உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்
உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (World Anti-Doping Agency) ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்க வேண்டியதை கடமையாக கொண்டு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. இவ்வமைப்பு 1999 நவம்பர் 10 இல் சுவிட்சர்லாந்து, லோசான் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.[1] 2002 முதல் இவ்வமைப்பின் தலைமையகம் கனடாவின் மொண்ட்ரியால் நகரத்தில் இயங்கி வருகின்றது. லோசான் அலுவலகம் ஐரோப்பாவின் பிராந்திய அலுவலகமாக இயங்கி வருகிறது. இவற்றை விட ஆசியா/ஓசியானியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.[2] 2016 சனவரி 1-ம் தேதி மெல்டோனியத்தை தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் சேர்த்தது. உருசிய டென்னிஸ் வீராங்கனை மரியா சரப்போவா விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெல்டோனியத்தை எடுத்துக் கொண்டது சோதனையில் உறுதியானதையடுத்து தற்காலிகமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia