ளை
  • சேதுவாக டி. வி. சேதுராமன்
  • கல்யாணமாக வி. டி. கல்யாணம்
  • இளம் சந்தராக ராஜு
  • வெங்கட்டாக எஸ். வி. சண்முகம்
  • கிருஷ்ணனாக பொட்டை கிருஷ்ணமூர்த்தி
  • முகமதுவாக எஸ். பீர் முகமது
மற்போர்

நடிகைகள்
  • மீனாவாக எம். வி. ராஜம்மா
  • பத்மாவாக பி. கே. சரஸ்வதி
  • லலிதாவாக எம். எஸ். திரௌபதி
  • லீலாவாக டி. ஆர். ரஜனி
  • ஸ்வர்ணாவாக எம். லட்சுமிபிரபா
  • பிரேமாவாக என். ஆர். சகுந்தலா
  • சரஸ்வதியாக சி. கே. சரஸ்வதி
  • லட்சுமியாக கே. எஸ். அங்கமுத்து
  • ரங்கநாயகியாக கே. அரங்கநாயகி
  • சாரதாவாக பி. சாரதாம்பாள்
  • துளசியாக என். திலகம்
  • கமலா அம்மாளாக எஸ். ஜெயலட்சுமி அம்மாள்
  • சீதாவாக ஜி. சரோஜா
  • இளம் ஸ்வர்ணாவாக பேபி லட்சுமி

குழு நடனம்
  • பி. சாந்தகுமாரி, டி. சரோஜா, என். டி. ராணி, ஜி. சுந்தரி, பிரதிபா, வி. சரோஜா, டி. எஸ். கமலா, டி. எஸ். ஜெயந்தி, எம். எம். லீலா, என். கிருஷ்ணவேணி, கே. ராஜேஸ்வரி, வி. சரஸ்வதி, மீரா, கே. சரோஜா, சக்கு பாய், பவானி.

தயாரிப்பு

இந்தப் படத்தை இந்தியாவில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த எம். எச். எம். மூனாஸ் தயாரித்தார். இந்தப் படம் பிரபஞ்சம் என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. படத்தில் ஒரு மல்யுத்தப் போட்டியும் இடம்பெற்றிருந்தது. தயாரிப்பாளர் நேயர்களுக்கு ஒரு போட்டியை நடத்தினார், அதற்காக மொத்தம் ரூ 100,000 பரிசுத் தொகை என அறிவிக்கபட்டது. படத்தின் நுழைவுச் சீட்டில் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன, அதற்கான பதில்கள் முத்திரையிடப்பட்ட உறையில் வைக்கப்பட்டு "ஈஸ்டர்ன் பேங்க் ஆஃப் இந்தியா"வில் பாதுகாத்து வைக்கபட்டதாக அறிவிக்கப்பட்டது. சரியான விடையை எழுதுபவருக்கு முதல் பரிசு ரூ 25,000, இரண்டாம் பரிசு 15,000, மூன்றாம் பரிசு 10,000 பரிசு என அறிவிக்கபட்டது. அந்த நாட்களில் இது மிகப் பெரிய தொகையாகும். மொத்தம் 309 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் எல்லோரும் பங்கேற்கலாம் என்றாலும், ஒவ்வொரு நுழைவுச் சீட்டுடனும் நுழைவுச் சீட்டின் எதிர்த் தாளையும் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.[1] இருப்பினும், போட்டியின் முடிவுகள் குறித்து எந்தப் பதிவும் இல்லை.[3] படத்தின் 100 பிரதிகள் ஒரே நேரத்தில் தயாரிக்கபட்டன.[4] நடன அமைப்பை கே. கே. சின்ஹா, கே. மாதவன், ஜெயசங்கர் ஆகியோர் மேற்கோண்டனர்.

பாடல்கள்

இப்படத்திற்கு எம். எஸ். ஞானமணி இசையமைத்தார். பாடல் வரிகளை எம். எச். எம். மூனாஸ், கவி குஞ்சரம், கே. பி. காமட்சிசுந்தரம், பி. ஹனுமந்த ராவ், குயிலன் (அறிமுகம்), தமிழ் ஒளி ஆகியோர் எழுதினர்.[3]

பாடல் பாடகர்/கள் வரிகள் நீளம் (நி:நொ)
"மனம்போல் உல்லாசமாய்"
"அழகனா பூமி தனிலே தொழிலாளியே" வி. நாகய்யா
"காதலினால் உலகமே இன்பமதே" என். எல். கணசரஸ்வதி, திருச்சி லோகநாதன் குயிலன்
"என் ஜீவனிலே" எம். எல். வசந்தகுமாரி 02:09
"புவி வாழ்வு இதோ"
"அன்னே அனே யெனும்"
"இசைபாடி நானுமே" ஏ. எம். ராஜா, பி. லீலா 03:25
"இந்தத் தள்ளாடும் கிழத்தாடி தாத்தாவுக்கும்"
"தெக்கத்திக் கள்ளனடா" பி. ஏ. பெரியநாயகி
"நம்ம வேலைக்குப் பழுதில்லை"
"கலையே உயிர்த்துணையே" என். எல். கணசரஸ்வதி கவி குஞ்சரம் 06:05
"நல்ல பெண்பிள்ளே கிட்டே"
"துயருற்றே எனை நீ ஈன்றாயே" என். சத்தியம்
"உன் காதல் என் அன்பெலாம்" ஏ. எம். ராஜா, எம். எல். வசந்தகுமாரி 03:10
"என் பிரேம ராணி காதலினாலே" ஏ. எம். ராஜா, எம். எஸ். ராஜேஸ்வரி 02:23

வெளியீடும் வரவேற்பும்

உலகம் 1953 சூலை 10 அன்று வெளியானது.[4][5] இந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. இருப்பினும், வரலாற்றாசிரியர் ராண்டார் கை, "அற்புதமான நட்சத்திர நடிகர்கள், மூனாஸ் வெளியிட்ட பரிசுத் திட்டங்கள் மற்றும் விளம்பர உத்திக்காக இந்தப் படம் நினைவுகூரப்படுகிறது, இதை அக்காலத்தவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!" என்றார்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Guy, Randor (14 July 2012). "Ulagam 1953". தி இந்து. Archived from the original on 21 April 2017. Retrieved 21 April 2017.
  2. 2.0 2.1 உலகம் (PDF) (பாட்டுப் புத்தகம்). Society Pictures. 1953. Retrieved 30 November 2022 – via இணைய ஆவணகம்.
  3. 3.0 3.1 Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 49.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 "1953 – உலகம் – சொசைட்டி பிக்சர்ஸ் – பிரபஞ்சம் (தெ)". Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 21 April 2017. Retrieved 21 April 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "The World". The Indian Express: pp. 3. 10 July 1953. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19530710&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya