உலகில் அழிந்து போன நகரங்கள்
![]() அழிந்து போன நகரம் (Lost city) என்பது ஒரு பகுதியில் வீழ்ச்சியடைந்தது மற்றும் முற்றிலும் குடியேற்றமில்லாமல் ஆனது ஆகும். பல அழிந்து போன நகரங்களின் இடங்கள் மறைந்து போய் விட்டன, சில நகரங்களின் இடிபாடுகள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நகரங்கள் அழிந்த விதம்அழிந்து போன நகரங்கள் ஆழிப்பேரலை, பூகம்பம், எரிமலைச் சீற்றங்கள், புயற்காற்று,நெருப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் அழிந்து மண்ணுக்குள்ளோ அல்லது கடலுக்குள்ளோ புதைந்து போயுள்ளன.சில நகரங்கள் போர்,நோய் போன்ற காரணிகளாலும் அழிந்து போயின. மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்கள்![]() தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் மற்றும் புவியியல் வல்லுனர்களால் பல்வேறு புதிய உத்திகள் மூலம் அழிந்து போன நகரங்கள் கண்டறியப்படுவருகிரது. மச்சு பிச்சு (Machu Picchu) என்பது இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.[1]. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகருக்கு வடமேற்கே காணப்படுகிறது. மச்சு பிச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது.[2]. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் அழிந்தது.[2][3]. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு.
ஒரு சேர்ந்த தாக்கத்தினால் அழிந்து போனது.அன்றைய காலத்தில் இந்நகரம் ஒரு கலாச்சார வழிபாட்டுத் தலமாக இருந்தது.[4] அழிந்து போன புராதன நகரங்கள்அழிந்து போன நகரங்களில் ஒரு சில நகரங்கள் புராதன நகரங்கள் ஆகும்.
கண்டம் வாரியாக அழிந்து போன நகரங்கள்ஆப்பிரிக்காஎகிப்து
ஆசியாதெற்காசியாஇந்தியா
ஐரோப்பாகிரீசு
இத்தாலி
வட அமெரிக்காதென் அமெரிக்காமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia